Tuesday, February 17, 2009

"காங்கிரஸ் பிச்சை கேட்காது"

தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அதை சமாஜ்வாதி கட்சி எதிர்க்காது எனத் தெரிவித்துள்ளது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.

"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன." என்றார் சிங்.

ஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.2.2009

2 comments:

குப்பன்.யாஹூ said...

முலாயம் சிங் நம் ஊர் ராமதாஸ் மாதிரி அரசியல் வியாபாரி. எங்கு பதவி கிடைக்குமோ அந்த கூட்டணியில் சேர்ந்து கொள்வார். இவர்களுக்கு கொள்கை, தேச நலம் என்பது எல்லாம் கிடையவே கிடையாது.

குப்பன்_யாஹூ

நாமக்கல் சிபி said...

//தேச நலம்//

இது வேறெந்தக் கட்சிக்காவது இருந்தால் குப்பன் யாஹூ தயவு செய்து தெரிவிப்பாராக!