தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திறவூற்றில் (open source) அமைந்த மென்பொருட்களைப் பயன்படுத்தப்போவதாக பாஜக இன்று வெளியிட்ட தனது தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வை (IT Vision Document) ஆவணத்தில் தெரிவித்துள்ளது.
கடந்தமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அன்றைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிரமோத் மகாஜன், எல்லாவிதங்களிலும் மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை ஆதரித்ததோடு மட்டுமல்லால், லினக்ஸ் ஆதரவாளர்களைக் கடிந்து கொள்ளவும் செய்தார். இன்று பாஜக அதற்கு நேர் எதிரான நிலையை அறிவித்திருக்கிறது.
இன்று கட்சியின் கணினி சம்பந்தப்பட்ட அலுவல்களில் திறவூற்று மென் பொருட்களையே பாஜக பயன்படுத்தி வருகிறது. மேலை நாடுகள் சில சில்ல்றைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதற்கு ராயல்டி என்ற பெயரில் நம்மிடம் கொள்ளைப் பணம் கறக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவதாகவும் டிஜிட்டல் இறையாண்மையைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருக்கிறது பாஜக.
அட பரவாயில்லையே, நம் அரசியல் கட்சிகள் இதைப் பற்றியெல்லாம் கூட யோசிக்கிறார்களா?
Download Eating the Alphabet
5 years ago
5 comments:
பா ஜ கா ஆட்சி பிடிப்பது மிக கடினமே.
பல மாநிலங்களில் கூட்டணி அமைய வில்லை.
அருண் ஜெட்லி வேறு காங்கிரஸ் தாவப் போகிறார் போல.
இவற்றையும் மீறி அத்வானி.காம் வெற்றி பெற்றால் வாழ்த்துக்கள்.
திரவூற்றல் (ஓபன் சோர்ஸ்) பயன் படுத்த மிக கடினமாக உள்ளது, அதனால் தான் அந்த பொருளை யாரும் வாங்க மறுக்கிறார்கள்.
பா ஜ கா இப்படி சொல்வது கூட ஒருவகையான சர்வாதிகாரமே.
Open source will reduce the efficiancy in Govt & private offices.
இப்படி ஒரு வாக்குறுதியை தேர்தலொன்றில் வைபப்து பெரிய விஷயம். அதற்கான எமது சாதகமான ஆதரவை நாம் வழங்கித்தான் ஆகவேண்டும். ஆனால் மென்பொருள் இறையாண்மை மட்டுமே அரசியல் அல்ல என்பதால், ஏனைய கொள்கைகள், கட்சியின் இயல்பு என்பவற்றை கருத்திலெடுத்துத்தான் ஒட்டுப்போட வேண்டும்.
கட்டற்ற திறந்த மூல மென்பொருட்கள் வழியே தொழிநுட்ப இறையாண்மையை நோக்கி நகர்வது ஆரோக்கியமான திட்டம்.
பி ஜே பீ க்கு வாழ்த்துக்கள்.
இது தொடர்பான பதிவொன்று
இதைப் பத்தி எல்லாம் யோசிக்கறாங்களா!!!
ஆச்சரியமாக இருக்கிறது.
அன்புள்ள குப்பன் யாஹு,
>>Open source will reduce the efficiancy in Govt & private offices.<<
எதுவும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவை அல்ல. ஆனால் நீங்கள் இப்படிப் பொத்தாம் பொதுவாக, ஆதாரமில்லாமல், திறவூற்று மென்பொருட்கள் மீது மட்டையடி அடிப்பது நியாயமல்ல.
நீங்கள் எந்த மென்பொருளைப் பயன்படுத்திவிட்டு இந்த முடிவிற்கு வந்துள்ளீர்கள் என அறிய ஆவலாக இருக்கிறேன்.
திறவூற்று மென்பொருட்களை நம் தேவைக்கேற்ப 'கஸ்டமைஸ்' செய்து கொள்ள முடியும். எனவே நீங்கள் சொல்கிற பிரசினை- அப்படி ஏதேனுமிருந்தால்- சரி செய்யக் கூடியதே.
இந்தியா போன்ற நாட்டில் எந்தவொரு விஷயத்தையும் எண்ணிக்கை என்ற கோணத்திலும் பார்க்க வேண்டியுள்ளது. இலவச மென்பொருட்கள் இருந்தால் நம் பள்ளிகள், குறிப்பாக கிராமப்புறப் பள்ளிகள், செலவு குறையும் என்ற அடிப்படையில் கணினிகளைக் கற்றுத் தர முன்வரக் கூடும். அது சாத்தியமானால், ஒரு 10 வருடத்தில் நாம் digital divide என்ற பிரசினையைப் பெருமளவிற்குக் கடந்து விட முடியும்.அதைக் கடந்துவிட்டால் இந்தியா பெருமளவிற்கு வலிமை பெறும்.
அதற்காக, இந்த ஒரு விஷயத்தின் அடிப்படையில் நான் உங்களை பாஜகவிற்கு ஓட்டுப் போடச் சொல்லவில்லை.
ஆனால் இது போன்ற சிந்தனைகள் அரசியல் கட்சிகளிடம் தோன்றுவதை வரவேற்கிறேன்.
மாலன்
அன்புள்ள மாலன்
எனது பின்னூட்டம் விளையாட்டாய் மேம்போக்காக எழுத பட்டது, மன்னிக்கவும்.
ஒரு அற்புதமான தேர்தல் சூழ்நிலையை பா ஜ காவிற்கு சரியாக பயன் படுத்த தெரிய வில்லையே என்ற விரக்தியில் எழுத பட்டது என்று கூட கொள்ளலாம்.
நான் நான்கு ஆண்டுகட்கு முன்பு ஒரு தனியார் நிறுவனத்தில் ஓபன் சோர்ஸ் பொருள், ஓபன் ஆபீஸ் பயன் படுத்தினேன். அதில் எக்ஸ்செல், வோர்ட் போன்றவை பயன் படுத்தும் பொது மிகுந்த நேரம் செலவிட வேண்டி இருந்தது. அதே பணியை நான் மைக்ரோசாப்ட் எக்ஸ்செல், வோர்ட் இல் விரைவாக முடிக்க முடிந்தது.
ஒரு வேளை தவறு என் மீதோ என் வேகம் மீதோ கூட இருக்கலாம்.
I too against Bill Gates monoply practices (money making mind) but we should acknowledge that MS office is a wonderful product. It has surpassed not only wordstar, lotus123 but also Oracle, SAp, peoplesoft ERP's.
என் ஆலோசனைகள், வேண்டுகோள்கள் பா ஜ க விற்கு@
நீங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லா பொது நூலகத்திலும் கணினி, இனைய இணைப்பு கொடுங்கள். (mainly in villages)
இந்திய முழுவதும் உள்ள போக்குவரத்து அலுவலகங்களையும் கணினி இணையம் மூலம் தொடர்பு படுத்துங்கள்.
Currently I can take a driving licence with chennai address in Tiruvanmiyur and I can again take a license in Erode with erode address. This malpractices can be stopped if we have integrated system.
Similary my personal data in my PAN card, driving license, ration card, voter id all should be synchronised and linked.
Integrate all colleges through internet so that a genious professor working in IIM Ahmedabad can teach throug vedio conferencing to a college boy who is studying in srivaikuntam college.
Give computers at subisdy price (say Rs.3000 or free) to all household and give free internet connections in all villages.
BJP should encourage Indian who develop/innovate software products.
But I appreciate you Malan for bringing out the fact of Digital Divide (usage of computers, net in city & village)
Post a Comment