1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.
1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.
2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.
பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது.
திமுகவில் இருந்துகொண்டே தேமுதிக-வில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைவதாக முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் உள்ள சாதி பலத்தால் அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.
கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தம்முடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.
கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர்.
இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.
இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடியுமா?
நன்றி: வெப்துனியா | தட்ஸ்தமிழ் | தினமணி
2 comments:
பத்து மாவட்டங்களில் கண்ணப்பன் கை காட்டும் வேட்பாளர்க்கே வாக்கு விழும். பாஸ்டன் பாலா நீங்க காமெடி கீமெடி பண்ணலியே.
சுய நினைவோடுதான் எழுதுரிங்க்லா
இவர் திமுக வை விட்டு போனதும் திமுக வெற்றி வாய்ப்பு இழக்க போவதும் இல்லை, அதே போல அதிமுகவில் சேர்ந்த உடன் அங்கு ஒரேயடியாக வெற்றி வாய்ப்பு கூடப் போவதும் இல்லை.,
இந்த மாதிரி கட்சி தாவிகளை மக்கள் சரியான முறையில் அடையாளம் கண்டு தோல்வி அடைய செய்வர், உதாரணம்; சுப்பு, பொன் விஜயராகவன், சங்கரன்கோவில் ச.தங்கவேலு. DINDIVANAM RAAM MOORTHY, IRAA CHELIYAN...
இந்த மாதிரி செய்திகள் நாளேடுகளுக்கு பக்கம் நிரப்பும் பயன் தவிர வேறு ஒரு பயனும் தரப் போவதில்லை.
குப்பன்_யாஹூ
10 இடங்களிலே நான் சொல்ற ஆளுக்குத்தான் எல்லாரும் வோட்டுப் போடுவாங்கன்னு கண்ணப்பனே சொல்லிட்டார். அதற்க்கப்புறம் ஏது அப்பீலு? யாருக்கு பீலா! :)
கொஞ்சம் சேரியமாக:
---கட்சி தாவிகளை மக்கள் சரியான முறையில் அடையாளம் கண்டு தோல்வி அடைய செய்வர்---
கண்ணப்பனாரி விசயத்தில் பொருந்தாது எனினும்; அந்தக்கால நாஞ்சிலாரில் துவங்கி இன்றைய சாத்தூரார், திருநாவுக்கரசர் வரை பலரையும் மாற்று வாதத்திற்கு உதாரணமாக வைக்கலாம்.
Post a Comment