அத்வானி தான் பா.ஜ.கவின் பிரதம மந்திரி வேட்பாளர் என்று அறிவித்து, கூகிள் ஆட்வேர்ஸில் வேறு விளம்பரன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், என்.டி.ஏ காலத்து துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷிகாவத், முஷ்டியினை மடித்து கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.
ராஜ்நாத் சிங் மற்றும் இன்ன பிற தேர்தலையே சந்திக்காத நபர்கள் எல்லாம் கட்சியில் முன்னிலைப்டுத்த படுவதும், அத்வானி/வாஜ்பாயினை விட சீனியரான தன்னை யாரும் கண்டுகொள்ளாததும் இந்த முறைப்புக்கு காரணமாக இருக்கிறது.
ஏற்கனவே பெரியதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லாத பட்சத்தில் [ஸ்திரத்தன்மை, நாட்டின் பாதுகாப்பு] இப்போது பைரோன் சிங் ஷிகாவத் பேசி கொண்டிருக்கும், மாற்று பிரதம மந்திரி பேச்சு இன்னமும் பா.ஜ.க தொண்டர்களை பிளவுப் படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பிண்ணணியில் தான் இது நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், பழமைவாத பாஜக தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இது அல்வா சாப்பிடுவது போன்ற தருணம்.
என்னத்தான், ராமர் கோயில் கட்டுவோம் என்று சவடால் விட்டாலும், அது கட்ட முடியாது என்பது பாஜக ஆட்சியில் இருக்கும்போதே தெளிவாக ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தெரிந்துவிட்டது. இப்போது மீண்டும் அந்த சவடாலை ஆரம்பிக்கும்போது அதை நம்ப அவர்கள் தயாராக இல்லை.
பாஜகவின் உள்கட்சி பூசல் பூதாகாரமாய் வெடித்தால், பெற போகும் கொஞ்ச நஞ்ச தொகுதிகளிலும் பாஜக பெரும் எதிர்ப்பையும் தோல்வியையும் சந்திக்குமென்று தோன்றுகிறது.
கேள்வி: நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக முடியுமா?
பார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸில் பங்கஜ் வோராவின் பத்தி.
இந்த பதிவு மறுவெளியீடு செய்யப்பட்டது.
Tuesday, February 17, 2009
பைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(?!!)
Posted by
Narain Rajagopalan
at
3:58 PM
Reading: பைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(?!!)Post Link to Twitter
Labels:
Elections 2009,
அடுத்த பிரதமர்,
அதவானி,
கூட்டணி,
பாஜக,
பிரதமர்,
பைரோன் சிங் ஷிகாவத்
Subscribe to:
Post Comments
(Atom)
3 comments:
\\"பைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(?!!)"\\
ஜோக் அடிக்காதீங்க சார் :-)
மாலன் சார்
உங்களின் அடுத்த பிரதமர் யார் அப்படிங்கிற வோட்டிங் சாய்ஸிலே பைரோன் சிங் கையும் சேர்த்துடுங்க
இல்லேன்னா அழுதிடப் போறார்
//கேள்வி: நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக முடியுமா?//
Yes he can. No restrictions as per Indian Constitution
Post a Comment