நேற்றைய சோனியா கூட்டத்திலிருந்து:
சோனியா மேடைக்கு வரும்போது திருமாவளவன் பேசிக் கொண்டிருந்தார். உடனே, திருமாவளவன், 'சோனியா அம்மையார் வாழ்க, வாழ்க' என கோஷம் எழுப்பினார்.
*
சோனியா தனது பேச்சை முடிக்கும் முன்பாகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் அனைவரது பெயரையும் வரிசையாகக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார். ஆனால், திருமாவளவனின் பெயரை மட்டும் சோனியா குறிப்பிடவில்லை.
இதனால், மேடையில் அமர்ந்திருந்த திருமாவளவன் அதிர்ச்சி அடைந்தார். அவரது கட்சியினரும் மெüனமாக நின்றனர். இதனால், திருமாவளவன் உற்சாகமிழந்து காணப்பட்டார்.
*
இந்திய அரசைப் பொறுத்தவரை பிரபாகரன் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளி விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்திய அரசின் நிலைப்பாடு
சனிக்கிழமை நடந்த செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங்
ஆண்டன் பாலசிங்கத்தின் ஆலோசகர் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு கடந்த 3.11.07-ல் இரங்கல் கவிதை எழுதினேன்.ஆனால், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நான் கவிதை எழுதியதாக ஜெயலலிதா குற்றஞ்சாட்டினார். முதல்வர் பதவியில் இருந்து விலகவும், ஆட்சியில் இருந்து திமுக வெளியேறவும் கோரினார்
இந்திய அரசில் பங்கேற்றிருந்த திமுகவின் தலைவர் கருணாநிதி ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டத்தில்
*மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையால்தான் அங்கு கனரக ஆயுதங்கள் உபயோகிப்பதை இலங்கை அரசு நிறுத்தியுள்ளது
நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா
Heavy casualties reported in northern Sri Lanka
இன்று வெளியான இந்து நாளிதழின் செய்தித் தலைப்பு
1 comment:
தேர்தலுக்கு பிறகு தமிழ் ஈழம் பிரச்சனையை மறந்து விடுவோம் என நினைக்கிறேன் (எப்படி முல்லை பெரியார் , ஒகேனக்கல் , சட்ட கல்லூரி மாணவர் வன்முறை , மும்பை தாஜ் ஹோட்டல் தீவிரவாதம் எல்லாவற்றையும் மறந்தோமோ )
குப்பன்_யாஹூ
Post a Comment