Friday, February 13, 2009

இது எப்படி இருக்கு?: "பாஜக-காங். சேர்ந்து அரசமைக்க வேண்டும் ! "

வரவிருக்கும் தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சியும் அதன் பிரதான எதிரியான காங்கிரசும் இணைந்து அரசமைக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் கே.என்.கோவிந்தாசார்யா. அகமதாபாத்தில் பிப்ரவரி 11ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்

தேர்தலுக்குப் பின் உறுதியற்ற அரசியல் சூழ்நிலை நிலவும், அந்தப் பிரசினையை மூன்றாம் அணி மேலும் சிக்கலாக்கும். இவைதான் மிகவும் கவலைக்குரியவை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"கடந்த முறை காங்கிரஸ் பாஜக இரண்டும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் 282 இடங்களைப் பெற்றன.இந்தமுறை அவை 252 இடங்களைப் பெறலாம்" என்கிறார் இந்த முன்னாள் பாஜக பிரமுகர்.முக்கியப் பிரசினைகளை முன்னிறுத்தப்படாமல் இந்தத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் உள்ளூர் அல்லது மாநில அளவிலான பிரசினைகளே வாக்களிப்பில் ஆதிக்கம் செலுத்தும்

"பாஜக என்பதை ஒரு 'காவி காங்கிரஸ்' ஆகத்தான் பார்க்கிறேன். வரும் நாட்களில் அதிகமான ஊழலும். உறுதியற்ற தனமையும் கொண்ட அரசுகள் அதிகம் உருவாகும் எனவும் எதிர்பார்க்கிறேன்.எனவே காங்கிரசும் பாஜகவும் சேர்ந்து ஆட்சியமைக்குமானால் அது நாட்டிற்கு நல்லது" என்றார் கோவிந்தாச்சார்யா.

"தற்கால அரசியல் மாற்றத்தைச் சந்திக்கும் ஒரு பருவத்தில் இருக்கிறது. நம் முன் உள்ள மாதிரிகளில் ஏற்பட்டுள்ள மாற்ற்றங்களை அடுத்துப் பல மாறுதல்களை எதிர்ப்பார்க்கலாம். 100 ஆண்டுகால அரசியல் சிந்தனைகள் விலகி வழி விடும். வளர்ச்சி, முன்னேற்றம், இதுதான் முக்கியமான பிரசினையாகக் கருதப்படும்". என்றார் அவர்.

அத்வானி, நரேந்திர மோடி இருவரில் யார் சிறந்த பிரதமராக இருக்கக் கூடியவர் என்ற கேள்விக்கு 'அத்வானி தயக்கம் நிறைந்த ஒரு போராளி ' எனப் பதிலளித்த கோவிந்தாச்சார்யா, அத்வானிக்கு வயதாவதால் அவர் அமைதியாக ஓய்வு பெற விரும்புகிறார் ஆனால் அவர் பாஜகவை வழிநடத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என்றார். அத்வானி இப்போது 'ஒரு ஸ்கூட்டர் ஸ்டெப்னி ' போல உணர்கிறார். அதனால்தான் ஸ்கூட்டர் ஓடாமல் நின்றுவிட்டது என்றார்

நன்றி: இந்தோ ஆசியன் நியூஸ் சர்வீஸ் (Indo-Asian News Service)

1 comment:

குப்பன்.யாஹூ said...

காங்கிரம் பீ ஜெ பி இப்பொழுதே இணைந்தால், தேர்தல் செலவு மிச்சம், மக்களின் வரி பணம் மிச்சம்,.

தேர்தலுக்கு செலவழிக்க இருக்கும் பணத்தை, சென்னை கன்யாகுமரி நான்கு வழி சாலை திட்டதிற்கு செலவு செய்யலாம்.

பதிவு உலக சர்வர் செலவு மிச்சம்,

குப்பன்_யாஹூ