Tuesday, February 17, 2009

மீண்டும் ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சியா?

சி.என்.என் -ஐபிஎன் தொலைக்காட்சி 28 மாநிலங்களில் 1280 இடங்களில் 20, 000
வாக்காளர்களிடம், வளர்ச்சியடைந்துவரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம் என்ற அமைப்பினருடன் இணைந்து வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சில கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். அந்த முடிவுகளில் சில:

தேர்தலின் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய பிரசினை:

பொருளாதாரம்தான் என்போர் : 32%
பயங்கரவாதம் & தேசப்பாதுகாப்பு: 21%
அதிகரித்து வரும் வேலையின்மை: 18%
இடஒதுக்கீடு : 5%
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிப்பவர்கள்: 2%
இந்துத்வா பிரசினை முக்கியம் என நினைப்பவர்கள்: 1%

ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சி

திருப்தி அளிக்கிறது : 66%
அதிருப்தி தருகிறது : 21%

ஐக்கிய முற்போக்கு அணிக்கு மீண்டும் வாய்ப்பு
அளிப்போம் என்போர்:48%
அளிக்க மாட்டோம் என்போர்: 30%

நகர்ப்புற பட்டதாரி இளைஞர்களில் 32 சதவீதம் பேரும், கிராமப்புற இளைஞர்களில் 25 சதவீதம் பேரும் வேலையில்லா திண்டாட்டத்தைத்தான் மிக
முக்கியமான பிரசினையாகக் கருதுகின்றனர்.

இந்தக் கணிப்பின் மாநில வாரியான முடிவுகளை பிப்ரவரி 16லிருந்து 21 வரை
இரவு 10 மணிக்கு CNN-IBN தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.

மேலும் விவரங்களுக்கு:
http://ibnlive.in.com/

3 comments:

குப்பன்.யாஹூ said...

பரவலாக பார்க்கையில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணியே ஆட்சி புடிக்கும் போல, பீ ஜெ பி நூறு இடங்கில் வெற்றி பெரும் போல, அதிமுக கூட்டணி பத்து அல்லது பதினநிது இடம் கிடைக்கும் என எண்ணுகிறேன்

குப்பன்_யாஹூ

சிவாஜி த பாஸ் said...

தமிழ்நாட்டுல காங்கிரஸ் கூட்டணிக்கு ஒரு இடத்தில் வெற்றி என்றாலே, தமிழர்கள் எல்லாம் மலம் தின்று வளரந்த கூட்டம் என்றே அரத்தம்!

Narain Rajagopalan said...

மாலன்,

இதைதான் என்னுடைய மீண்டும் காங்கிரஸ் ஆட்சி வருமா? என்கிற பத்தியில் எழுதியிருப்பேன். பெரிய பிரச்சனைகள் மக்களை பாதிக்காதவரையில், பிரச்சனைகளில்லை என்று தோன்றுகிறது. ஆனாலும், keeping my fingers crossed :)