Saturday, February 21, 2009

அதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி

தில்லியிலிருந்து ரேணு மிட்டல்

அரசியல் என்பது சாத்தியமாவதைச் செய்யும் கலை.அரசியலில் நிரந்த பகைவர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. தெற்கே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் எதையாவது சுட்டிக் காட்டுகின்றன என்றால் அது அரசியல் கூட்டணிகளில் எத்தகைய பிரிவும் கூட்டும் சாத்தியங்கள்தான்-அதுவும் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்- என்பதைத்தான்.

ஜெயலலிதாவின் அதிமுகவோடு உறவைப் புதுப்பித்துக் கொள்ள சோனியா விரும்புகிறார் என கூறப்படுகிறது

ஜெயலலிதா காங்கிரசிற்கு பகிரங்கமாக விடுத்த அழைப்பு, ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்தான் என்று கட்சியில் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிகிறது.

இரண்டு கட்சிகளுக்குமிடையே கூட்டணி என்ற யோசனையுடன் ஜெயலலிதாவை சந்திக்க நம்பிக்கைக்குரிய ஒருவரை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஜெயலலிதா அந்த யோசனையை வரவேற்றதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரசுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதில் தனக்கு ஏதும் தயக்கமில்லை என பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் முன் வந்தார்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துள்ளது. திமுகவுடன் கூட்டைத் தொடர்வது தற்கொலைக்குச் சமம் என்றும், குறிப்பாக கருணாநிதியின் உடல் நலம் பலவீனமடைந்து வரும் நிலையில் அவரால் தேர்தல் பிரசாரத்திற்கு வர இயலாத சூழ்நிலை இருப்பதையும் எடுத்துச் சொல்லி சிதம்பரம் சோனியாவை இந்த யோச்னைக்கு சம்மதிக்க வைத்து விட்டார் எனச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து மூப்பனார் வெளியேறி, தனிக்கட்சி கண்ட போது மூப்பனாருடன் சிதம்பரமும் வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றூ நிலைமை மாறிவிட்டது.

குலாம் நபி ஆசாத்தை தமிழ்நாடு காங்கிரசின் விவகாரங்களைக் கவனிக்கும் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது அதிமுகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவிரும்புவதன் இன்னொரு அடையாளமாகக் கொள்ளலாம். அதிமுகவுடன் அவருக்கு நல்ல உறவு உண்டு. நாடாளுமன்றமென்றால் மூன்றிலொரு பங்கு இடம் உங்களுக்கு, இரண்டில் மூன்று பங்கு இடம் எங்களுக்கு; அதே போல சட்டமன்றம் என்றால் மூன்றிலொரு பங்கு இடம் எங்களுக்கு இரண்டில் மூன்று பங்கு இடம் உங்களுக்கு; என்ற பார்முலாவை உருவாக்கி அதை எம்.ஜி.ஆரை ஏற்கச் செய்தவர் அவர்.

ஜெயலலிதாவின் பேச்சு பற்றி கருத்துக்கூறுமாறு கேட்டபோது " இன்று " திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூறிய அவர் என்னவானலும் சரி, கூட்டணி தொடரும் என்று சொல்லவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது

கூட்டணி மாறுவது பற்றி காங்கிரஸ் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது ஜெயலலிதா அதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணி மாறுவதற்கான மறைமுக நிர்பந்தத்தை ஏற்படுத்துவது, ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் திமுகவில் குழப்பதை ஏற்படுத்துவது என்பதோடு, காங்-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவது ஆகியவைதான் அவர் பகிரங்கமாகக் காங்கிரசிற்கு அழைப்பு விடக் காரணம்

அதிமுக அதிக இடங்களைப் பெற்றால், தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்க அதன ஆதரவு தேவைப்பட்டால், அப்போது அதை வழிக்குக் கொண்டுவருவது கஷ்டம் என்பதால் காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சிதம்பரம் போன்றவர்களுக்கு சரியான கூட்டணி அமையாவிட்டால் தன் எம்.பி. சீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கவலை.

கடந்த முறை தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை அது 18 இடங்களைக் கேட்கிறது. அது கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதாலும் அது அணி மாற நினைக்கிறது.

நன்றி: ரெடீஃப்.காம்

ரெடீஃப் செய்தியைப் பார்க்க:
http://www.rediff.com/news/2009/feb/20tn-cong-wants-an-a

9 comments:

சந்திரமௌளீஸ்வரன் said...

சமீபத்திய வக்கீல்கள் போலிசார் மோதல் அதனால் உண்டான கலவரம் இதெல்லாம் கூட திமுக வெற்றிக் கூட்டணியைச் சமைக்காது என நினைத்திட வாய்ப்பாகி விட்டது

அதுமட்டுமல்ல

இலங்கை விவகாரத்தில் திமுக Pro LTTE நிலையினை தமிழர் ஆதரவு என்ற போர்வையில் நிகழ்த்துகிறதோ என்ற காங்கிரஸின் ஐயம் / பயம் காரணமாகவும் இருக்கலாம்

A N A N T H E N said...

:)

பிரபு ராஜதுரை said...

எந்தக் கூட்டணியிலும் எனக்கு ஆர்வமில்லையெனினும், காங்கிரஸும் அதிமுகவும் கூட்டணி சேர்வது மக்களாட்சிக்கு நல்லது. ஏனெனில் ஓட்டளிப்பவர்கள் குழப்பமில்லாத ஒரு முடிவினை எடுக்க இயலும்.

They are natural allies...aren't they?

ஆ.ஞானசேகரன் said...

நடக்கலாம்: நடந்தாலும் ஆச்சரியம் ஒன்றுமில்லை....

குப்பன்_யாஹூ said...

Its good for ADMK also, IN north India BJP lost its prospectous, so its good for Cong & ADMK.

But in that Marriage function Jayalaitha didnt say any word about sonia. Its jayalalitha who boycotted viluppuram meeting earlier with sonia.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
பிரபு ராஜதுரை said...
This comment has been removed by a blog administrator.
மாலன் said...
This comment has been removed by the author.
enpaarvaiyil said...

யார் கூட்டணி அமைத்தால் என்ன?
யார் அதிகமாக இலவசங்களை அறிவிக்கிரார்களோ
அவர்கள் பக்கம்தான் வோட்டு போடும் மக்கள்
தேர்தல் வெற்றியை நிர்ணயிக்கிறவர்கள்.
வோட்டு போடாத மக்கள் மற்றும்
தேர்தல் வன்முறைக்கு அஞ்சி வோட்டு போட முடியாத
நிலைக்கு தள்ளப்படும் மக்கள்
அடுத்தபடியாக அடையாள அட்டை இல்லாதவர்கள்
வாக்களிக்க முடியாத நிலை இம்முறை.
இவர்களையும் வோட்டு போட வைத்தால்தான்
உண்மைநிலை தெரியும்
அது நடக்குமா?