இன்னொரு தேர்தல் வந்து விட்டது.
'நாட்டைப் பிளவுபடுத்தும் மதவாதக் கட்சிகளை ஒதுக்கித் தள்ளுங்கள் என காங்கிரசும், பரம்பரை ஆட்சி நாட்டிர்கு நல்லதல்ல என பாரதிய ஜனதாவும், தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் மதச்சார்பற்ற சக்திகளுக்கு ஆதரவு என இடதுசாரிகலும் நமக்குப் பழக்கமான குரல்கலில் முழங்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆனால் தேர்தல்களில் அரசியல்வாதிகளின் குரல்களை விட பிரஜைகளின் குரல்தான் முக்கியத்துவம் கொண்டது
வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்த கருத்துக்களுக்கென தனி ஒரு வலைப்பதிவாக இதை துவக்கியிருக்கிறேன்.
தேர்தல் குறித்த செய்திகள், விமர்சனங்கள், விவாதங்கள், கருத்துக் கணிப்புகள், கார்ட்டூன்கள் இதில் இடம் பெறும். எல்லா வகையான கருத்துக்களுக்கும் இடமுண்டு.
கூடியவரை தினம் ஒரு பதிவாவது வெளியிட முயற்சிக்கிறேன்.
கூட்டுப் பதிவாகவும் அமைத்துக் கொள்ளலாம்.தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் உள்ளவர்கள் எனக்கொரு மின்னஞ்சல் அனுப்புங்கள்.
இன்றிலிருந்து இந்தப் பதிவு துவங்குகிறது.
Monday, February 09, 2009
Subscribe to:
Post Comments
(Atom)
4 comments:
மாலன்!
நாராயண் மற்றும் விக்கி இருவரும் முன்னமே wordpressஇல் ஒரு பதிவு துவக்கியுள்ளனரே!
அன்புடன்
வெங்கட்ரமணன்
தேர்தல் திருவிழா வந்தாச்சு.
பரபரப்பு பத்திரிக்கைகளுக்கு கொண்டாட்டம், சர்வே எழுதுவதில் போட்டி போடுவர்
ஆங்கில தொலைக்கட்சிகளுக்கும் கொண்டாட்டம், எக்ஸ்சிட் போல், என்ட்ரி போல் என ஒரே கொண்டாட்டம்.
தமிழக மத்திய அமைச்சர்கள் பதின்மூன்று பேரும் எந்த மூஞ்சியை வைத்து
வோட்டு கேட்க போகிறார்கள் என்று தெரிய வில்லை.
இன்னமும் நாங்குநேரி தொழில் பூங்கா வந்த பாடில்லை, சென்னை முதல் கன்யாகுமரி வரை இரு வழி பாதை இன்னமும் முடிய வில்லை. ௩ தேர்தல் முடிந்த பிறகுதான் வரும் போல.
காங்கிரஸ் வந்தாலும் சரி பீ ஜெ பி வந்தாலும் சரி, திரும்பவும் பாஸ்வான், லாலூ, சிபுசோரன், அன்புமணி அமைச்சர்களாகி விடுவர்.
பீ ஜெ பி க்கு அருமையான வாய்ப்பு , ஆனால் பயன் படுத்த தெரிய வில்லை.
தங்களின் கணிப்பு என்ன?
குப்பன்_யாஹூ
நல்ல முயற்ச்சி.. வாழ்த்துக்கள்.
மாலன் சார் வாழ்த்துகள். முடிந்தால் நானும் எழுத முயற்சிக்கிறேன்.எனது 'தேர்தல் ஸ்பெஷல்' வலைப்பதிவுக்கு இணைப்பு கொடுத்ததற்கு நன்றி...
Post a Comment