Showing posts with label TN Poll. Show all posts
Showing posts with label TN Poll. Show all posts

Thursday, March 12, 2009

Tamil Nadu MP in Lok Sabha: லோக் சபாவில் தமிழக எம்.பி.க்கள்

முந்தைய பதிவு: வாயில்லாப் பூச்சி எம்.பி.க்கள்

State/UT Average debates Average questions Average number of private member bills presented Parliament attendance
Tamil Nadu 34 122 0.3 71%
National Average/Total 30 169 0.6 69%

ஒப்பீடாக தமிழ் நாட்டை விடக் குறைந்த உறுப்பினர்கள் கொண்ட கேரளா போன்ற மாநிலத்துடன் இந்த எண்களை சரிபார்க்கலாம்.

~oOo~

MPs performance in Lok Sabha 2004
Debates Participated, Questions Asked and Attendance Indian General Elections

எம்.பி.யின் பெயரை சுட்டினால் லோக் சபா வலையகத்தில் இருக்கும் விவரம் கிடைக்கும்.

தொகுதியை க்ளிக்கினால் தட்ஸ்தமிழ் அலசலுக்கு இட்டுச் செல்லும். (விரைவில் முழுமை பெறும்)

Name / பெயர் Constituency / மறுசீரமைப்புக்குப் பின்?
தொகுதி Party / கட்சி Debates Participated / பங்கு கொண்ட விவாதங்கள் Private Member Bills / தனி நபர் மசோதா Questions asked / கேள்வி நேரம் Attendance / வருகை Notes / Comments
M. Ramadass Pondicherry பாண்டிச்சேரி PMK 151 0 380 94% -
A.K. Moorthy Chengalpattu / காஞ்சிபுரம் செங்கல்பட்டு PMK 0 0 134 62% -
A. Krishnaswamy Sriperumbudur / திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் DMK 64 1 9 84% -
A.K.S. Vijayan Nagapattinam நாகப்பட்டினம் DMK 24 0 0 53% -
Andimuthu Raja Perambalur பெரம்பலூர் DMK * * * * -
A. Ravichandran Sippiparai Sivakasi சிவகாசி MDMK 66 0 224 88% -
A.V. Bellarmin Nagercoil நாகர்கோயில் CPI(M) 69 0 161 85% -
C. Krishnan Pollachi பொள்ளாச்சி MDMK 48 0 0 89% -
C. Kuppusami Chennai North சென்னை (வடக்கு) DMK 31 0 50 81% -
Danapal Venugopal Tiruppattur / திருவண்ணாமலை திருப்பத்தூர் DMK 29 0 0 62% -
Dayanidhi Maran Chennai Central மத்திய சென்னை DMK 1 0 0 10% Served as minister between May-04 and 13-May-07
Dhanuskodi Athithan Tirunelveli திருநெல்வேலி INC 14 0 121 66% -
E.G. Sugavanam Krisnagiri கிருஷ்ணகிரி DMK 28 0 520 71% -
E. Ponnuswamy Chidambaram சிதம்பரம் PMK 21 0 199 89% -
E.V.K.S. Elangovan Gobichettipalayam / ஈரோடு, திருப்பூர் கோபி செட்டிப் பாளையம் INC * * * * -
Gingee N Ramachandran Vandavasi / ஆரணி வந்தவாசி MDMK 5 4 0 33% -
J.M. Aaron Rashid Periyakulam பெரியகுளம் INC 66 0 286 71% -
Kannusamy Venkatapathy Cuddalore கடலூர் DMK * * * * -
K.C . Pallani Shamy Karur கரூர் DMK 13 0 614 64% -
K. Dhanaraju Tindivanam / விழுப்புரம் திண்டிவனம் PMK 41 0 317 64% -
K.M. Kader Mohideen Vellore வேலூர் DMK 25 0 5 64% -
K. Rani Rasipuram / கள்ளக்குறிச்சி ராசிபுரம் INC 14 0 14 71% -
K. Subbarayan Coimbatore கோயம்புத்தூர் CPI 17 0 173 72% -
K.V. Thangka Balu Salem சேலம் INC 21 0 0 76% -
L. Ganesan Tiruchirappalli திருச்சி MDMK 17 0 30 40% -
Mani Shankar Aiyar Mayiladuturai மயிலாடுதுறை INC * * * * -
M. Appadurai Tenkasi தென்காசி CPI 45 0 311 91% -
Mohan Ponnuswamy Madurai மதுரை CPI(M) 82 0 187 71% -
M.S. K. Bhavani Rajenthiran Ramanathapuram ராமநாதபுரம் DMK 30 0 2 77% -
N.S.V. Chitthan Dindigul திண்டுக்கல் INC 63 0 193 88% -
Palaniappan Chidambaram Sivaganga சிவகங்கை INC * * * * -
Raman Senthil Dharmapuri தர்மபுரி PMK 30 6 67 81%
ஆர் வேலு / Rangasamy Velu Arakkonam அரக்கோணம் PMK * * * * -
ஆர் பிரபு / R. Prabhu Nilgiris நீலகிரி INC 10 0 12 56% -
Salarapatty Kuppusamy Kharventhan Palani பழனி INC 177 2 1108 79% -
சேவுகன் ரகுபதி / Sevugan Regupathy Pudukkottai புதுக்கோட்டை DMK * * * * -
எஸ் எஸ் பழனிமாணிக்கம் / S.S. Palanimanickam Thanjavur தஞ்சாவூர் DMK * * * * -
சுப்புலஷ்மி ஜகதீசன் / Subbulakshmi Jagadeesan Tiruchengode திருச்செங்கோடு DMK * * * * -
Thalikkottai Rajuthevar Baalu Chennai South தென் சென்னை DMK * * * * -
வி ராதிகா செல்வி / V. Radhika Selvi Tiruchendur திருச்செந்தூர் DMK 21 0 4 68% Became minister on 18-May-07

Wednesday, March 11, 2009

2004 Therthal: இன்றும் பொருத்தமான பழைய அலசல்

வெங்கடேஷ்

இப்படிப் பார்ப்பது சரியா?

நான் மக்களவைத் தேர்தல் தொடங்கியதில் இருந்து பார்க்கிறவர்களிடமெல்லாம், அதிகம் பதட்டமில்லாமல் ஒரு கேள்வி கேட்கிறேன்.

"யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள்?"

"கருணாநிதிக்கு... "

ஒரு கணம் திகைத்துப் போவேன்.

"இது மத்திய அரசுக்கான தேர்தலாச்சே, கருணாநிதியா டெல்லி போகப்போறாரு?"

எதிராளி கொஞ்சம் யோசிப்பார்.

பல மாநிலங்களில் இதுதான் நிலைமையாக இருக்கவேண்டும். மாநில அரசியல்தான் முதன்மைப்பட்டுப் போயிருக்கிறது. மாநிலப் பிரச்சினைகளும், கவலைகளும்தான் முக்கியமாகியிருக்கிறது. அதில் உள்ள சாதனைகளும், கோபங்களும்தான் தேர்தல்களில் பிரதிபலித்து வருகின்றது.
உண்மையில் மத்திய அரசைப் பற்றி பெரிய எதிர்பார்ப்பு மக்களிடம் தோன்றவில்லையோ என்று எனக்கு எண்ணம் உண்டு. நாளுக்கு நாள் நாம் உள்ளுர் அரசியலில் முழ்கிக்கொண்டிருக்கிறோம். தேசியத் தலைவர்கள் என்றோ, தலைமை என்றோ எல்லாம் யோசிக்கிறோமா என்று தெரியவில்லை. அதனால்தான், தமிழகத்தில் கூட, சோனியா காந்தி அந்நிய நாட்டவர் என்ற பிரச்சாரம் எடுபட மாட்டேன் என்கிறது.

முதலில் பிரச்சாரத்தைத் தொடங்கிய ஜெயலலிதா, இந்த அந்நியர் பிரச்சினையைத்தான் சில நாள்கள் தொடர்ந்து பேசினார். பின்னர், எதிர்பார்த்த விளைவை ஏற்படுத்தவில்லையென்றவுடன்தான், வேறு செய்திகளைச் சொல்லி வருகிறார். அதுவும் உள்ளுர் விஷயம். கருணாநிதி எதிர்ப்பு, குடும்ப அரசியல் என்ற விஷயங்களையே இப்போது தொடுகிறார்.

குறிப்பு இதுதான். மக்களால், ஜெ. பேசும் விஷயங்களைத் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. சோனியா தெரியவில்லை. அவர் அந்நியர் நாட்டவர் என்பதோ, ராஜிவ் காந்தியின் மனைவி என்பதோ எல்லாம் மக்களிடம் போய் சேரவில்லை. அதனால், அது காற்றில் குத்து விடுவது போல் இருந்திருக்க வேண்டும். கலைஞர் கண்ணுக்குத் தெரிந்தவர். அவரைக் குத்துவது, எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

கலைஞருக்கு வேறு பிரச்சினை. அவரும் சோனியாவைப் முதன்மைப்படுத்தி பேச மாட்டேன் என்கிறார். உள்ளுர் பிரச்சினையான தண்ணீர், காலி குடங்களைப் பற்றிப் பேசுகிறார். தண்ணீர் பிரச்சினையைத் தீர்க்க தவறிய ஜெ. பற்றி பேசுகிறார்.

வாஜ்பேயியை எதிர்க்க முடியவில்லை. தேர்தலுக்குப் பின் என்னவாகுமோ என்ற எண்ணம் ஆட்டிப் படைக்கிறது. முடிந்ததெல்லாம் அத்வானியை எதிர்ப்பதுதான். முடிந்தவரை மதச்சார்பின்மை கூட்டணி என்று சொல்லி வருகிறார்.

ஆக, இங்கே சோனியாவோ, வாஜ்பேயியோ பிரச்சினை அல்ல. தேர்ந்தெடுக்கப்படப் போவது, கருணாநிதியோ, ஜெயலலிதாவோதான்.

நிலைமை எப்படியிருக்கிறது பார்த்தீர்களா? கழுதைத் தேய்ந்து கட்டெறும்பு ஆவது என்று இதைத்தான் சொல்வார்களோ?

~oOo~

தேர்தல் நிதி 

நான் திருவல்லிக்கேணி வாசி. தண்ணீர் பஞ்சம் கூடப் பிறந்தது. புது அடுக்ககத்தில் ஒரு தீப்பெட்டி வாங்கிக்கொண்டு குடியேறியபோது, வழக்கம்போல் தண்ணீர் போதவில்லை. பூமிக்குள் நீளக் கைவிட்டு, கடல்நீரை எடுத்துவிடலாம் என்று அடுக்கக பிரகஸ்பதிகள் சொல்ல, நான் ஒரு போர்வெல் காரனைக் கூப்பிட்டிருந்தேன்.

வாசலில் ஒரு பெரிய லாரி வந்து நின்று, குறிக்கப்பட்ட இடத்தில் ஒரு முக்கோண இயந்திரத்தை நிறுத்தி, பூமியை குத்தத் தொடங்கியபோது, வாசலில் ஸ்டைலாக சர்க்கென்று ஹீரோ ஹோண்டா வந்து நின்றது.

"யாரக் கேட்டு போர் போடறீங்க?"

வண்டியில் உட்கார்ந்துகொண்டு ஒரு அதட்டல்.

"யாரக் கேக்கணும்?"

"கார்ப்ரெஷன் ஏ.ஈ.கிட்ட சொன்னீங்களா? பர்மிஷன் வாங்கினீங்களா?"

நான் அவரைக் கூர்ந்து பார்த்தேன். ஏற்கனவே பார்த்தவர்தான். மாநகராட்சி மாமன்ற உறுப்பினர். ஓட்டுக் கேட்டு வந்தபோது பார்த்திருக்கிறேன். வெள்ளை சட்டை. பாக்கெட்டில் செருகியிருந்த பேனாவின் முனையில் அம்மா பளிச்சென்று சிரித்தார்.

"பர்மிஷன் வாங்கணும்னு எனக்குத் தெரியாது சார். சொல்லுங்க.. நான் போய் வாங்கிட்டு வரேன்" என்றேன்.

"இது கூடத் தெரியாம, நீ என்ன படிச்சவன்?"

நான் லேசாகச் சிரித்துகொண்டேன்.

"முதல்ல நிறுத்துச் சொல்லுங்க. ஏ.ஈ. கிட்ட இல்லன்னா, எங்கிட்டயாவது சொல்லியிருக்கணுமில்லையா?"

அவர் குரலில் தெரிந்த வேகம், அதிகாரம் என்னைக் கொஞ்சம் எரிச்சலூட்டியது. மெல்ல, சில நிமிடங்களில் என் சரக்கை எடுத்துச் சொன்னேன். வண்டியை விட்டு இறங்கினார்.

"உங்களுக்குத் தெரியாதது இல்ல சார்...திடீர் திடீர்னு கூட்டம்ங்கறாங்க. அம்மா வராங்க. 100பேரக் கூட்டிட்டு வாங்கறாங்க.. எங்க போறது சார். சாப்பாடு போட்டு பொடவ குடுத்து கூட்டிணு போற செலவெல்லாம் நம்மளுதான்... உங்கள மாதிரி ஆளுங்கதான் பார்த்து செய்யணும். இந்த வட்டத்துல ஜெயிக்க, 4 லட்ச ரூபா செலவு பண்ணியிருக்கேன்.. எப்படி சம்பாதிக்கறது சார்..."

இதுதான் உண்மை செலவு. வட்டியும் முதலுமாய் எப்படியும் அதை அறுவடை செய்தே தீரவேண்டும் என்ற உந்துதல் இருக்கத்தானே செய்யும்.

கார்ப்பரெஷன் தேர்தலுக்கே இப்படியென்றால், மக்களவைத் தேர்தலுக்கு...?

யோசிக்கவே முடியவில்லை. தமிழகத்தில் இரண்டு கூட்டணிகளும் செய்யும் செலவுக்கு நிச்சயம் உண்மை கணக்கு கிடைக்கப் போவதில்லை. தி.மு.க, தன் கட்சியில் சீட் வேண்டுமென்றால், 60 லட்சம் டெபாசிட் கட்டிவிட்டு, சீட் கேளு என்றது (இப்போது அப்படி ஒன்றும் நடக்கவே இல்லையென்று கலைஞர் ஒரு அறிக்கையில் கூறியிருக்கிறார்).

அப்படிக் கட்ட முடியாமல், வாய்ப்பு கைநழுவிப் போன ஒரு நண்பரோடு பேசிக்கொண்டிருந்தேன். மாலை முழுவதும் புலம்பித் தள்ளிவிட்டார். பல்லாண்டு உறுப்பினர். தலைவர் சொன்னார் என்று, தேர்தல் நிதியாக பெரும் தொகையைத் திரட்டிக்கொடுத்தவர்.

தி.மு.க. தேர்தல் நிதியாக கிட்டத்தட்ட 30 கோடி திரட்டியிருக்கிறது. அதை இந்தத் தேர்தலில்தானே செலவு செய்யவேண்டும்? பின் எதற்கு மேலும் ஒவ்வொரு வேட்பாளரும் 60 லட்சம் கட்டவேண்டும் என்ற கேள்வி எழாமலில்லை. தி.மு.க.வுக்குள் எழுந்த இந்த நிதி சலசலப்பு இப்போது கொஞ்சம் அடங்கியிருக்கிறது.

அ.தி.மு.க தேர்தல் செலவு பற்றி மற்றொருவர் சொன்னபோது, நான் லேசாக அதிர்ந்துபோனேன். ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 3 லட்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும், அதில் ஒரு பகுதியை அவர் வைத்துக்கொண்டு மீதியைக் கொண்டு தேர்தல் வேலை பார்க்கப் பணிக்கப்பட்டிருப்பதாகச் சொன்னார். நான் ஆடிப்போய்விட்டேன்.

ஒன்று மட்டும் உண்மை. இரண்டு பக்கமும் பணத்தை தண்ணீர் போல் செலவு செய்யப் போகிறார்கள். எல்லாம் கணக்கு வழக்கற்ற பணம். இதுதான் சமயம் என்று அதில் முங்கி எழுகிறவர்கள் ஒரு பக்கம் என்றால், இதில் உள்ள நியாயங்களை மற்றொருவர் எனக்கு விளக்கினார்... அது அடுத்த பகுதி.


~oOo~


அரசியலை விமர்சிக்க நமக்குத் தகுதியுண்டா?

விடிகாலை. நடப்பதற்காக கடற்கரைக்குப் போக, ஒரு கூட்டம் மெதுவாக நகர்ந்துகொண்டிருந்தது. அருகே நெருங்கிப் போக, முதுகில் உதயசூரியன் சின்னம் பொறித்த டி.சர்ட்டுகள் அணிந்த கட்சிக்காரர்கள். கடற்கரையின் நடைபாதையை அடைத்துக்கொண்டு மெல்ல நகரும் கூட்டம். யாரென்று புரியாமல், நானும் விறுவிறுவென நடந்துபோகத் தொடங்கினேன்.

எனக்கு முன் போனவர்களும் சரி, பின்னார் வருபவர்களும் சரி, அந்தக் கூட்டத்தை லாவகமாய்த் தவிர்த்துவிட்டு, வளைந்து சட்டென கூட்டத்தின் முன்னே போய், மீண்டும் தம் அன்றாட உடல்நலத்தைப் பேணும் அவசரத்தில் வேர்க்க விறுவிறுக்க நடந்துகொண்டிருந்தனர். நின்று பார்த்தவர்கள் நானும் ஒருவன்.

டி.ஆர். பாலு. எங்கள் தொகுதி மக்களவை வேட்பாளர். பக்கத்தில் உசேன். திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ. நின்று கைகுலுக்க, 'படிச்சு பாருங்க சார்' என்று ஒரு துண்டறிக்கையைக் கொடுத்தார் பாலு. என்னைப் போல் ஓரம் நின்றுகொண்டிருந்தவர்கள், தெரிந்த ஒன்றிரண்டு முகங்களோடு கைகுலுக்கியபடி அவர் நடந்துகொண்டிருந்தார்.

துண்டறிக்கையை நான் பாக்கெட்டில் பத்திரப்படுத்திக்கொண்டேன். பலர், அப்படியே ஓரம் போட்டுவிட்டு நடையைக் கட்டினர். இன்னும் சிலர், தமக்கு இதெல்லாம் அநாவசியம் என்பதுபோல், முகத்தை கடுகடுப்பாக வைத்துக்கொண்டு முன்னேறிக்கொண்டிந்தனர்.

நிம்மதியா கூட நடக்க விட மாட்டேங்கறாங்க.. இங்கியும் வந்துடறாங்க

எனக்குப் பின்னால் வந்த மாமி, அடிக்குரலில் மாமாவிடம் சொல்லிக்கொண்டிருந்தார். சில நொடிகளில் என்னைக் கடந்து மேலும் உடல்நலம் காக்க, ஓட்டமாக நடையைப் பயின்றுகொண்டிருந்தனர்.

மற்றொரு காட்சி. எங்கள் அடுக்ககத்தின் வாயிலில் கூட்டம். எம்ஜிஆர் திரைப்படப் பாடல்கள் யார் வருகிறார் என்பதற்குக் கட்டியம் கூறின. வாசலில் போய் நின்றுகொண்டேன்.

ஒரு திறந்த ஜீப்பில் பதர் சையது. அதிமுக தென்சென்னை வேட்பாளர். பக்கத்தில் டி.ஜெயக்குமார். சிரிக்கலாமா வேண்டாமா, கைகூப்ப வேண்டுமா, வேண்டாமா என்று தெரியாமல் பதர் சையது தேமே என்று உயர்ந்து நின்ற அடுக்ககங்களைப் பார்த்துக்கொண்டே வந்துகொண்டிருந்தார். அமைச்சர் ஜெயக்குமார்தான் அம்மா புகழ் பாடி ஓட்டுக் கேட்டுக்கொண்டிருந்தார்.

கல்யாண ஊர்வலமாக இருந்தாலும் சரி, இழவு ஊர்வலமாக இருந்தாலும் சரி, பெருமாள் புறப்பாடாக இருந்தாலும் சரி, வெறுமனே எட்டிப் பார்க்கும் அடுக்கக முகங்கள் இப்போதும், பதர் சையதைப் பார்த்துக்கொண்டிருந்தன.

ஜெயலலிதா ஸ்கூல் ·பிரெண்டாம்..

புடைவை நன்னா அழகா இருக்கு இல்ல...

ஜீப் எங்கள் ஏரியாவின் புகழ்பெற்ற மீனவ 'நகர்'களின் உள்ளே நுழைய, அனைத்து முகங்களும் தம் வேலையைப் பார்க்கத் திரும்பிவிட்டன. ஆனால், ஜீப்போடு வந்தவர்கள், 'நகர்'களுக்கு உள்ளே போனதும், பட்டாசு வெடித்து, சரங்கள் கொளுத்தி, ஆரத்தி எடுத்து, கொண்டாட்டமாய் வரவேற்கத் தொடங்கினர். மணமகள் ஊர்வலம்போல், வாத்தியங்கள் முழங்க, அபாரமான ஏற்பாடுகள்.

இதுதான் வித்தியாசம். ஏற்கனவே, மேல் மத்திய தர வர்க்கம், அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொண்டு விட்டது. கடந்த பத்தாண்டுகளில், கீழ் மத்திய வர்க்கத்துக்கும் அரசியலோடு எந்தத் தொடர்பும் இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறது.

நான் இரவு பகலாக உழைக்கிறேன், எவனோ புண்ணியவான் என் திறமைக்கும் தகுதிக்கும் மதிப்பு கொடுத்து, வேலைகொடுத்திருக்கிறான். அவன் சோறு போடுகிறான். பின் நான் எதற்கு உனக்கு (அரசுக்கு) மதிப்பு தரவேண்டும்? உன்னிடம் நான் எதற்காகவும் வந்து நிற்கத் தயாரில்லை. நிலைமைகள் மாறிவிட்டன பாஸ்!!!

கடந்த பல தேர்தல்களில் வாக்குச் சதவிகிதம் குறைந்து வந்ததற்கு இதுவே முக்கியக் காரணம். இந்தியாவின் புகழ்மிக்க மத்திய வர்க்கமும் அரசியலில் இருந்து தம்மை அந்நியப்படுத்திக்கொள்ளத் தயாராகிவிட்டது. கணினியும் தொழில்நுட்பமும் அவர்கள் பார்வையை மேல்நோக்கி உயர்த்திவிட, நாடாளுபவர்கள் நாசமாகப் போகக் கடவது என்ற விட்டுவிட்டார்கள்!!!

மிச்சமிருப்பது, தினக்கூலிகள், ஆலை உழைப்பாளர்கள், சிறு சிறு வேலைகள் செய்வோர் அடங்கிய அன்றாடம் காய்ச்சிகள். அவர்கள்தான் இன்னும் அரசையும் அரசியலாளர்களையும் வைத்த கண் வாங்காமல் பார்க்கிறார்கள். கூட்டம் கூட்டினால் பேச்சைக் கேட்க வருகிறார்கள். கையில் தலைவரின் முகத்தை பச்சைக் குத்திக்கொள்கிறார்கள். ஓட்டுச் சாவடிக்குப் போய், வெயிலில் நின்று தம் ஓட்டைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறார்கள்.

இதுதான் உண்மை.

மத்தியதர வர்க்கம், செளகரியத்திலும், வெட்டிப்பேச்சிலும் செயலின்மையிலும் ஆழ்ந்துகிடக்கிறது. உண்மையில், நமக்கெல்லாம், இந்த அரசை விமர்சிக்க தகுதியே இல்லை.

வெங்கடேஷ்

Wednesday, February 25, 2009

முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகல்

முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார்.

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.

1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.

2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது.

திமுகவில் இருந்துகொண்டே தேமுதிக-வில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைவதாக முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் உள்ள சாதி பலத்தால் அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தம்முடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடியுமா?

நன்றி: வெப்துனியா | தட்ஸ்தமிழ் | தினமணி

Wednesday, February 18, 2009

தமிழகத்தில் அதிமுக முந்துகிற்து?






வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எப்படி வாக்களிக்கப்போகிறது என்பதை இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தமிழகம் + புதுச்சேரியில் உள்ள 40 இடங்களுக்கு அடுத்து அரசு அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் என்றுமே பெரும் பங்கு உண்டு

2004 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியதே தேசிய ஜனநாயக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் திமுக அதிமுகவை விட சிறு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை சி.என்.என் ஐபிஎன் கணிப்புக் காட்டுகிறது

திமுகவும் அதிமுகவும் சமமான நிலையில் இருக்கின்றன. 28 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதிம்கவிற்கும் அதே அளவுப் பேர் அதாவது 28 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளார்கள். மீதமுள்ள 44 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளிடையே பிரிந்து போகும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு

விஜயகாந்தின் தேமுதிக பெரிய சக்தியாக வளர்ந்து விடவில்லை. ஆனால் ஓட்டுகள் பிரியஅவர்கள் காரணமாக இருப்பார்கள்

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஓப்பிடுகையில் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிமுக, திமுகவை முந்துகிறது.
நன்றி ibnlive.in