இந்தப்பட்டியலில் பெரும்பாலோர் நடப்பு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்கள் ஆவர். நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மக்களவையில் பணத்தை கொண்டு வந்து காட்டிய 3 எம்.பி.க்களில் ஒருவரான பக்கான்சிங் குலாஸ்தேவும் (Fagan Singh Kulste) இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.
இதில்
- கர்நாடகம் - 11 வேட்பாளர்கள்
- சத்தீஸ்கர் மாநிலம் - 11
- மத்தியப்பிரதேசம் - 12
- ராஜஸ்தான் - 12
- கர்நாடக மாநிலத்தின் தற்போதைய எம்.பி.க்கள் 9 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.
- சத்தீஸ்கர் மாநிலத்தில் இருந்து தற்போதைய எம்.பி.க்கள் 5 பேருக்கு மீண்டும் டிக்கெட் வழங்கப் பட்டுள்ளது.
- மத்தியப்பிரதேசத்தில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலில் தற்போதைய நாடாளு மன்ற உறுப்பினர்கள் 9 பேர் இடம் பெற்றுள்ளனர்.
- ராஜஸ்தான் மாநிலத்தில் 8 நடப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிறுத்தப்படுகின்றனர்.
- சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேசத்தின் விதிஷா மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார்.
- கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா கர்நாடகாவின் ஷிமோகா தொகுதியில் நிறுத்தப்படு கிறார்.
- அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை மந்திரி ஸ்ரீராமுலுவின் சகோதரி சாந்தி (பெல்லாரி)
- பொதுப் பணித்துறை மந்திரி சி.எம். உதாழியின் மகன் சிவ்குமார் உதாதி (ஹலேரி)
- சுகாதாரத் துறை மந்திரி உமேஷ் கட்டியின் சகோதரர் ரமேஷ் கட்டி (சிக்கொடி)
- கால்நடை பராமரிப்புத்துறை மந்திரி ரெவு நாயக் பெலமகி (குல்பர்கா)
- ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜேவின் சகோதரி யசோதரா ராஜே குவாலியர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- பிகானீர் தொகுதியின் உறுப்பினரான நடிகர் தர்மேந்திராவின் பெயர் இந்த பட்டியலில் இல்லை. தற்போது ரிசர்வ் தொகுதியாக உள்ள இது அர்ஜூன் மேக்வால் என்பவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
- கட்சித்தலைவர் ராஜ்நாத் சிங் காசியாபாத் தொகுதியில் போட்டியிடுவார்.
- ராஜஸ்தான் முன்னாள் முதல்-மந்திரி வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் ஜலவார் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- ராஜ்ய சபாவின் எதிர்க்கட்சி தலைவர் ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்திரா சிங் பார்மர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
- முன்னாள் மந்திரி பக்கன் சிங் லோவ்தே (மண்டியா)
- அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங்கின் சகோதரர் லட்சுமண் சிங் (ராஜ்கார்)
- பா.ஜனதா கட்சி யின் பொதுச்செயலாளர் தவார் சந்த் கெலாட் (டெவாஷ்)
- முன்னாள் மத்திய மந்திரி சத்யநாராயண் ஜடியா (உஜ்ஜயினி)
பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் வெங்கையா நாயுடு, அருண்ஜேட்லி ஆகியோர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடப்போவ தில்லை என்றும், அவர்கள் கட்சியின் தேர்தல் பணிகளை கவனிப்பார்கள் என்றும் எல்.கே.அத்வானி தெரிவித்துள்ளார்.
வெங்கையா நாயுடு, அருண் ஜேட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோர் தற்போது ராஜ்யசபா எம்.பி.களாக இருந்து வருகின்றனர்.
அருண் ஜேட்லி
ஆகிய மாநிலங்களின் தேர்தல் பணிகளை பார்த்துக்கொள்கிறார். மேலும், கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு பொறுப்புகளையும் அருண்ஜேட்லி கவனித்துக் கொள்கிறார்.
சுஷ்மா சுவராஜ்
- மத்திய பிரதேசம்,
- சட்டீஸ்கர்,
- ஜார்கண்ட்
சாந்த குமார் மற்றும் பகத்சிங் கொசூரி
- ஜம்முகாஷ்மீர்,
- இமாச்சல் பிரதேசம்,
- உத்தரகாண்ட்,
- அரியானா
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி
- குஜராத்,
- மகாராஷ்டிரா,
- கோவா,
- டையூ,
- டாமன் உள்ளிட்ட மேற்கு மண்டல மாநிலங்களின்
ஒரிசா மாநில தேர்தல் பொறுப் பாளராக வி.சதீஷும், ராஜஸ்தானைச் சேர்ந்த கட்சி தலைவர் சவுதன்சிங், எஸ்.எஸ்.அலுவாலியா ஆகியோர் வடகிழக்கு மாநிலங்கள், அஸ்ஸாமில் தேர்தல் பொறுப்புகளை பார்த்துக் கொள்கின்றனர்.
முந்தைய செய்தி: நாராயணன்: பாஜகவின் தேர்தல் முகங்கள்
No comments:
Post a Comment