தேர்தல் ஆணையம் இன்று நாடாளுமன்ற தேர்தல் அட்டவணையை வெளியிட்டு இருக்கிறது. ஐந்து பகுதிகளாக நடக்கும் இந்த தேர்தல் 543 தொகுதிகளை உள்ளடக்கியது. ஏப்ரல் 16ம் தேதி தொடங்கி, மே 13 வரை, ஐந்து பகுதிகளாக வாக்களிப்பு நடைபெறும்.தேர்தல் ஆணையத்தின் முதன்மை கமிஷ்னர் திரு. கோபால்சாமி இவைகளை அறிவித்தார்.
உத்தரப்பிரதேசம் மற்றும் ஜம்மு & காஷ்மீர் மாநிலங்களில் ஐந்து பிரிவாகவும், பீஹாரில் நான்கு பிரிவுகளாகவும், மஹாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்காளத்தில் மூன்று பிரிவுகளாகவும் தேர்தல் நடைபெறும். ஆந்திரா, அஸ்ஸாம், மணிப்பூர், ஜார்க்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், ஒரிஸ்ஸா மற்றும் பஞ்சாப்பில் இரண்டு பகுதிகளாக நடைபெறும். மீதமிருக்கும் 15 மாநிலங்களுக்கும், 7 யூனியன் பிரதேசங்களுக்கும் ஒரே நாளில் நடைபெறும்.
முதல் பகுதி - ஏப்ரல் 16 (124 தொகுதிகள்)
இரண்டாம் பகுதி - ஏப்ரல் 23 (141 தொகுதிகள்)
மூன்றாம் பகுதி - ஏப்ரல் 30 (107 தொகுதிகள்)
நான்காம் பகுதி - மே 7 (85 தொகுதிகள்)
ஐந்தாம் பகுதி - மே 13 (86 தொகுதிகள்)
முடிவுகள் மே 16இல் இருக்கும்.
சில புள்ளிவிவரங்கள்.
- இருந்த 543 தொகுதிகளில், 499 தொகுதிகள் சீரமைக்கப்பட்டிருக்கிறது
- 71 இலட்சம் போலிஸார் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்
- 714 மில்லியன் வாக்காளர்கள் (71.3 கோடி) இந்த தேர்தலில் பங்கேற்பார்கள், அதில் 43 மில்லியன் (4.3 கோடி) புது வாக்காளர்கள் முதல்முறையாக வாக்களிப்பார்கள்
- 8,28,804 தேர்தல் பூத்துகள் அமைக்கப்படும்
- 11 இலட்சம், மிண்ணணு வாக்களிப்பு எந்திரங்கள் பயன்படுத்தப்படும்
- இப்போதைய ஆட்சி காலம், ஜூன் 1 வ்ரை இருக்கிறது.புதிய நாடாளுமன்றம் ஜூன் 2 தேதி போல இருக்கும்
1 comment:
நாடாளுமன்ற தேர்தல் எதற்காக?
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அயிந்து ஆண்டுகளுக்கு அனைத்து சலுகைகளை அனுபவிக்கவும், அரசு வழங்கும் தொகுதி நிதியில் கமிசின் பெற்று தங்களை வளப்படுத்தி கொள்ளவும் ,மந்திரி பதவி கிடைத்தால் பல கோடிகளுக்கு அதிபர் ஆகவும் வழி வகை செய்யவும்,மன்ற அலுவல்களை நடைபெறவிடாமல் கூச்சல் போட்டும், மக்களை பற்றி கவலைப்படாமல் ,குழப்பம் விளைவிக்கவும் ஆட்களை தேர்ந்தெடுத்து அனுப்பும் ஒரு சடங்கு.
இந்த எழவிற்கு பல்லாயிரம் கோடி ரூபாய்கள் அரசு தரப்பிலும், அதைப்போல பத்து மடங்கு அரசியல் கட்சி வேட்பாளர்கள் தரப்பிலும் தண்டம்
செலவு செய்த தொகைக்கு மேல் தேர்தலில் ஜெயித்த கட்சிகள் சம்பாதித்து விடும்
தோத்த கட்சிகள் அடுத்த தேர்தல் வரைக்கும் மக்களிடம் உண்டியல் குளுக்கிகொண்டும், ஏற்க்கெனவே கொள்ளையடித்து வைத்துள்ள காசிலிருந்து செலவு செய்து காலத்தை ஓட்டும்
மக்களுக்கு ஒரு பிரிவினருக்கு அணித்து சலுகைகளும், பெருவாரியான பிரிவினருக்கு கணக்கிலடங்கா வரிகளும் அளித்து மக்களை துன்பபடுத்தும் இந்த முறையில் கேடிகளும், குற்றம்புரிந்தவர்களும், சமூக விரோதிகளும்,ஒழுக்கம் கெட்டவர்களும்,அதிகமாக புழல்வதால் இன்று நாடு பலவிதத்தில் முன்னேற்றம் அடைந்தாலும் ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர்.
அரசியலில் அயோக்கியர்கள் ஒதுக்கப்படவேண்டும்
அப்போதுதான் உண்மையான ஜனநாயகம் மலரும்.
Post a Comment