Friday, March 06, 2009

டைம்ஸ் ஆப் இந்தியாவின் கருத்துக் கணிப்பு

- நாராயணன்

டைம்ஸ் ஆப் இந்தியா தேர்தல் பற்றிய அவர்களின் கணிப்பினை இன்றைக்கு வெளியிட்டு இருக்கிறது. தொகுப்பு கீழே. நான் தொடர்ச்சியாக சொல்லி கொண்டு வருகிற அதே விஷயம் தான் இதிலும் வெளியாகி இருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி கணக்களவில் வலுவாக இருக்கிறது. இந்த கணிப்பும் முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸும் ஐ.மு.கூ இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. நிதர்சனத்தில் இன்னமும் அவர்கள் இருவரும் தொகுதி உடன்பாடு எண்ணிக்கையினை எட்டவில்லை.

தமிழகத்தை பொறுத்தவரை காங். 5 மற்றும் கூட்டணி (முக்கியமாக திமுக) 11 இடங்கள் பெறும் என்று போட்டிருக்கிறது. இக்கணிப்பில் பாமக, அதிமுகவினை நோக்கி நகரும் என கணக்கிட்டு போட்டிருக்கிறார்கள். காங். 5 என்பது பெறக்கூடியதே. ஆனால் பாமக இல்லாத திமுக 11 இடங்கள் என்பது கொஞ்சம் சர்ச்சைக்குரியதே. சென்ற நாடாளுமன்ற தேர்தலில் பாமக 6 இடங்களில் போட்டியிட்டு ஆறிலும் வென்றார்கள். ஒரு வேளை அதிமுக வுக்கு இடம்பெயரும் பட்சத்தில் இந்த எண்ணிக்கை 8 ஆக உயரலாம், ஏனெனில் அதிமுக, பாமக தவிர்த்து மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகளோடும் தொகுதி பங்கு பேரத்தை மேற்கொள்ள வேண்டும்.

Times of India Poll Prediction

Uttar Pradesh Alliances: உத்தர பிரதேசத்தில் தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு

முந்தைய பதிவுகள்:
1. உ.பி.: முலாயம் சிங் யாதவ்-ன் பிஜேபி கூட்டு

2. முலாயம் சிங் யாதவ்: 'கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !'

3. 'காங்கிரஸ் பிச்சை கேட்காது'

4. சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு

உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை, அறிவித்து இருக்கிறது. சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.

இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.

இந்த மாநிலத்தில் காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வா‌தி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று கா‌ங்‌கிர‌ஸ் கேட்டது. ஆனால் அ‌ந்த தொகுதிகளை கொடுக்க சமாஜ்வா‌தி முன்வராததா‌ல் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இந்த நிலையில் ‌திடீரான சமா‌ஜ்வாடி க‌ட்‌சி 62 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.

இந்தி நடிகர் ராஜ் பப்பரின் பெயரும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அவர் பதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை நூர் பானு, ராம்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சல்மான் குரேஷி, பருக்காபாத் பாராளுமன்ற தொகுதியிலும், சஞ்சய் சிங் சுல்தான்பூரிலும் களம் இறங்குகிறார்கள்.

இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய் சிங் கூறுகையில், "உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சமாஜ்வா‌தி கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. எங்கள் கதவு திறந்தே இருக்கிறது'' என்றார்.

Thursday, March 05, 2009

India Therdhal: தமிழ்ப் பதிவுகளில் இந்தியத் தேர்தல்

சமீபத்தில் கவனத்தை ஈர்த்த பதிவுகள்:

முதற்கண் மேற்கோள்

நான் வாக்களிக்கறவன்(ள்) ஜெயிக்கணும்னு நினைக்கறது வேற. ஜெயிக்கறவனுக்கு என் வாக்கு போகணும்னு நினைக்கறது வேற. - பத்ரி

~oOo~

உண்மைத்தமிழன் கிசுகிசுக்களையும் கூட்டணி கணக்குகளையும் ஹேஷ்யங்களையும் கொடுக்கிறார்: தேர்தல் ஸ்பெஷல்: இன்றைய அரசியல் நிலவரம் - 04-03-2009

ஒரு வதந்தி:

குலாம்நபி ஆசாத் இன்னொரு திருப்பமாக விஜயகாந்தை தங்களது கூட்டணிக்கு வரும்படி அழைத்துள்ளார். விஜயகாந்த் தரப்பில் பேச்சுவார்த்தையும் நடந்தேறியதாக டெல்லி வட்டாரத் தகவல். 7 தொகுதி கேட்டு 5 உறுதியாகியுள்ளதாம். கூடவே ஒரு தொகுதிக்கு '2 சி' என்று தேர்தல் நிதியும் தரப்படுமாம்.

ஒரு நிதர்சனம்:

பா.ம.க.வின் நிலைமை திரிசங்கு சொர்க்கம்தான். இந்த முறை அரசியல் வரலாற்றில் முதன் முறையாக என்று தனித்து நிற்க வேண்டி வரலாம் என்கிறார்கள்.

~oOo~

அமெரிக்காவிற்கு மட்டும்தான் மாற்றம் என்னும் தாரக மந்திரம் வேலை செய்ய வேண்டுமா?

தமிழகத்திற்கு மாற்றம் கோரும் பதிவு பார்த்தேன்.

அமெரிக்காவில் டெமொக்ரட்சும் ரிபப்ளிகன்சும் அல்லாத க்ரீன் கட்சி (பசுமைத் தாயகம்?) போல் நிறைய மாற்று சித்தாந்தத்தை வலியுறுத்தும் முன்னணிகள் இருக்கின்றன.

தேர்தல் புறக்கணிப்பு அவசியமா? மாற்றம் சாத்தியமா?
கருணாநிதியாகட்டும், காங்கிரஸாகட்டும், அதிமுகவாகட்டும் - ஈழப்பிரச்சினை பற்றியெறியும் போதும் , நமது தொப்புள் கொடி உறவுகள் குண்டடி பட்டுச் சாகின்ற போதும் கவலையொன்றுமின்றி கூட்டணிக் கணக்குகளை போடுகிறார்கள்.

இன்னமும் தமிழுணர்வு கொண்ட கட்சிகளாக நாம் நம்பும் மதிமுக , பாமக , வி.சிறுத்தைகள் ஆகட்டும் , தேர்தல் என்று வந்தவுடன் சீட்டுக்களுக்காக தாம் போட்ட கோசத்தை மறந்து எத்தனை சீட்டு என்று பேரம் பேச ஆரம்பித்துவிட்டன. விஜயகாந்த் பற்றியோ , சரத்குமார் பற்றியோ பேசி பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை.

குழலி, மதிபாலா, தமிழ் சசி, கார்த்திக்ராமஸ் மற்றும் மாற்றம்நம்பி ஆகியோர் தமிழகத்தில் வலுவான மூன்றாவது அணிக்கான தேவையையும், எவ்வாறு அதை அமைப்பது என்பன குறித்தும் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

~oOo~

ஆந்திராவில் 'மாற்றம் கொண்டுவருகிறேன்' என்று தெலுங்கு தேச சந்திரபாபு நாயுடுவிற்கும் காங்கிரஸ் ராஜசேகர ரெட்டிக்கும் மாற்றாக களத்தில் குதித்த சிரஞ்சீவிக்கு பொதுவான கட்சி சின்னம் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் மூன்றாம் அணியாக வரமாட்டார் என்று சந்தேகிக்கப்படும் ரஜினியின் நிலை என்னவென்று ஆர். முத்துக்குமார் சொல்கிறார்: இந்தியா 360 டிகிரி

தேர்தல் பிரசாரத்தில் ரஜினி!
கலைஞர்: இப்போ கேப்டனு, பைலட்டு, டிரைவருன்னு ஏகப்பட்ட பொடிப்பசங்க வந்து பாலிடிக்ஸ் பண்றானுங்க!

ஜெயலலிதா: யெஸ்.. நீங்க பிரசாரம் பண்ண்ணும்.. பட்.. எனக்கு இல்ல.. கருணாநிதி கூட்டணிக்கு.. (என்று ஜெ சற்று நிறுத்த, ரஜினி ஆச்சர்யமாகப் பார்க்கிறார்)

~oOo~

ஜெயலலிதா, ரஜினி என்றால் குட்டிக் கதை வேண்டுமே. அக்னி பார்வை சொல்கிறார்: தேர்தல் 2009

லோக் சபாவா? லொள்ளு சபாவா

ஒருவர் தன் வீட்டில் குரங்கு ஒன்றை வளர்த்து வந்தார். அதை வீட்டின் வேலைகளை செய்ய பழக வைத்தார். குரங்கு எந்த வேலையை நன்றாக செய்தாலும் சரி பிரம்பால் ஒரு அடி விழும்.

ஒரு நாள் தன் நண்பரை, தன் வீட்டிற்க்கு சாப்பிட அழைத்தார். நண்பர் வந்ததும்,
குரங்கிடம் நாற்காலி போட சொன்னார்; ஒழுங்காக போட்டது ஒரு பிரம்படி.

தண்ணீர் கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்தது; ஒரு பிரம்படி.

விசிறி கொண்டு வர சொன்னார்; கொண்டு வந்த்து; ஒரு பிரம்படி.

நண்பருக்கு சற்று கோபம் வந்தது. 'அது தான் ஒழுங்காக வேலை செய்கிறதே, பின்பு ஏன் பிரம்பால் அடிக்கிறாய்? விடு! அது ஒழுங்காக நடந்துக்கொள்ளும். அடிக்காதே' என்றார். அவரும் ஒப்புக்கொண்டார்.

பின்பு மதிய நேரம் குரங்கை இலை போட சொன்னார். இலை போட்டது ஆனால் அடி விழவில்லை.அது இலையை மெதுவாக பிராண்டியது. அடி விழவில்லை. சாம்பார் சட்டிக்குள் கை விட்டு சிரித்தது, அடி விழவில்லை. மோரை எட்டி உதைத்து அடி விழவில்லை. பொறுத்து பார்த்தவர், அடுத்த அது செய்த வேலைக்கு பிரம்படி கொடுக்க ஆரம்பித்தார், குரங்கு வழிக்கு வந்த்து.

இந்த கதை தான் போது வாழ்க்கையில் இருப்பவர்களுக்கும். அவர்களை மக்கள் கேள்வி கேட்டு கொண்டே இருக்க வேண்டும். இல்லை என்றால்..

~oOo~

'தேவையா இப்படி ஒரு பட்டன்?' கேட்டதிற்கு பதிலாக எம் எஸ் வி முத்து எழுதுகிறார்: குர‌ல்வ‌லை

தேர்தல் நடத்தி விட்டால் ஜனநாயகமா?

ஓட்டுப் போட்டாலே நம்ம ஊர் அரசியல்வாதிங்க ஒன்னும் செய்யறதில்ல. இதில பாரம் வாங்கி பூர்த்தி செய்து ஓட்டுப்போட மாட்டேன்னு எழுதிக்கொடுத்தா, நம்மள நடுத்தெருவுக்கு கொண்டுவந்திருவாங்க.

நான் யாருக்கு ஓட்டுப்போட்டோம் என்பது ரகசியமாக வைக்கப்படுவது போலவே, நாம் ஓட்டுப்போடலை என்பதையும் ரகசியமாக வைக்கவேண்டாமா?

யாருக்கு அதிக ஓட்டோ அவர் தானே வெற்றி பெற்றதாக கணக்கில் கொள்ளப்படும்? யாருக்குமே டெபாஸ்ட் கிடைக்கலன்னா?

மீண்டும் ஒரு முறை தேர்தல் நடத்தப்படும். நம் வரிப்பணம் தான் விரயம் ஆகும்.

~oOo~

அதனால் தேர்தலே வேண்டாமா? 'இந்தியா ஒளிர்கிறது' என்று பத்தாண்டு(தானே?) முன்பு பாஜக சொன்னது போல், 'ஜெய் ஹோ' என்று காங்கிரஸ் பல்லவி பாடுவது போல் பிரதிபா பட்டீல் ஆட்சி, கவர்னர் பர்னாலா அரசு என்று செட்டில் ஆகிவிடலாமா என்னும் கேள்விகள் வெங்கடேஷின் பதிவில் தொக்கி நிற்கின்றன: தேர்தல் நெருங்கிவிட்டது

பொருளாதார சரிவு நிலையில் இச்செலவு தேவையா?

ஏற்கனவே, தமிழக அரசு, இந்தத் தேர்தலை மனத்தில் வைத்துத்தான், வெள்ள நிவாரண நிதி என்று ஒவ்வொரு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரூ. 2000 வழங்கியிருக்கிறது. இன்னும் ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை ஏற்று, அதை முழுமையாகக் கொடுப்பதற்கு முன்பு, குறிப்பட்ட தொகையை முன்பணமாகவும் அரசு ஊழியர்களுக்குக் கொடுத்திருக்கிறது.

~oOo~

ஏப்ரல் 16-ல் மக்களவை தேர்தல் குறித்து உயிரோசையில் மனோஜ்:

ஜனநாயகமும் பணவிரயமும்

  • வரும் மக்களவைத் தேர்தலில் ரூ. 10 ஆயிரம் கோடி வரை செலவிடப்படும்.
  • மத்திய தேர்தல் ஆணையம் சார்பில் ரூ. 1300 கோடி செலவிடப்படும்.
  • மத்திய, மாநில அரசுகள் தனியாக ரூ. 700 கோடி செலவு செய்யும். (போட்டோ ஐ.டி. கார்டு, எலெக்ட்ரானிக் ஓட்டு மெஷின்கள் போன்றவற்றுக்காக).
  • தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ரூ. 1650 கோடி செலவு செய்யும்.
  • காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா மட்டும் ரூ. 1000 கோடி வரை செலவு செய்யும்.
  • வாக்காளர்களுக்கு பணம் வழங்க அரசியல் கட்சிகள் செலவு செய்யும் தொகை ரூ. 2500 கோடியை தொடும்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ரூ. 4 ஆயிரம் கோடி செலவானது.


~oOo~

கடைசியாக அருள்வாக்கு

Election prediction of the day: அடுத்த பிரதம மந்திரியாக மாயாவதி பதவியேற்பார். கம்யுனிஸ்ட்கள் அமைச்சரவையில் இடம்பெற்றும் காங்கிரஸ் வெளியில் இருந்தும் ஆதரவு தரும்.

Wednesday, March 04, 2009

Tamil Nadu Therthal: தமிழக கம்யூனிஸ்ட் திமுக கூட்டணிக்கு செல்கிறதா?

1. BJP launches LS campaign from TN; Advani to speak in Nagerkovil:
தமிழகத்திலிருந்து பிரச்சாரம் தொடங்கும் அத்வானி

தமிழக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன்:

நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்த், சரத்குமார் ஆகியோர் பாரதீய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முன்வந்தால் அவர்களை சேர்க்க தயாராக இருக்கிறோம்.

~oOo~

2. Regional News Headlines in Tamil - Yahoo! Tamil News:
கருணா‌நி‌‌தியுட‌ன் தா.பா‌ண்டிய‌ன் திடீர் ச‌‌ந்‌தி‌ப்பு

முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இ‌ன்று இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட் க‌‌ட்‌சி‌யி‌ன் மா‌நில செயல‌ர் தா.பா‌ண்டிய‌ன் திடீரென் ச‌ந்‌தி‌த்து உட‌ல் நல‌‌ம் கு‌றி‌த்து ‌விசா‌ரி‌த்தா‌ர்.

~oOo~

3. TamilNadu News - Dinamani.com:  
தமிழகத்தில் 10 தொகுதிகளைப் பெற கம்யூனிஸ்ட் கட்சிகள் முயற்சி

2004-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலின்போது தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் 4 தொகுதிகளில் போட்டியிட்டன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
  • மதுரை, 
  • நாகர்கோவில் தொகுதிகளிலும், 
இந்திய கம்யூனிஸ்ட்
  • கோயம்புத்தூர், 
  • தென்காசி தொகுதிகளிலும் 
போட்டியிட்டு வெற்றி பெற்றன.

மார்க்சிஸ்ட் கட்சி சார்பில்
  • மதுரை, 
  • கன்னியாகுமரி, 
  • திருச்சி, 
  • கோவை, 
  • சிதம்பரம் 
உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை அ.தி.மு.க.விடம் அளிக்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்
  • நாகப்பட்டினம், 
  • தென்காசி, 
  • திருப்பூர், 
  • கிருஷ்ணகிரி, 
  • விருதுநகர், 
  • வடசென்னை 
உள்ளிட்ட 10 தொகுதிகளின் பட்டியலை அளிப்பது என அக்கட்சியின் மாநிலக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

கம்யூனிஸ்ட் கட்சிகள் 10 தொகுதிகளில் போட்டியிட விரும்பினாலும், அக்கட்சிகள் 6 இடங்களில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படலாம் என்றும், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் அ.தி.மு.க. தலைமை தலா 3 தொகுதிகள் வழங்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

~oOo~

4. Chiranjeevi file case against EC:
பொது சின்னம் இல்லை-குழப்பத்தில் சிரஞ்சீவி

சிரஞ்சீவி துவக்கிய பிரஜா ராஜ்யம் முதன் முறையாக நாடாளுமன்றம் மற்றும் ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறது. இதையடுத்து தனது கட்சிக்கு பொது சின்னம் வேண்டும் என்றும், அதை ரயில் சின்னமாக தரும்படியும் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தார்.

பொது சின்னம் கிடைக்காததை அடுத்து ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு சுயேச்சை சின்னத்தில் தான் போட்டியிட வேண்டிய நிலை.

~oOo~

5. TamilNadu News - Dinamani.com:  
சோனியாவை திட்டியதை மறந்துவிட்டார்களா? - கருணாநிதி

"15 தொகுதிகள் வேண்டும்' என்று தமிழக காங்கிரசார் அந்தக் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாதிடம் வற்புறுத்திய செய்திக்குப் பதிலளித்து முதல்வர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: Cadres should Work for DMK-Cong win: Karunanidhi, திமுக- காங். கூட்டணி: "உடல் எல்லாம் மூளை, சிந்தனை, வஞ்சனை: கருணாநிதி"

~oOo~

6. Sivagami IAS to contest in Kanyakumari constituency:
கன்னியாகுமரியில் சிவகாமி ஐஏஎஸ் போட்டி

மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவகாமி போட்டியிடுகிறார். சிவகாமியின் கணவரின் சொந்த ஊரான கற்காடு கிராமம் இந்தத் தொகுதியில் தான் உள்ளது.

கடந்த தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி திருச்செந்தூர் நாடாளுமன்றத் தொகுதியுடன் இருந்தது. இப்போது தொகுதி மறுவரையின்படி நாகர்கோவில் நாடாளுமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டு கன்னியாகுமரி தொகுதி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் மட்டும் சுமார் 40,000 தலித் வாக்காளர்கள் உள்ளனர். மேலும் இந்த தொகுதிக்குள் அடங்கிய
  • நாகர்கோவில், 
  • குளச்சல், 
  • பத்மநாபபுரம், 
  • விளவங்கோடு, 
  • கிள்ளியூர் 
ஆகிய சட்டமன்ற தொகுதிகளிலும் தலித் வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.
இந்த முறை தேர்தலில் மக்களை ஒட்டு போட ஊக்குவிக்க, பலவித மீடியா - தொலைகாட்சி மற்றும் பிரிண்ட் - இணைய தளங்கள் - பலவிதங்களில் முனனந்து வருகின்றன.

பெருவாரியான சமூக மாறுதல்கள் / சிந்தனைகள் / விழிப்புணர்வுகள் இன்று மீடியா பிரசாரம் மூலம் ஓரளவு சாத்யமாகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.

சமூக தொடர்பு தளங்களான ஃபேஸ் புக் போன்றவைகளில் இந்தியாவை வழி நடத்துங்கள் ( Lead India) போன்ற விழிப்புணர்வு குழுமங்கள் பெருகி வருகின்றன. இந்தியாவில் நீங்கள் காண விழையும் மாற்றம் முதலில் உங்களிடமிருந்து ஆரம்பிக்கட்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த பிரசாரங்கள் அமைந்துள்ளன.

டாடா டீயும், ஜனகிரஹா என்ற தொண்டூழிய அமைப்பும் சேர்ந்து நடத்தும் Jaagore ( தமிழ் = விழித்திருங்கள்) என்ற பிரசாரமும், இணைய தளமும் ( www.jaagore.com) இன்றைய இளைஞர்களிடையே பிரபலம். டைம்ஸ் ஆப் இந்தியாவின் "லீட் இந்தியா" பிரசாரத்தின் இணைய தளத்தில் - http://lead.timesofindia.com/Home.aspx ஓட்டுப் போடுவதின் முக்கியத்துவத்தை விளக்கி, நம் ஜனநாயகத்தை பற்றி அடிப்படை தகவல்களையும் பட்டியலிடப்பட்டுள்ளது. நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பும் எம் பிக்களின் தகுதி, அவர்களின் பொறுப்புகள், அவற்றை அவர்கள் எப்படி பயன் படுத்துகின்றனர், / பயன்படுத்தவில்லை - போன்ற விவரங்களும் இங்கே உள்ளது.

தேசிய அளவில் இன்று பொதுத்தேர்தல் வாக்குப் பதிவு 50லிருந்து 60 சதவிகித வட்டத்துள் இருந்து வருகிறது. பொதுவாக மேட்டுக்குடியினரும், மத்தியதர வகுப்பினரும் ஓட்டுச்சாவடி பக்கம் போவதில்லை என்ற கருத்து நிலவும் நிலையில், மேட்டுக்குடியினரால் அதிக அளவு உபயோகிக்கப்படும் இந்த புதிய மீடியா பிரசாரத்தினால் வாக்குப்பதிவு குறைந்தது 10 சதவிகிதம் உயர்ந்தாலே அது சாதனை!

ஆங்... அப்படி எல்லாம் பெரிசா ஒண்ணும் மாறிவிடாது என்ற எதிர்மறை சிந்தனையாளர்களுக்காக டைம்ஸ் ஆப் இந்தியாவின் லீட் இந்தியா பிரசார வீடியோ ஒன்று, மாதிரிக்கு இங்கே:
http://www.youtube.com/watch?v=pFs5vWxW-vc

கட்சிகள். கூட்டணிகள். கணக்குகள்

- நாராயணன்

தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. ஏப்ரல் 16 முதல் மே 13 வரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடக்கும்.இறுதியாக இப்போது காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும், பா.ஜ.க முன்னிறுத்தும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் தான் போட்டி என்பது உறுதியாகிவிட்டது. தேவ கெளடாவின் மூன்றாவது அணீ மார்ச் 12 அன்றைக்கு அனைத்து தலைவர்களோடும் தன் தேர்தல் பிரச்சாரத்தினை தொடக்க இருக்கிறது. ஆனால், இந்த மூன்றாவது அணி ஒட்டினை பிரித்து, யார் பதவிக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களோடு போய்விடும் என்பது தான் பரவலான எண்ணம்.

இப்போதைக்கு யார் யாரோடு இருக்கிறார்கள் என்று பார்ப்போம்

ஐக்கிய முற்போக்கு அணி (UPA)
  • காங்கிரஸ் - சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி, சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், குலாம் நபி ஆசாத் மற்றும் மாநில ரீதியான காங்கிரஸ் தலைவர்கள்
  • ராஷ்ட்ரிய ஜனதா தள் (RJD + LJP) - லாலு பிரசாத் யாதவ் (பீகார்)
  • ஜனதா முக்தி மோர்ச்சா (JMM)- சிபு சோரன், (ஜார்கண்ட்) (சமீபத்திய செய்திகளில், முதலமைச்சர் பதவி தராததால் சிபு சோரன் கோவமடைந்து இருப்பதாக கேள்வி)
  • திரிணாமுல் காங்கிரஸ் (TP) - மம்தா பானர்ஜி (மேற்கு வங்காளம்)
  • தேசிய காங்கிரஸ் - உமர்/பரூக் அப்துல்லா (ஜம்மு & காஷ்மீர்)
  • சமாஜ்வாடி கட்சி (SP) - முலாயம் சிங்/அமர் சிங் கூட்டணி (உத்தரப்பிரதேசம்). முலாயம் நடுவில் “சரத் பவார்” பிரதமர் வேட்பாளராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்று வேறு சொல்லியிருக்கிறார். இது தாண்டி, உ.பியின் தொகுதி பங்கீட்டில் இன்னமும் உடன்பாடு ஏற்படவில்லை.
  • தேசியவாத காங்கிரஸ் (NCP) - சரத் பவார். மஹாராஷ்ட்ராவின் கிங் மேக்கர். காங்கிரஸோடு தொடர்ச்சியாக பேசிக் கொண்டிருக்கிறார். இன்னமும் தொகுதி பங்கீடு உடன்பாடு ஏற்படவில்லை. கூடவே, சிவசேனாவோடு வேறு தொடர்புகளை ஏற்படுத்தியிருக்கிறார். மஹாராஷ்டிராவில் இப்போது காங்கிரஸ் + தேசியவாத காங்கிரஸின் கூட்டணி அரசு நடந்து கொண்டிருக்கிறது.
  • திராவிட முன்னேற்றக் கழகம் (DMK) - கருணாநிதி, ஸ்டாலின், அழகிரி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு, ராசா (தமிழ்நாடு) தமிழ்நாட்டில் திமுகவுக்கு எதிரான அலை இருப்பதாக தெரிகிறது.காங்கிரஸுக்கு அதிக இடங்கள் கொடுப்பதாக கருணாநிதி கூட்டணியை தக்கவைத்து கொண்டு இருக்கிறார். தேர்தலின் முடிவுக்கு பின், காங்கிரஸ் கூட்டணி பற்றி பரிசீலனை செய்யலாம்.
  • விடுதலைச் சிறுத்தைகள் (VCK) - திருமாவளவன் (தமிழ்நாடு).கருணாநிதியோடு கூட்டணியில் இருக்கிறார். தலித் மக்களின் ஒட்டு இன்னமும் விடுதலைச் சிறுத்தைகள் பக்கம் இருக்கிறது. ஆனால், இலங்கைப்பிரச்சனையில் விடுதலைச் சிறுத்தைகளின் கவனமும், கருணாநிதியோடு கூட்டும் எதிர்மறையானது.

ஆக இப்போதைக்கு
UPA = INC + RJD + LJP + TP + SP + NCP + NC + DMK + VCK + உதிரிக் கட்சிகள்

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA)

  • பாரதீய ஜனதா கட்சி - அத்வானி, மோடி, அருண் ஜெட்லீ, சுஷ்மா சுவராஜ், ராஜ்நாத் சிங்.
  • அகாலி தளம் (AD) - பஞ்சாப்.கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • இந்திய தேசிய லோக் தளம் (INLD) - சவுதாலா. ஹரியானாவின் மிக முக்கியமான தலைவர். கூட்டணி உறுதியாகிவிட்டது.
  • ராஷ்ட்ரிய லோக் தளம் (RLD) - அஜித் சிங். உத்தரப்பிரதேசம். ஜாட் இன மக்களின் முக்கியமான தலைவர். கூட்டணியும், தொகுதி பங்கீடும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கு உ.பியின் ஜாட் இன மக்கள் அதிகம். மாயாவதிக்கும், சமாஜ்வாடி பார்ட்டிக்கும் கடுமையான போட்டியாக இருக்கும்.
  • பாரதீய ஜனதா தள் (BJD) - பிஜு பட்நாயக்.ஒரிஸ்ஸா.கூட்டணி உறுதி. தொகுதி பங்கீடு இன்னமும் முடியவில்லை.
  • சிவ சேனா - பால் தாக்கரே. மஹாராஷ்டிரா. பெரியதாக இப்போதைக்கு மஹாராஷ்டிராவில் சிவ சேனாவிற்கு மரியாதை இல்லை. பா.ஜ.கவோடு பல சமயங்களில் கருத்து ரீதியான மோதல்கள் இருந்திருக்கிறது. ஆனாலும், இந்த தேர்தலை சேர்ந்தே சந்தித்தாக வேண்டிய கட்டாயம். ஒரு வேளை சரத் பவார் மனசு மாறினாறென்றால், சிவசேனா + பாஜக + தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸினை இடம் தெரியாமல் ஒட வைக்கலாம்.
  • அஸ்ஸாம் கன பரிஷத் (AGP) - பிரபல் குமார் மகந்தா. அஸ்ஸாம். பாஜக பேசிக் கொண்டு இருக்கிறார்கள். காங்கிரஸிற்கு எதிரானது என்பதால், உடன்படிக்கை ஏற்படலாம் என்பது நம்பிக்கை.
  • தேசிய முற்போக்கு திராவிட கழகம் (DMDK) - விஜயகாந்த். தமிழ்நாடு. இதை எழுதும் இந்த நிமிடம் வரை எவ்விதமான கூட்டணியும் இல்லை. ஆனால் செய்திகள் தேமுதிகவும் பாஜகவும் பேசிக் கொண்டு இருக்கிறார்கள் என்று சொல்கின்றன. சென்ற மாநில தேர்தல்களில் 8.33% ஒட்டு பெற்று மக்களி்ன் கவனத்தினை ஈர்த்த கட்சி. இளைஞர்கள் மத்தியில் விஜயகாந்திற்கு நல்ல பெயர் இருக்கிறது. இப்போதைக்கு எதுவும் நிச்சயமில்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனைக்காக நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்போம் என்று வேறு நடுவில் சொல்லியிருந்தார்கள்

ஆக இப்போதைக்கு
NDA = BJP + Shiv Sena + AD + INLD + AGP + RLD + உதிரிக் கட்சிகள்

மூன்றாவது அணி

மார்ச் 12 ஆம் தேதி தேவ கெளடா தலைமையில் துவக்கம் இருக்கிறது. இப்போதைக்கு கொஞ்சம் இன்பார்மலாக பல கட்சிகள் அதில் இருக்கின்றன.

ஜனதா தளம் (இணைப்பு) (JD (U)) - முந்திய பிரதமர் தேவ கெளடா. முன்னாளைய கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி. கர்நாடாகாவில் மிக முக்கியமானn கட்சி. கன்னடிகா, கன்னட எழுச்சி என்று பெங்களூர் சாராத கர்நாடாகாவில் வலிமையோடு இருக்கக்கூடிய கட்சி.
பிரச்சனை: ஒரு வேளை தேர்தலில் ஜெயித்து, ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சி அமைக்கக் கூடிய சூழல் வருமெனில் அங்கே தாவி விடக் கூடிய அபாயமிருக்கிறது. அவர்களுடைய பிரச்சனை மாநிலத்தில் பாஜகவோடு கூட்டணி சேர்ந்து, பிறகு கவிழ்த்து, இப்போதைக்கு பாஜக ஆட்சி நடந்து வருவது.

கம்யுனிஸ்டுகள் (CPI /CPM) -பிரகாஷ் காரத். பிருந்தா காரத்.புத்ததேவ் பட்டாச்சார்யா. பரதன். பின்ராயி விஜயன். மேற்கு வங்காளம், கேரளாவில் ஆட்சி்யிருக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து, இந்திய - அமெரிக்க அணு ஒப்பந்தத்தில் வெளியேறினார்கள். பிரகாஷ் காரத்திற்கு காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத ஒரு கூட்டணியில் இருக்கவேண்டிய கட்டாயம். இந்தியா முழுக்க கம்யுனிஸ்டு அனுதாபிகள் இருக்கிறார்கள். காங்கிரஸ், பாஜகவை விட இந்தியாவெங்கும் ஒரளவிற்கு பரவலான வாக்காளர்களை கொண்ட கட்சி.
பிரச்சனை: தனித்து இருப்பதால், வாக்கினை பிரிக்கலாமெயொழிய ஆட்சி அமைக்க முடியாது. நல்ல எதிர்க்கட்சியாக மட்டுமே இருக்கமுடியும்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (ADMK) - ஜெயலலிதா. தமிழ்நாடு. திமுக எதிர்ப்பலையில் இப்போதைக்கு உற்சாகமாக இருக்கிறார்கள். மூன்றாவது அணியில் இருக்கிறேன் என்று போயஸ் கார்டனில் தலைவர்களோடு தேனீர் அருந்திவிட்டு, காங்கிரஸை தன்னோடு சேருங்கள் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தவர். தென் தமிழகத்தில் கட்சியின் வாக்கு வங்கி அதிகம். மதிமுக மற்றும் கம்யுனிஸ்டுகள் களத்தில் இறங்கி வேலை செய்வார்கள் என்பது கூடுதல் பலம். இப்போதைக்கு மூன்றாம் அணி.
பிரச்சனை: காங்கிரஸுக்கு பகிரங்க அழைப்பு விட்டதால், தேர்தலுக்கு பின்னான நிலைமை சொல்ல முடியாது. ஜெயலலிதாவின் தேவை, திமுக ஆட்சி கலைப்பு. அதற்கு தோதாக தேர்தல் முடிவுகள் அதிமுகவிற்கு சாதகமாக அமைந்து ஐ.மு.கூ க்கு 15-20 இடங்கள் தேவைப்படுமெனில் காங்கிரஸ் திமு்கவை கழட்டிவிட்டு அதிமுகவோடு சேரக்கூடிய சாத்தியங்கள் அதிகம்.அப்போது தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ஆதரவு வி்லக்கப்படும்.அதிமுக ஆட்சியில் அமர ஒரு வாய்ப்பிருக்கும்.

தெலுகு தேசம் (TDP) , தெலுங்கானா ராஷ்ட்ரியா சமிதி (TRS) - சந்திரபாபு நாயுடு.ராகவேந்தர் ராவ். ஆந்திரா. உத்வேகத்தோடு காங்கிரஸ் எதிர்ப்பலையில் போட்டி போ்டுகிறார்கள். தெலுகு தேசம் + தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி + கம்யுனிஸ்டுகள் என கூட்டணி அமைத்து மாநிலத்துக்கும், நாடாளுமன்றத்திற்குமான தொகுதி உடன்பாடுகள் பேசப்பட்டு வருகின்றன. சந்திரபாபு நாயுடுவிற்கு தன்னை நிறுப்பித்தாகவேண்டிய கட்டாயம்.
பிரச்சனை: ஐ.மு.கூக்கு கண்டிப்பாக போக மாட்டார்கள். ஆனால் ஒரு வேளை தே.ஜ.கூ ஆட்சி அமைக்கும் சாத்தியங்கள் இருக்கும் பட்சத்தில், தெலுகு டதேசம் பாஜகவுக்கு வெளியிலிருந்தோ, இல்லை உள்ளே போயோ ஆதரவு கொடுக்கலாம். பாஜகவும் இப்போது தெலுங்கானா பற்றி பேசுவதால் தெலு்ங்கான ராஷ்ட்ரிய சமிதியும் பாஜகவுக்கு ஆதரவு தரலாம்

ஆக இப்போதைக்கு
Third Front = JD(U)+ CPI +CPM + TDP + TRS + AIADMK + உதிரிக் கட்சிகள்

மதில் மேல் பூனைகள்

பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) - மாயாவதி. உத்தரப்பிரதேசம். தலித் மக்களின் எழுச்சி என்று நம்பப்படுபவர். டெல்லியின் மீதும், பிரதமர் பதவி மீதும் எப்போதும் ஒரு கண் இருக்கிறது. உ.பியின் 80 தொகுதிகளில் பிஎஸ்பியின் கை ஒங்கியி்ருக்கிறது. காங்கிரஸ், பாஜக அல்லாத ஒரு கூட்டணி இல்லாமல் கனவுகள் நிறைவேறாது. ஆனாலும், இன்னமும் மூன்றாவது அணியினை நம்பி இறங்கவில்லை. தேர்தல் முடிவுகளுக்கு பிறகு ஏதேனும் வியுகங்கள் வகுக்கலாம்

பாட்டாளி மக்கள் கட்சி - ராமதாஸ். அன்புமணி ராமதாஸ். தமிழ்நாடு. ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தாலும், கூட்டணியிலிருந்து விலகி விட்டார் என்று தமிழ்நாட்டில் நம்பப்படுகிறது. தொடர்ச்சியாக 12 வருடங்கள், பாஜகவுடனும், காங்கிரஸுடனும் இருந்து மத்தியில் அமைச்சரவைகள் பெற்றுக் கொண்ட கட்சி. இலங்கை தமிழர் பிரச்சனையில் கருத்து வேறுபாடுகள், ஆளும் திமுக + காங்கிரஸ் கூட்டணியோடு உருவாகியிருக்கிறது. பல்வேறு மாநிலம் தொ்டர்பான பிரச்சனைகளிலும் பாமகவின் பார்வை புறக்கணிக்கப்பட்டது, ஆழமான விரிசலை உண்டாக்கியிருக்கிறது. ஹேஷ்யங்கள், ராமதாஸ் அதிமுகவோடு கூட்டணிக்கு போவார் என்று சொல்கிறது. இன்னமும் கூட்டணி பற்றி முடிவெடுக்கவில்லை.

மேற்சொன்னவை தேர்தலுக்கு முன்னான இப்போதைய நிலைமை.

நிகழ்சூழல் 1

ஒரு வேளை காங்கிரஸ் முன்னிறுத்தும் ஐ.மு.கூ தொகுதிகள் அடிப்படையில் மு்ன்னிலை பெறும் பட்சத்தில், ஜனதா தள் (இணைந்தது), அதிமுக, ஒரு சாரார் கம்யுனிஸ்டுகளே அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம்.

நிகழ்சூழல் 2

ஒரு வேளை பாஜக முன்னிறுத்தும் தே.ஜ.கூ தொகுதிகள் அடிப்படையில் முன்னிலைப் பெறும் பட்சத்தில், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி பார்ட்டி, தெலுகு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி போன்ற கட்சிகள் அதற்கு முட்டுக் கொடுத்து கூட்டணி அரசினை நிற்க வைக்கலாம். பகுஜன் சமாஜ் கட்சியும் பாஜகவிற்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்கலாம். அதிமுகவிற்கும் அதே நிலை.ஆனால் பாஜகவினர் முன்பு நடந்ததை மறந்திருக்க மாட்டார்கள்.

நிகழ்சூழல் 3

மூன்றாவது அணி பெருவாரியான தொகுதிகள் முன்னிலைப் பெறுவது என்பது இப்போதைக்கு சொல்லமுடியாத காரியம். அப்படி ஒருக்கால் நடக்கும்பட்சத்தில், பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், அஸ்ஸாம் கன பரிஷத், அகாலி தளம், பாட்டாளி மக்கள் கட்சி போன்ற கட்சிகள் ஆதரவளிக்கலாம்.

மேற்சொன்ன மூன்று சூழல்களிலும் பாமக பொதுவான ஒரு ஆதரவினை, சூழலைப் பொறுத்து எடுத்து அமைச்சரவையில் இடம் பிடிப்பார்கள் என்று தோன்றுகிறது.

THE GAME JUST BEGINS.

Tuesday, March 03, 2009

ரஜினிகாந்த் கடிதம்: யாருக்கு என் ஆதரவு

நன்றி: மக்களவைத் தேர்தல் 2004

ஒவ்வொரு முறையும் தேர்தல் வரும்பொழுது அது பாராளுமன்றத் தேர்தல் ஆகட்டும் அல்லது சட்டமன்றத் தேர்தல் ஆகட்டும் என்னுடைய ஆதரவு யாருக்குஇஅதாவது என்னுடைய வாய்ஸ் யாருக்கு என்ற கேள்வி எழுகிறது.

இந்த முறையும் அந்த கேள்வி எழுந்துள்ளது.
நான் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். பல காரணங்களுக்காக இந்த பாராளுமன்றத் தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கும் இல்லை. 
 ஆனாலும், நான் ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும். என் அன்பார்ந்த தமிழக மக்களே, இப்பொழுது நம் நாட்டிலேயே தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்கும் பிரச்சினை தண்ணீர் பிரச்சினை. ஏழைகளிலிருந்து பணக்காரர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகளிலிருந்து இப்பொழுது அனைவரும் தவித்துக்கொண்டிருப்பது தண்ணீருக்காக.

நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இந்திய நாட்டில் உள்ள அனைத்து நதிகளையும் இணைத்தால்தான் இந்த கடுமையான பிரச்சினை தீரும். நம் நாட்டிலுள்ள தண்ணீர் பஞ்சத்தை நீக்க இந்த ஒரே வழிதான். குறிப்பாக, நம் நாட்டு நதிகளை இணைக்காவிட்டால் ரொம்ப பாதிக்கப்படப்போவது தமிழ்நாடுதான். ஏனென்றால், நம்மைச் சுற்றி உள்ள மாநிலங்களான ஆந்திரா, கேரளா, கர்நாடகாவில் எல்லாம் பல ஜீவநதிகள் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் தண்ணீர் சுமந்துவரும் எந்த ஜீவநதியும் இல்லை.

நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்தினால் இதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுக்கிறேன் என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். இது அனைவரும் அறிந்த விஷயம். மத்தியில் அமையும் ஆட்சிதான் நம் நாட்டு நதிகளை இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும். நான் இந்த ஒரு மாத இடைவெளியில் இந்தியாவிலுள்ள பல மாநிலங்களை சுற்றி வந்தேன். எனக்கு ஒன்று நேரிடையாக தெளிவாக தெரிந்தது. இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் எந்த கூட்டணிக்கு எவ்வளவு சீட் கிடைக்க போகிறதோ எனக்கு தெரியாது.
ஆனால், இந்த தேர்தலில் மத்தியில் அமரப் போவது (பாஜக) வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசுதான். இது உறுதி.

என்னைப் பொறுத்தவரையில் இந்திய நாட்டின் முக்கியப் பிரச்சினையான தண்ணீர் பிரச்சினைக்கு யார் தீர்வு காண்கிறார்களோ அவர்களுக்கே என் ஓட்டு. நதிகளை இணைக்கும் திட்டத்தில் மற்றவர்கள் ஒரு உறுதியான முடிவுக்கு வராத இந்த நேரத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பாக வாஜ்பாய் தலைமையிலான என்.டி.ஏ. அரசின் தேர்தல் அறிக்கையில் தண்ணீர் பஞ்சத்தை தீர்ப்பதற்காக இந்திய நாட்டின் அனைத்து நதிகளையும் கண்டிப்பாக இணைப்போம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார்கள்.

திரு. அத்வானி அவர்களே அதை செயல்படுத்தியே தீருவோம் என்று என்னிடம் உறுதி அளித்திருக்கிறார்கள். வாஜ்பாய் அரசு அதை செய்யும் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
ஆக, இந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணிக்குத்தான் என் ஓட்டு.

தமிழக மக்களே, அன்பான ரசிகர்களே, மறுபடியும் சொல்கிறேன். இது எந்த கூட்டணிக்கும் என் ஆதரவு அல்ல. இது என் ஓட்டு மட்டும்தான். இதற்காக தமிழக மக்களையோ, என் ரசிகர்களையோ நான் ஓட்டு போடும் கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று நான் வற்புறுத்த மாட்டேன். நான் இந்த கூட்டணிக்கு ஓட்டு போடுவதாலே என் ரசிகர்களும், இந்த கூட்டணிக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. நீங்கள் பல கட்சிகளில் இருக்கிறீர்கள்இ உங்களின் ஓட்டு உரிமையை நான் பறிக்க மாட்டேன்.

ஆனால் சிந்தியுங்கள். தமிழ்நாட்டிலுள்ளவர்கள் மட்டுமல்ல இந்தியாவில் வாழும் அனைத்து மக்களே குறிப்பாக தாய்மார்களே, இளைஞர்களே, மாணவஇமாணவிகளே, படித்தவர்களே, நீங்கள் ஓட்டுச்சாவடிக்கு ஓட்டுப்போட போகும்போது நம் கட்சி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை நம்ம ஜாதி ஆளு ஜெயிக்கணும்னு ஓட்டுப்போட போறீங்களா, இல்லை தண்ணீ வேணும்னு ஓட்டு போட போறீங்களா? நீங்களே முடிவு பண்ணுங்கள். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். சிந்தியுங்கள். செயல்படுங்கள்.

வாழ்க தமிழக மக்கள்! வளர்க தமிழ்நாடு!

நதிகள் இணையட்டும்! இந்தியா ஒளிரட்டும்!

- ஜெய் ஹிந்த்.

Monday, March 02, 2009

நாடாளுமன்ற தேர்தல் - ஏப்ரல் 16 - மே 13

- நாராயணன்

தேர்தல் ஆணையம் இன்று நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. ஐந்து பகுதிகளாக நடக்கும் இந்த தேர்தல் 543 தொகுதிகளை உள்ளடக்கியது. ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி, மே 13 வரை, ஐந்து பகுதிகளாக வாக்களிப்பு நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் முதன்மை கமிஷ்னர் திரு. கோபால்சாமி இவைகளை அறிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும், மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும். ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். மீதமிருக்கும் 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும்.

முதல் பகுதி - ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)
இரண்டாம் பகுதி - ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)
மூன்றாம் பகுதி - ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)
நான்காம் பகுதி - மே 7 (85 தொகுதிகள்)
ஐந்தாம் பகுதி - மே 13 (86 தொகுதிகள்)

முடிவுகள் மே 16இல் இருக்கும்.

சில புள்ளிவிவரங்கள்.

  • இருந்த 543 தொகுதிகளில், 499 தொகுதிகள் சீரமைக்கப்பட்டிருக்கிறது
  • 71 இலட்சம் போலிஸார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
  • 714 மில்லியன் வாக்காளர்கள் (71.3 கோடி) இந்த தேர்தலில் பங்கேற்பார்கள், அதில் 43 மில்லியன் (4.3 கோடி) புது வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பார்கள்
  • 8,28,804 தேர்தல் பூத்துகள் அமைக்கப்படும்
  • 11 இலட்சம், மிண்ணணு வாக்களிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்
  • இப்போதைய ஆட்சி காலம், ஜூன் 1 வ்ரை இருக்கிறது.புதிய நாடாளுமன்றம் ஜூன் 2 தேதி போல இருக்கும்

Sunday, March 01, 2009

காங்கிரசுக்கு அதிக இடம், திமுக தாராளம்?

தமிழகத்தில் இந்த முறை காங்கிரஸ் அதிகத் தொகுதிகளைக் கேட்கும் என இரு தினங்களுக்கு முன் செய்திகள் வந்தன. அந்தக் கோரிக்கையை திமுக ஏற்கும் என்பது இன்றைய செய்தி. விவரங்கள் கீழே:

வரும் மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை விட்டுத்தர திமுக முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. திமுக கூட்டணியிலிருந்து வெளி யேற்றப்பட்ட பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டு வரும் முயற்சியில் காங்கிரஸ் கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது.

மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்ற பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. இதனால் தொகுதி பங்கீடு செய்வது குறித்து கட்சிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, திமுக கூட்டணி யிலிருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்தார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிமுக கூட்டணியில் அண்மையில் இடம் பெற்ற மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளை இது அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோல திமுகவிலும், காங்கிரஸ் கட்சியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆளும் கட்சியாக திமுக இருப்பதால் மக்களிடம் செல்வாக்கு குறைந் துள்ளது என்றும், இலங்கை தமிழர் பிரச்சனை தொடர்பான போராட்டங் களின் போது வன்முறையை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என்றும், காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர் கருதினார்கள். இதனால் அவர்கள் திமுக கூட்டணியில் இருந்த விலகி அதிமுகவுடன் சேர வேண்டும் என்று விரும்பினார்கள்.

இத்தகைய எண்ணம் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலரிடம் மட்டுமின்றி அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் உள்ள சில முக்கிய பிரமுகர்களிடமும் ஏற்பட்டது. மற்றொரு பிரிவினர் வளர்ந்து வரும் கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி வைத்து கொள்ள வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. ஆனால் திமுக கூட்டணியை விட்டு வெளியே வந்தால்தான் காங்கிரசுடன் தாங்கள் தொகுதி உடன்பாடு வைத்து கொள்ள முடியும் என்று தேமுதிக தரப்பில் கூறிவிட்டதாக தெரிகிறது.
இது திமுக தலைமையை அதிர்ச்சி அடைய செய்தது. திமுக நிலைமையை சரிசெய்ய தீவிர முயற்சி களை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில், மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு மற்றும் தயாநிதி மாறன் ஆகியோர் டெல்லியில் காங்கிரஸ் முக்கிய பிரமுகர்களை சந்தித்து காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரவேண்டும் என்று வலியுறுத்தியதாக தெரிகிறது.தமிழ்நாடு பொறுப்பு வகிக்கும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத்தை, தயாநிதி மாறன் இருமுறை சந்தித்து பேசியுள்ளார்.

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் இருந்த இடதுசாரிகள், மதிமுக போன்ற கட்சிகள் வெளியேறி விட்டதால் அந்த தொகுதிகளில் கணிசமான வற்றை காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக விட்டுத்தர திமுக தரப்பில் முன்வந்ததாக கூறப்படுகிறது.இதனால் காங்கிரஸ், திமுக கூட்டணி தொடரும் என்று புதுடெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திமுக கூட்டணியில் அங்கம் வகித்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை தாமாக வெளியேறின. ஆனால் பாமகவை திமுக தான் வெளியேற்றியது. இதனால் திமுக அணிக்கு பின்னடைவு ஏற்பட்டதால் பாமகவை மீண்டும் தங்கள் அணிக்கு கொண்டுவர திமுக மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சி சமரச முயற்சிகளை மேற்கொண்டது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வீ.தங்கபாலு, சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம் ஆகியோர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார்கள். மதச்சார்பற்ற சக்திகளின் ஓட்டு பிரியக்கூடாது என்பதை அவரிடம் வலியுறுத்தியதாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தெரிவித்தனர். இதற்கு நல்ல பலன் ஏற்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் சகோதரர் தமிழரசுடன் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். தமிழரசின் மகள் திருமணத்திற்கு அழைப்பதற்காக சென்றதாக அவர்கள் தரப்பில் கூறப்பட்ட போதிலும், அரசியல் பேசப்பட்டதாகவும் கூறப்படு கிறது. இதன் தொடர்ச்சியாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், கட்சி தலைவர் ஜி.கே. மணியுடன் நேற்று ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு சென்று அங்கு சிகிச்சை பெற்று வரும் முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

எனவே திமுக கூட்டணியில் பாமக மீண்டும் இடம் பெறுவதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக அரசியல் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சங்கமம்/பிப்ரவரி 28

முன்னர் வந்த செய்தி:
(பிப்ரவரி 26/ தட்ஸ் தமிழ்)

சென்னை: தமிழகத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுகவிடம் கூடுதல் தொகுதிகளைக் கேட்பதாகத் தெரிகிறது.
நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், பாமக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.
புதுச்சேரியின் ஒரு தொகுதியையும் சேர்த்து மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக-16 (இதில் ஒன்றில் திமுக சின்னத்தில் முஸ்லீம் லீக் போட்டியிடது), காங்கிரஸ்-10, பாமக-6 (இதில் ஒன்று புதுச்சேரி தொகுதி), மதிமுக-4, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-2, இந்திய கம்யூனிஸ்ட்-2 தொகுதிகளில் போட்டியிட்டன.
இந்த அனைத்து இடங்களிலும் இந்தக் கூட்டணி வென்று மாபெரும் சாதனை படைத்தது. அந்தத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட அதிமுக (33 இடங்களில் நின்றது), பாஜகவுக்கு (7 இடங்களில் போட்டியிட்டது) ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.ஆகிய இடங்களில் போட்டி யிட்டன.
ஆனால், இப்போது திமுக கூட்டணி கலகலத்துப் போயுள்ளது. அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக காங்கிரசுடன் ஏற்பட்ட மோதலில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ்-திமுக கூட்டணியை விட்டு விலகிவிட்டன. இப்போது இரு கட்சிகளும் அதிமுக கூட்டணியில் உள்ளன.
இவர்களுக்கு முன்பே மதிமுக விலகி அதிமுக கூட்டணிக்குப் போய்விட்டது.
பாமகவைப் பொறுத்தவரை காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்க விரும்பினாலும் திமுகவுடன் மோதல் போக்கில் உள்ளது. திமுகவுடன் உறவை சீர் செய்தால் மட்டுமே கூட்டணியில் நீடிக்க முடியும் என அக் கட்சியின் தலைவர் ராமதாசிடம் கடந்த வாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகக் கூறிவிட்டார்.
இதனால் பாமக திமுக கூட்டணியில் சேருமா அல்லது வழக்கம்போல் பல்டி அடித்து அதிமுக பக்கம் போகுமா என்பது இதுவரை உறுதியாகத் தெரியவில்லை.
மதிமுக மற்றும் இடதுசாரி கட்சிகள் விலகி விட்டதால் திமுக கூட்டணியில் திமுக கூட்டணியி்ல் 8 இடங்கள் கூடுதலாக உள்ளன. பாமகவும் விலகிவிட்டால் திமுக, காங்கிரசுரக்கு மேலும் 6 இடங்கள் கூடுதலாக இருக்கும்.
இப்படியாக மொத்தம் 8 அல்லது 14 இடங்கள் வரை கிடைப்பதால் திமுக அதிக இடங்களில் போட்டியிட முயல்கிறது. அதே போல காங்கிரசும் கூடுதல் இடங்களைக் கேட்க முடிவு செய்துள்ளது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே எஞ்சியிருந்தால் இருவருமே சரி சமமாக இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறுவதாகத் தெரிகிறது.
அதாவது புதுச்சேரியையும் சேர்த்து திமுக 20 தொகுதிகளிலும் காங்கிரஸ் 20 தொகுதிகளிலும் நிற்கலாம் என்கிறது.
பாமக கூட்டணிக்கு வந்துவிட்டால் அவர்களுக்கு 6 இடங்களைத் தந்துவிட்டு நாம் தலா 17 இடங்களில் போட்டியிடலாம் என்பது காங்கிரஸ் சொல்லும் கணக்கு.
ஆனால், கூட்டணிக்குள் வர வேண்டும் என்றால் 10 இடங்கள் வரை கேட்டு கடைசியில் 8 இடங்களுக்கு ஒப்புக் கொள்வார் ராமதாஸ் என்று திமுக கருதுகிறது.
அப்படி நடந்தால், மிச்சமிருக்கும் 32 தொகுதிகளில் தான் 20 தொகுதிகளிலும் காங்கிரசுக்கு 12 இடங்களையும் (கடந்த தேர்தலை விட 2 இடம் ஜாஸ்தி) தர திமுக நினைப்பதாகத் தெரிகிறது.
ஆனால், கூட்டணிக்குள் யார் வந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி இடங்களை சரிசமமாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்று காங்கிரஸ் நச்சரிப்பதாகத் தெரிகிறது.
இது தொடர்பான முதல் கட்ட ஆலோசனைகள் தான் டெல்லியில் தமிழக காங்கிரஸ் தேர்தல் பொறுப்பாளர் குலாம்நபி ஆசாத்- திமுக எம்பி தயாநிதி மாறன் இடையே நடந்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையே தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு வலைவீசுவதை காங்கிரஸ் இன்னும் நிறுத்தவில்லை. அவர் கூட்டணிக்குள் வந்தால் பாமகவை வெட்டிவிடுவது என்ற நிலையில் காங்கிரஸ் உள்ளது.
அப்படி ஒரு நிலை வந்தால் தேமுதிகவுக்கும் சேர்த்து திமுகவிடம் காங்கிரஸ் இடங்களைக் கேட்கும். அதாவது தேமுதிக-காங்கிரஸ் இடையே தான் கூட்டணியாம். திமுகவுடன் தேமுதிகவுக்கு நேரடியாக கூட்டணி இல்லையாம்.
இதைச் சொல்லித்தான் விஜய்காந்துக்கு காங்கிரஸ் வலை வீசிக் கொண்டுள்ளது. அவர் ஒப்புக் கொண்டுவிட்டால் திமுகவிடம் 25 இடங்கள் வரை காங்கிரஸ் கேட்கும் என்று தெரிகிறது. அதி்ல் 5 முதல் 8 இடங்களை விஜய்காந்துக்கு ஒதுக்கும் என்றும் கூறப்படுகிறது.

Saturday, February 28, 2009

பிரதமர் மக்களவைக்குப் போட்டியிட வேண்டுமா ?

பிரதமராக பதவியேற்பவர் தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது கட்டாயமாக்கப்படவேண் டும். அதற்காக அரசிலயமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியிருந்தார்.

இந்த யோசனை நடைமுறைக்கு ஏற்புடையதல்ல. திறமை மற்றும் கொள்கையின் அடிப்படையில்தான் பிரதமரை தீர்மானிக்க வேண்டும் என்று இதற்கு பதிலளித்திருக்கிறார் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி.

இந்த விஷயத்தில் உங்கள் வாக்கு அத்வானிக்கா? சோம் நாத்திற்கா?

அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்.

Thursday, February 26, 2009

வாயில்லாப் பூச்சி எம்.பி.க்கள்

எம்.பி.யாக தேர்ந்தெடுப்பது
  • விவாதத்தில் பங்கெடுக்கவும், 
  • கேள்வி நேரத்தில் தொகுதிக்காக கவன ஈர்ப்புக் கோரவும், 
  • கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும்
குரல் கொடுக்க என்பதை அறியாதவர்கள் சட்டசபையை நிறைத்து இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசவே பேசாத மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல்:
  1. இந்தி  நடிகர் தர்மேந்திரா - பிக்கானெர்
  2. கன்னட நடிகர் அம்பரீஷ் - காங்கிரஸ்: மான்டியா
  3. Biren Singh Engti
  4. Manikrao Hodlya Gavit  
  5. மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா
  6. Baliram Kashyap - பாஜக
  7. Sohan Potai - பாஜக
  8. Somabhai Gandalal Koli Patel - பாஜக
  9. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தெரிந்த சிவ சேனாவின் Prakash Paranjpe
  10. Beni Prasad Verma - சமாஜ்வாதி
  11. Saleem Iqbal Shervani - சமாஜ்வாதி
  12. Bhishma Shankar - பகுஜன் சமாஜ்
  13. Akbar Ahmad Dumpy - பகுஜன் சமாஜ்
  14. Kunwar Sarvraj Singh - ஜனதா தளம்
  15. Laxman Rao Pandurang Patil - NCP
மேலே சொன்னவர்கள் கொட்டாவி விட மட்டும் வாயைத் திறந்தார்கள். கூச்சல் போட மட்டும் டப்பிங் குரல் கொடுத்தார்கள்.

இவர்கள் வாயில்லாப் பூச்சிகள்.

ஆனால், வாக்களித்தவர்களுக்காக வாயைத் திறக்காதவர்கள் இன்னும் எக்கச்சக்கம். வக்கணையாக வாய் கிழிய விவாதங்களில் புஜபல பராக்கிரமத்தை நிலைநாட்டினாலும், சொந்தத் தொகுதிக்காக துறும்பைக் கூட கிள்ளிப் போடும் கேள்விகளை எழுப்பாதவர்களின் சாம்பிள்:
  • பாரதீய ஜனதாவின் பிரதம மந்திரி வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி
  • காங்கிரசு தலைவி சோனியா காந்தி
  • இன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா
இவர்களின் தொகுதியில் 'குறையொன்றுமில்லை போல!?
நாடாளுமன்றம் ஒரு நிமிடம் நடக்க எடுக்கும் செலவுத் தொகை: ரூபாய். 34,500/-

ஆங்கிலத்தில்: Just seen, never heard: 15 MPs who didn't speak

திருமாவளவன் நெத்தியடி நிபந்தனை! - ஆனந்த விகடன்

நன்றி: விகடன் - மை.பா. நாராயணன் (பெப்ரவரி 05, 2006)

‘‘வேறு எந்தத் தலைவர்களையும்விட, தலித் அரசியல் களத்திலே நிற்கிற ஒருவன் சந்திக்கிற தடைகளும் துயர்களும் மிக அதிகம். மற்றவர்களால் அடுத்த ஒரு வருடத்துக்கான செயல்திட்டத்தைக்கூட போட்டுவைத்துச் செயல்பட முடியும். என்னைப் போன்றவனுக்கு நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாமல்தான் ஒவ்வொரு இரவும் கடக்கிறது.

இதோ, எங்கள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். எல்லோர்க்கும் இனியன்; இனமானப் போராளி; திருமணமான ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருக்கிறது. இனியனின் சடலத்துக்கு அருகில் அந்தப் பிஞ்சுக் குழந்தையோடு அவன் மனைவி கதறிய கதறலைக் கேட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. ஆனால், இதுவரை இனியனின் படுகொலை பற்றி தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை. கருத்து சொல்லவில்லை. ஏனென்றால் இனியன் தலித், ஒடுக்கப்பட்டவன்! இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை!’’

குடவாசலில் இயக்கத் தோழர் இனியன் படுகொலையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய நிலையில், நம்மிடம் வெடித்தார் தொல். திருமாவளவன்.

எட்டிவிடும் தூரத்தில் தேர்தல். அடிக்கடி மாறும் அரசியல் வானிலையில் திருமாவளவனின் நிலை என்ன? டாக்டர் ராமதாஸின் கைப் பிடித்து அறிவாலயத்துக்கு போவாரா? அல்லது அ.தி.மு.க. கூடாரத்தில் செட்டிலாவாரா? இது இப்போதைய பரபரப்புக் கேள்வி. கனல் தெறிக்கும் காட்டம், வழக்கமான சீற்றம் கலந்து நம்முடன் பேசுகிறார் திருமா!
‘‘தேர்தல் வியூகங்கள் தொடங்கி விட்டன. தமிழக அரசியல் களம் எப்படியிருக்கிறது?’’

‘‘சுருக்கமாகச் சொல்வதென்றால், தக்க வைப்பதற்கும் தகர்க்க நினைப்பதற்கும் நடுவில் நடக்கிற ஆடு புலி ஆட்டம்தான் வருகின்ற சட்டசபைத் தேர்தல். எப்பாடுபட்டாவது கூட்டணியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கட்சித் தலைமை. என்ன செய்தாவது அந்தக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று இன்னொரு கட்சித் தலைமை. இருவருக்கும் இடையே பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் பனி விலகிவிடும். யாரோடு யார் போகிறார்கள், யாரிடம் யார் வருகிறார்கள் என எல்லா கணக்குகளும் தெரிந்துவிடும்.’’
"சமீபத்தில் கூடிய விடுதலைச் சிறுத்தைகளின் மையக் குழுவில் மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும் தி.மு.க-வையும் திராவிட இயக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்களாமே?"

‘‘உண்மைதான். அது அவர்களின் அடி மனதிலிருந்த ஆதங்கம். ஏனென்றால், நாங்கள் தொடர்ந்து காயப் படுத்தப்பட்டு வரு கிறோம். எங்களுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் உரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த கடந்த கால அனுபவங்கள் எல்லாம் எங்கள் மையக் குழு விவாதத்தில் விரிவாக அலசப்பட்டது. என்னவெல்லாம் பேசினார்கள் என்று சொல்கிறேன்...

'மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர், ராம்தாஸ் ஆத்வாலே, பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வான், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி போன்றவர்களுக்கு அவர்களது மாநிலத்தில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கூட்டணி அரசில் பங்கு பெறுகிறார்கள். ஆனால், இங்கே திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் கட்சியில் இருக்கிற தாழ்த்தப் பட்ட மக்களில் ஒருவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, இன்னொருவருக்கு துணை சபாநாயகர் பதவி என்று தந்து, அதோடு மங்களம் பாடிவிடுகிறார்கள்' என்றெல்லாம் தங்களுடைய மனக் குமுறல்களை மையக் குழு கூட்டத்தில் கொட்டினர் தோழர்கள். அவர்களின் பேச்சில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரியும். நாங்கள் காத்திருக்கிறோம்.’’
‘‘வருகிற தேர்தலில் நீங்கள் யார் பக்கம்?’’

"இந்த முறை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக எங்களைத் தயார் படுத்தி வைத்திருக்கிறோம். எனவே, எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்கள் விரும்புகிறார்கள். ஆம், இந்த முறை எங்களுக்கு 'கேர் ஆஃப்' விலாசம் கூடாது! சிறுத்தைகளுக்குச் சொந்த முகவரியும் உரிய அங்கீகாரமும் தர முன்வருபவர்கள் யாரோ... அவர்களோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்! இதுதான் எங்கள் தேர்தல் எதிர்பார்ப்பு!’’
‘‘உங்கள் தமிழ் பாதுகாப்பு இயக்கத் தோழரான டாக்டர் ராமதாஸ், தி.மு.க. அணியில் உங்களைச் சேர்த்துவிட வேண்டும் என்பதில் அதிக அக்கறைகாட்டி வருகிறாரே..?’’

அதற்காக தமிழ்க்குடிதாங்கி அய்யாவுக்கு நன்றி. இன மொழி மீட்புக்காக ஒருமித்த உணர்வுள்ள நானும் ஐயா நெடுமாறன், மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி போன்றவர்களும் தமிழ் தேசிய தளத்தில் தோளோடு தோள் நிற்கிறோம். ஆனால், கட்சி அரசியல் பற்றி இதுவரை நாங்கள் பேசியது கிடையாது.

என் மீது தமிழ்க்குடிதாங்கி ஐயாவுக்கு இருக்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களை தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், இறுதி முடிவு எடுக்க வேண்டியது கலைஞர்தானே..? அவருடைய மௌனத்தின் பொருள் என்ன என்று எங்கள் இயக்கத் தோழர்களுக்குப் பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அழைத்தால் பேசத் தயாராக இருக்கிறோம். அடுத்ததை கலைஞர்தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை தனிப்பட்ட முறையில் கலைஞரையோ தி.மு.க-வையோ விமர்சித்தது கிடையாது.’’
‘‘விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம், வட மாவட்டங்களில் உங்கள் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் என ஒரு கருத்து எழுந்துள்ளதே..?’’

‘‘ஊடகங்கள் உண்டாக்கிய மாயத்தோற்றம் இது. கோடம்பாக்கத்துக் கவர்ச்சியில் கரைந்துபோகிறவர்கள் அல்ல, விடுதலைச் சிறுத்தைகளின் தம்பிமார்கள். விஜயகாந்த்துக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்... அரசியல் என்பது சினிமா அல்ல. வாக்குகளைக் குறிவைத்து அள்ளிவிடும் வீர வசனங்களை எல்லாம் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள் மக்கள்!

பணம் கொடுத்து ஆட்களை வேனில் அழைத்து வந்து... அவர்களை நோக்கி 'லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்' என்று பேசுகிறார் விஜயகாந்த். எனவே, கூட்டத்தையும் தோற்றத்தையும் வைத்து எதையும் எடை போட்டுவிட முடியாது. அவர் தரும் வாக்குறுதிகள் காற்றிலே கரைந்துவிடுமா அல்லது கரை சேருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமே!’’
"‘திருமாவளவனின் நடை, உடை, போக்கு மாறிவிட்டது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்தபடி இருக்கிறார். விடுதலைப் புலிகளிடமிருந்து அவருக்கு பணம் வருகிறது’ என்றெல்லாம் விமர்சனம் வருகிறதே?"

"‘எங்கள் வளர்ச்சியில் கசப்பும் காழ்ப்பும் கொண்டவர்கள் கூறும் மலிவான குற்றச்சாட்டுக்கள் இவை. தாய் மண்ணை விட்டு பல்வேறு நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இன உணர்வுகளைக் கொச்சைப்படுத்திப் பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது? அவர்கள் என்ன ரிசர்வ் வங்கியா நடத்துகிறார்கள்?

ஈழ மண்ணிலிருந்து வாழ்க்கையைத் தேடி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்கிற ஈழத் தமிழர்கள், அங்கங்கே தமிழ் அமைப்புகளை நிறுவியிருக்கிறார்கள். அவர்கள் நடத்துகிற தமிழ் சார்ந்த நிகழ்சிகளில் கலந்துகொள்ளவே வெளிநாடுகளுக்குப் போய் வருகிறேன். அதற்கான பயணச்சீட்டுகளை மட்டுமே அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்று வருகிறேன். அப்படிப் போகும் போது சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறேன். பெரிய ஓட்டலில் தங்குவது, இஷ்டத்துக்குச் செலவு செய்வது எனக்குப் பழக்கம் இல்லை. என் எல்லாப் பயணங்களும் உரிமைகளையும் கொள்கைகளையும் பேசுவதற்காகத் தான்!

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கனூர் கிராமத்தில் உள்ள எங்கள் கூரை வீடு சேதமாகிப்போனது. என் தாய் - தந்தை உட்பட, வீட்டில் இருந்த அனைவரும் குளிரில் நடுங்கியபடி நாட்களை நகர்த்தினார்கள். அதை ஊர் அறியும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்க்கையைத் தவமாக நினைத்து வாழ்ந்து வருகிறவன் நான். எனக்கு கண்ணியம்தான் முக்கியமே தவிர, கரன்ஸி நோட்டுக்கள் அல்ல!’’

Wednesday, February 25, 2009

முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகல்

முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார்.

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.

1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.

2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது.

திமுகவில் இருந்துகொண்டே தேமுதிக-வில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைவதாக முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் உள்ள சாதி பலத்தால் அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தம்முடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடியுமா?

நன்றி: வெப்துனியா | தட்ஸ்தமிழ் | தினமணி

Anti-incumbency Factor தேய்கிறதா?

- நாராயணன்

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் - anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.

1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன? 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.

மேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு "qualified extension" அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும்? பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.

Tuesday, February 24, 2009

Czarinas of India - ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி

- நாராயணன்

ஆக நடந்து முடிந்த ஐபின் வாக்கெடுப்பில் தமிழகம் ஒரு முக்கியமான காரணியாக இருக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். நடுவில் ஜெயலலிதா [40 தொகுதிகள் பாண்டிச்சேரி உட்பட] காங்கிரஸினை வேறு அழைத்திருக்கிறார் கூட்டு சேர. மேற்கு வங்காளத்தில் மம்தா பானார்ஜியின் திரிணாமுல் காங்கிரஸினை காங்கிரஸ் வளைக்க பார்க்கிறது. நந்திகிராமின் பிரச்சனைகள் இருந்தாலும், கம்யுனிஸ்டுகள் இன்னமும் மேற்கு வங்காளத்தில் வலிமையோடு தான் இருக்கிறார்கள். மேற்கு வங்காளம் ஒரு முக்கியமான மாநிலம் [42 தொகுதிகள்] ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கம்யுனிஸ்டுகள் ஆதரவு கொடுத்த காலத்தில், மேற்கு வங்காளத்தின் தொகுதிகள் முக்கிய பங்கு வகித்தது. தேர்தலுக்கு பின்னான உறவுகள்/கூட்டணிகள் பற்றி இப்போது பேச முடியாது என்றாலும், காங்கிரஸ் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறது.உத்தரப்பிரதேசம் [80 தொகுதிகள்] மாயாவதியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. மாயாவதி காங்கிரஸ்/பாஜகவோடு இப்போதைக்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இல்லை. ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வேளை காங்கிரஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், சில உயர்பதவிகளை கேட்டு ஆதரவு கொடுக்கலாம்.

ஆனால், மூவருக்கும் உள்ள ஒற்றுமை, மூவரையும் எந்த காலத்திற்கும் நம்பமுடியாது. சோனியாவினை திட்டிய அதே ஜெயலலிதா தான் இன்றைக்கு காங்கிரஸுக்கு ரத்தின கம்பளம் போட்டு கூட்டணியில் சேர அழைக்கிறார். மம்தா பானர்ஜியும் லேசுப்பட்டவர் அல்ல. கடந்த காலங்களில் பாஜக இவரிடம் பட்டிருக்கிறது.

மாயாவதி, ஜெயலலிதா,மமதா பானர்ஜி மூவரிடத்திலும் சேர்த்து (162 தொகுதிகள்) இப்போதைக்கு இருக்கிறது. மூவருமே அவரவர் மாநிலங்களில் பெரும் செல்வாக்கும், வாக்கு வங்கியும் பெற்றவர்கள். ஒரு வேளை காங்கிரஸ் இப்போதைக்கு எவ்விதமான கூட்டணி வைக்காமல் போய் 180 தொகுதிகள் கூட்டணியோடு ஜெயித்தார்களேயானால், அதே வேளையில் இந்த மூவர் கூட்டணி 70 - 90 தொகுதிகள் ஜெயித்தார்களேயானால் இவர்கள் இல்லாமல் அரசமைக்க இயலாது. மூவருக்குமே உள்ளூர காங்கிரஸ் பிடிக்காது என்றாலும், அத்தகைய ஒரு நிலை வந்தால், தன்னிலையிலிருந்து இறங்கி வருவார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை அது நடக்கும் பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, தமிழகத்தில் திமுக [பாமக, விடுதலை சிறுத்தைகள் நிலை இப்போதைக்கு சரியாக சொல்ல இயலாது] ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுவார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவு.

Will Women Power rock the elections, we got to wait and watch?

தேவையா இப்படி ஒரு பட்டன்?

புதுடெல்லி, பிப்.24: தேர்தலில் யாருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு என்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தனியிடம் ஒதுக்கக் கோரி தொடர்ந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

டெல்லியை சேர்ந்த மக்கள் உரிமை சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:

இப்போதைய வாக்களிப்பு முறையில் எந்த கட்சிக்கும் அல்லது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்களது எண்ணத்தை பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடமில்லை. இவ்வாறு விருப்பம் இல்லாதவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

இப்படி முன்நிபந்தனை விதிப்பது அரசியல் சட்டம் 19 (2) விதிக்கு எதிரானது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது.
மேலும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று பகிரங்கமாக தெரிவிப்பவர்கள் அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது.

எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 'மேலே உள்ள யாருக்கும் எனது வாக்கு இல்லை' என்பதற்கு அடையாளமாக தனி பட்டன் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை பரிசீலனை செய்தது. இது மக்களின் அடிப்படை உரிமை பற்றிய விவகாரம் என்பதால் இந்த மனுவை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு இரு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் பரிந்துரை செய்தது.


தினகரன் 24.2.09


யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கலாம். சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது . இந்தியாவில் அப்படி இல்லை. இந்த நிலைமையில் இப்படி ஒரு தனிபட்டன் தேவையா?


அதே நேரம்

வாக்குச் சாவடிக்கு வராதவர்களின் வாக்குகளை கடைசி சில மணி நேரங்களில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாகப் பதிவு செய்து கொண்டுவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இது போன்ற ஒரு பட்டன் இருந்தால் வாக்க்ளிக்க விருப்பமில்லாதவர்கள் கூட் வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்யவும் அதன் காரண்மாக கள்ள் ஓட்டுக்கள் பதிவாவதைத் தவிர்க்கவும் முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

தனிபட்டன் தேவையா? உங்கள் கருத்தை அருகில் உள்ள வாக்கெடுப்புப் பெட்டியில் தெரிவியுங்கள்.

Monday, February 23, 2009

நெருக்கடியால் வந்த நெருக்கம்?

தினமணி

சென்னை, பிப். 22: மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கைப் பிரச்னையை மையமாக வைத்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் நிலை எடுத்துள்ளன.

கண்ணப்பன் சந்திப்பு: இந்த நிலையில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வரும் முதல்வர் கருணாநிதியை, ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள்: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் அதிமுகவுக்கும், அந்தக் கட்சியின் கூட்டணியில் நீடித்து வரும் மதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அதிமுக ஒரு போதும் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஜெயலலிதா தொடர்ந்து கூறி வருகிறார்.

கூட்டணியில் நீடிக்கும் நிர்பந்தம் காரணமாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு தனது நிலைப்பாட்டை மதிமுக பொதுச் செயலர் வைகோ இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அதிமுக - மதிமுக இடையே நிலவும் இந்த மறைமுக அரசியல் கருத்து வேறுபாடு ஓசையின்றித் தொடர்கிறது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் பகிரங்க அழைப்பை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்தார்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே அதிமுகவும் கொண்டுள்ளதாக சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

குலாம் நபி ஆசாத்: 2001-ம் ஆண்டு பொதுத் தேர்தலை அதிமுக - காங்கிரஸ் இணைந்து சந்தித்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் குலாம் நபி ஆசாத், இப்போது அதே பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வேளை அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேரும் நிலையில், அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க. நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும்.

அரசியல் முக்கியத்துவம்: ""கடந்த காலத்தில் வேலூர் சிறை வாயிலில் காத்திருந்து வைகோவை சென்று சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால், பெரிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும் முதல்வரைச் சந்தித்து நலம் விசாரிக்கும் சாதாரண பண்புகூட வைகோவுக்கு இல்லை'' என்று அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அரசியல் பின்னணியில் வைகோவின் ஒப்புதலுடன், மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

நலம் மட்டுமே...: ""ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் 50 ஆண்டுகள் அவருடன் பழகியவன் என்ற முறையிலும் முதல்வரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முதல்வர் விளக்கினார்'' என்றார் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன்.

Sunday, February 22, 2009

அடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் !



CNN-IBN தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள்:

  • திரிசங்குப் பாராளுமன்றம் நிச்சியம்
  • காங்கிரஸ் கூட்டணிக்கு (ஐக்கிய ஜனநாயக முன்னணி) 215லிருந்து 235க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 36 சதவீத வாக்குகள் பெறக்கூடும்

  • பா.ஜ.க கூட்டணிக்கு (தேசிய ஜனநாயக முன்னணி) 165லிருந்து 185க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 29 சதவீத வாக்குகள் பெறலாம்

  • யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மாநிலக் கட்சிகளின் கையில் இருக்கிறது

  • ஆட்சி அமைப்பதைத் தீர்மானிப்பதில் மூன்று முக்கிய மாநிலங்கள்- உ,பி, பீகார், தமிழ்நாடு ஆகியவற்றின் முடிவுகள் முக்கியப் பங்கு வகிக்கும்
  • இந்த மாநிலங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் என்பதால் அவற்றைக் கருத்துக் கணிப்புகள் மூலம் கண்டறிவது சிரமம
முழு விவரங்களுக்கு: http://ibnlive.in.com/politics/

வாசகர் வாக்கெடுப்பு: மன்மோகன் முன்னிலை

இந்தப் பதிவில் சில வாக்கெடுப்புக்களை நடத்தி வருகிறோம். இங்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை இந்திய வாக்காளர் எண்ணிக்கையில் மிகச் சிறிய துளி என்பதால் இந்தக் கணிப்புகள் எவ்வளவு தூரம் தேர்தலில் பிரதிபலிக்கும் எனத் தெரியாது. அப்படிக் கண்டு பிடிப்பதும் அவற்றின் நோக்கமல்ல.

மூட் மீட்டர்ஸ்

அவை இந்தப் பதிவிற்கு வரும் வாசகர்களின் மனநிலை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்ட Mood Meters. இந்த வாசகர்கள் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிப்பவர்கள், அதைக் குறித்து ஒரு கருத்துக் கொண்டவர்கள், அதை வெளிப்படுத்த முனைபவர்கள் என்பதால் இந்த வாக்கெடுப்புக்களும் என்னளவில் முகியமானவையே. இந்த 'மூட் மீட்டர்'களில் கிடைத்த தகவல்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

அடுத்த பிரதமர் யார்?

அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி வாசகர்கள் முன் வைக்கப்பட்டது. ஒரு வார காலம் நடந்த இந்தக் கணிப்பு பிப்ரவரி 19ம் தேதி இந்திய நேரம் 12:17க்கு முடிவடைந்தது. இந்தக் கணிப்பில் 481 வாசகர்கள் வாக்களித்துள்ளார்கள்

இந்த வாக்கெடுப்பில் மன்மோகன்சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 167 வாசகர்கள் தங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவித்துள்ளனர். அதாவது பதிவான வாக்குகளில் 34 சதவீதம் அவருக்கு ஆதரவாகப் பதிவாகி உள்ளது

ஆனால் போட்டியில் அத்வானி அவருக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார். அவர் பெற்ற வாக்குகள் 150. அதாவது 31%

மற்ற எவரையும் வாக்காளர்கள் பொருட்படுத்தவே இல்லை. ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவரும் சற்றேறக்குறைய அடுத்த நிலையில் இருக்கிறார்கள். ஒருவேளை அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-பாஜக அவர்களை தங்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தலாம் (Next Generation Prime Minstrerial Candidates) ஆனால் அந்தச் சூழ்நிலையை இப்போது கணிக்க முடியாது. அதற்குள் கூவத்தில் நிறைய தண்ணீர் (சாக்கடை என்று வாசிக்க) ஓடியிருக்கும்.

வாக்கெடுப்பின் முடிவுகள்:

பதிவான வாக்குகள்: 481

மன்மோகன் சிங்: 167 (34%)
பிராணப் முகர்ஜி: 7 (1%)
ராகுல் காந்தி: 40 (8%)
அத்வானி 150 (31%)
நரேந்திர மோடி 34 (7%)
மாயாவதி 8 (1%)
ஜெயலலிதா 23 (4%)
இவர்களில் எவரும் இல்லை 52% (10)

வாக்குப் பதிவு முடிந்த தேதி 19/2/09 12:17

கூட்டணிகள் உறுதிப்பட்டு, பிரசாரங்கள் சூடு பிடித்த பின்னர், தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதே கேள்வியை மீண்டும் முன் வைத்து வாக்கெடுப்பு நடத்த எண்ணியுள்ளேன்

இதே போல வேறு சில கேள்விகளை முன் வைத்தும் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.

இலங்கைப் பிரசினை தேர்தலின் போது மறக்கடிக்கப்பட்டுவிடுமா?

இலங்கைப் பிரசினை தேர்தலின் போது மறக்கடிக்கப்பட்டுவிடுமா?என்ற கேள்வி மீதான வாக்கெடுப்பு பிப்ரவரி 10ம் தேதி இந்திய நேரம் காலை 6:09க்குத் துவங்கியது பிப்ரவரி 16ம் தேதி மாலை 4:48 வரை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இலங்கைப் பிரசினை காங்கிரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை வாக்களித்தவர்கள் உரத்த குரலில் சொல்லியிருக்கிறார்கள்.(59%)

வாக்கெடுப்பின் முடிவுகள்:

பதிவான வாக்குகள் 176

காங்,கிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்: 104 (59%)
விஜயகாந்த் வளர்ச்சியைப் பாதிக்கும்: 14 (7%)
மறக்கடிக்கப்பட்டுவிடும் 58 (32%)

கட்சிகளின் தேர்தல் நிதி வசூல்

கட்சிகளின் தேர்தல் நிதி வசூல் பற்றியும் ஒரு கேள்வி வாசகர்கள் முன் வைக்கப்பட்டது. அது குறித்த வாக்கெடுப்பின் விவரங்கள்:

பதிவானவை 79
கட்சிகளின் தேர்தல் நிதி வசூல்:

வெளிப்படையாக இருக்க வேண்டும்: 31 (39%)
தடைசெய்யப்படவேண்டும் : 29 (36%)
உச்ச வரம்பு வேண்டும் 19 (24%)
வரி விதிக்கப்பட வேண்டும் 34 (43%)

ஏன் இந்தத் தனிப்பதிவு?

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள்தான் Side Barல் இருக்கின்றனவே, எதற்கு தனியாக ஒரு பதிவு என நீங்கள் கேட்கலாம். இனி வரும் வாக்கெடுப்புக்களுக்கு இடமளிக்கும் வகையிலும், லேஅவுட் அடைசலாக மாறுவதைத் தவிர்க்கும் பொருட்டும் பழைய வாக்கெடுப்புக்களை அகற்றத் தீர்மானித்திருக்கிறேன். அதே நேரம் அந்தத் தகவல்கள் சேமிக்கப்பட வேண்டும் என்பதால் இந்தத் தனிப் பதிவு

இந்தத் தனிப்பதிவு வெளியான பின் இரு தினங்கள் வரை Side Barல் இந்த வாக்கெடுப்பின் விவரங்கள் தொடர்ந்து இடம் பெறும். எவரேனும் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு. இரு தினங்களுக்குப் பின் அந்த 'மூட் மீட்டர்'கள் சைட்பாரிலிருந்து அகற்றப்படும்.

-மாலன்

Saturday, February 21, 2009

அதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி

தில்லியிலிருந்து ரேணு மிட்டல்

அரசியல் என்பது சாத்தியமாவதைச் செய்யும் கலை.அரசியலில் நிரந்த பகைவர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. தெற்கே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் எதையாவது சுட்டிக் காட்டுகின்றன என்றால் அது அரசியல் கூட்டணிகளில் எத்தகைய பிரிவும் கூட்டும் சாத்தியங்கள்தான்-அதுவும் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்- என்பதைத்தான்.

ஜெயலலிதாவின் அதிமுகவோடு உறவைப் புதுப்பித்துக் கொள்ள சோனியா விரும்புகிறார் என கூறப்படுகிறது

ஜெயலலிதா காங்கிரசிற்கு பகிரங்கமாக விடுத்த அழைப்பு, ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்தான் என்று கட்சியில் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிகிறது.

இரண்டு கட்சிகளுக்குமிடையே கூட்டணி என்ற யோசனையுடன் ஜெயலலிதாவை சந்திக்க நம்பிக்கைக்குரிய ஒருவரை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஜெயலலிதா அந்த யோசனையை வரவேற்றதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரசுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதில் தனக்கு ஏதும் தயக்கமில்லை என பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் முன் வந்தார்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துள்ளது. திமுகவுடன் கூட்டைத் தொடர்வது தற்கொலைக்குச் சமம் என்றும், குறிப்பாக கருணாநிதியின் உடல் நலம் பலவீனமடைந்து வரும் நிலையில் அவரால் தேர்தல் பிரசாரத்திற்கு வர இயலாத சூழ்நிலை இருப்பதையும் எடுத்துச் சொல்லி சிதம்பரம் சோனியாவை இந்த யோச்னைக்கு சம்மதிக்க வைத்து விட்டார் எனச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து மூப்பனார் வெளியேறி, தனிக்கட்சி கண்ட போது மூப்பனாருடன் சிதம்பரமும் வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றூ நிலைமை மாறிவிட்டது.

குலாம் நபி ஆசாத்தை தமிழ்நாடு காங்கிரசின் விவகாரங்களைக் கவனிக்கும் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது அதிமுகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவிரும்புவதன் இன்னொரு அடையாளமாகக் கொள்ளலாம். அதிமுகவுடன் அவருக்கு நல்ல உறவு உண்டு. நாடாளுமன்றமென்றால் மூன்றிலொரு பங்கு இடம் உங்களுக்கு, இரண்டில் மூன்று பங்கு இடம் எங்களுக்கு; அதே போல சட்டமன்றம் என்றால் மூன்றிலொரு பங்கு இடம் எங்களுக்கு இரண்டில் மூன்று பங்கு இடம் உங்களுக்கு; என்ற பார்முலாவை உருவாக்கி அதை எம்.ஜி.ஆரை ஏற்கச் செய்தவர் அவர்.

ஜெயலலிதாவின் பேச்சு பற்றி கருத்துக்கூறுமாறு கேட்டபோது " இன்று " திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூறிய அவர் என்னவானலும் சரி, கூட்டணி தொடரும் என்று சொல்லவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது

கூட்டணி மாறுவது பற்றி காங்கிரஸ் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது ஜெயலலிதா அதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணி மாறுவதற்கான மறைமுக நிர்பந்தத்தை ஏற்படுத்துவது, ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் திமுகவில் குழப்பதை ஏற்படுத்துவது என்பதோடு, காங்-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவது ஆகியவைதான் அவர் பகிரங்கமாகக் காங்கிரசிற்கு அழைப்பு விடக் காரணம்

அதிமுக அதிக இடங்களைப் பெற்றால், தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்க அதன ஆதரவு தேவைப்பட்டால், அப்போது அதை வழிக்குக் கொண்டுவருவது கஷ்டம் என்பதால் காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சிதம்பரம் போன்றவர்களுக்கு சரியான கூட்டணி அமையாவிட்டால் தன் எம்.பி. சீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கவலை.

கடந்த முறை தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை அது 18 இடங்களைக் கேட்கிறது. அது கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதாலும் அது அணி மாற நினைக்கிறது.

நன்றி: ரெடீஃப்.காம்

ரெடீஃப் செய்தியைப் பார்க்க:
http://www.rediff.com/news/2009/feb/20tn-cong-wants-an-a