முந்தைய பதிவுகள்:
1. உ.பி.: முலாயம் சிங் யாதவ்-ன் பிஜேபி கூட்டு
2. முலாயம் சிங் யாதவ்: 'கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !'
3. 'காங்கிரஸ் பிச்சை கேட்காது'
4. சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு
உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 24 தொகுதி வேட்பாளர்களின் பெயர்களை, அறிவித்து இருக்கிறது. சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும், ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள்.
இந்தியாவில் மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் 80 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் தற்போது பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.
இந்த மாநிலத்தில் காங்கிரசும், முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட பேச்சுவார்த்தை நடந்து வந்தது. 25 தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கேட்டது. ஆனால் அந்த தொகுதிகளை கொடுக்க சமாஜ்வாதி முன்வராததால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்த நிலையில் திடீரான சமாஜ்வாடி கட்சி 62 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்தது.
இந்தி நடிகர் ராஜ் பப்பரின் பெயரும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறது. அவர் பதேபூர் தொகுதியில் போட்டியிடுகிறார். நடிகை நூர் பானு, ராம்பூர் தொகுதியில் நிறுத்தப்பட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் தலைவர் சல்மான் குரேஷி, பருக்காபாத் பாராளுமன்ற தொகுதியிலும், சஞ்சய் சிங் சுல்தான்பூரிலும் களம் இறங்குகிறார்கள்.
இந்த நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளரான திக்விஜய் சிங் கூறுகையில், "உத்தரபிரதேச மாநிலத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது பற்றி சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. எங்கள் கதவு திறந்தே இருக்கிறது'' என்றார்.
No comments:
Post a Comment