Friday, March 06, 2009

Telugu Desam & DMK: இலவச கலர் டிவி

ஆந்திர மாநிலத்தில், பாராளுமன்ற தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடைபெறுகிறது.
 • சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம், 
 • காங்கிரஸ், 
 • தெலுங்கு தேசம் & தெலுங்கானா ராஷ்டிர சமிதி
 • பாஜக 
என நான்கு முனை போட்டி ஆந்திராவில் நிலவுகிறது.

~oOo~

சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்:
 • கேபிள் இணைப்புடன் கூடிய இலவச வண்ணத் தொலைக்காட்சி
 • பத்தாயிரம் கோடி ரூபாய் செலவில், வறுமைக்கோட்டிற்கு கீழேயுள்ள குடும்பங்களுக்கு உதவி தொகையாக மாதம் ரூ. 2000 ரொக்கப்பணம்
  • பரம ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரமும்,
  • ஏழைகளுக்கு ரூ.1500-ம்,
  • வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்களுக்கு ரூ.1000 வீதமும் வழங்கப்படும்.
 • ஏழைக்குடும்பத்தினர் வீடுகளில் தலா 2 மின்விளக்குகள், ஒரு மின்விசிறிக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்.
 • மக்களின் மதுப்பழக்கத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
 • விளிம்பு நிலையாளர்களுக்கு இலவச மருத்துவ சேமநல நிதி, காப்பீடு
 • முதியவர்களுக்கு உதவித் தொகை
 • கணவனை இழந்த பெண்களுக்கு மாதாந்திர பென்சன்
 • வெள்ளை ரேசன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு 25 கிலோ இலவச அரிசி

~oOo~


மாநில காங்கிரஸ் தலைவர் கக்ரபாணி தங்கள் ஆட்சியின் ஆரோக்யஸ்ரீ மற்றும் இரண்டு ரூபாய்க்கு கிலோ அரிசி போன்ற திட்டங்களை மக்களிடம் பிரச்சாரம் செய்தாலே தங்களின் வெற்றி எளிதாகும் என்றிருக்கிறார்.


~oOo~


சிரஞ்சிவியின் பிரஜா ராஜியம் 
 • கடந்த பதினைந்து ஆண்டுகளாக அரசியலில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஊழல் புகார்களை சிறப்பு நீதிமன்றங்கள் மூலம் உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவேன் என்றும்
 • ஏழை விவசாயிகளுக்கு இலவச நிலம் வழங்கப்படும் என்றும்
தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி தந்திருக்கிறார்.
"வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்திருப்பது, மோசடி மற்றும் ஊழல் ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என ஜனாதிபதி பிரதிபா பட்டீலிடம், ஆந்திராவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.


~oOo~


சந்திரபாபு நாயுடு செய்த ஊழல் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாளில் வெளியிட்டதில் இருந்து:

 • சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் செய்துள்ள முறைகேடுகளில் ஹெரிடேஜ் புட் லிட்., தொடர்பான ஊழல் குறிப்பிடத்தக்கது.
 • ஒரே நிறுவனத்திற்குள் சட்ட விரோதமாக வர்த்தகத்தில் ஈடுபடுவது,
 • கூட்டுச் சேர்ந்து சதியில் ஈடுபடுவது ஆகிய முறைகேடுகள் நடந்துள்ளன.
 • அளவுக்கு அதிகமாக சொத்து குவித்தது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்துவதற்கு எதிராக கோர்ட்டில் இடைக்காலத் தடை வாங்கியுள்ளார்.
 • தனது ஆட்சிக் காலத்தில் நடந்த எலுரு ஊழல் தொடர்பான விசாரணைக்கும் தடை வாங்கியுள்ளார்.
 • சந்திரபாபு நாயுடுவின் ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்துள்ளது.
 • வேலைக்காக உணவுத் திட்டத்திலும் மோசடி நடந்துள்ளது.
 • போலி முத்திரைத் தாள் தொடர்பான விஷயத்தை ஊக்குவித்துள்ளார்.
 • ஸ்டான்போர்டு பல்கலையில் சந்திரபாபு நாயுடுவின் மகன் சீட் பெறுவதற்காக சத்யம் நிறுவனம் சார்பில் நிதி அளிக்கப்பட்டுள்ளது.
 • தெலுங்கு தேசம் கட்சியின் அடையாள அட்டை குறித்த விஷயத்திற்காகவும் சத்யம் நிறுவனத்திடம் இருந்து 80 கோடி ரூபாயை சந்திரபாபு நாயுடு பெற்றுள்ளார்.


~oOo~


மத்தியில் காங்கிரஸ் கூட்டணி மற்றும் பா.ஜனதா கூட்டணி அல்லாத
மூன்றாவது அணியில்
 • தேவேகவுடாவின் மதசார்பற்ற ஜனதா தளம்
 • 4 இடதுசாரி கம்யூனிஸ்ட்/மார்க்சிஸ்ட் கட்சிகள்
 • அ.தி.மு.க
 • தெலுங்கு தேசம் தெலுங்கானா ராஷ்டிர சமிதி
ஆகிய கட்சிகள் இணைந்து உள்ளன.

மாயாவதியும் இந்த அணியில் வந்து சேர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 comments:

enpaarvaiyil said...

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.

அதைப்போல ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும் வாக்காளர்களை பிச்சைக்காரர்கள் என்று எண்ணிக்கொண்டு (அரசு கஜானாவிலிருந்து )அதை தருகிறோம்,இதை தருகிறோம் என்று அறிவிப்புக்கள் விடுவது அநாகரீகமானது, அர்ர்த்தமட்ட்றது,கேலிக்குரியது.
இப்படி பிச்சை வாங்கி தேர்ந்தெடுக்கும் தலைவர்கள் அமைக்கும் அரசாங்கம் வெளிநாட்டில் பிச்சைஎடுத்து நம்மை எல்லாம் பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டது.
எதற்க்கெடுத்தாலும் உண்டி குலுக்குவது
வந்த பணத்திற்கு கணக்கு வழக்குகள் கிடையாது.
அயோக்கியர்களை பாதுகாக்கவே நீதி மன்றங்கள், சட்டங்கள்
அயோக்கியன் என்று தீர்ப்பு வழங்கபட்டாலும்,மேல்முறையீடு
என்று அவர்கள் தப்ப வழி வகை செய்யும் தீர்ப்பு.

ஏதாவது மக்களுக்குக்கு கொடுக்கவேண்டுமென்று
அரசியல்வாதிகள் நினைத்தால்
அவர்கள் சேர்த்து வைத்த தங்களுடைய சொத்து முழுவதையும் முதலில் பட்டினத்தார், போல்,புரண்டரத்தாசர் போல் செய்ததுபோல் ஒரு பைசா மீதமில்லாமல் தர்மம் செய்துவிட்டு பிறகு தேர்தலில் நிற்கட்டும்
பிறகு மக்கள் வரி பணத்தை வாரி வாரி மக்களுக்கு இறைக்கட்டும்

அவர்கள் சொத்துக்களை அப்படியே வைத்து கொள்வார்களாம்
ஒவ்வொரு தேர்தலிலும் கடைத் தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைப்பார்களாம்
இந்த நோய் இன்று நாடு முழுவதும் பரவிவிட்டது.
இதற்க்கு முடிவே கிடையாதா?
வெட்கம் கெட்ட அரசியல்வாதிகள்
வெட்கம் கெட்ட இலவசங்களுக்காக அலையும் வாக்காள பெருமக்கள்
தேர்தலுக்கு முன்பும் வன்முறை
தேர்தலின் போது வாக்குகளை செலுத்தமுடியாமல் வன்முறை
தேர்தலுக்கு பிறகு எதிர்கட்சிகளின் மீது வன்முறை.

இப்படியே நாடு சென்று கொண்டிருந்தால் நாடு என்னாவது?
கடவுளே நீதான் ஏதாவது செய்ய வேண்டும் இந்த நாட்டை காப்பாற்ற!

Anonymous said...

இப்போது விஜயகாந்தும் திராவிட கட்சிகளின் பாதையை தேர்ந்தெடுத்துவிட்டார் போலும்
ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்
தற்ப்போது அணைத்து மாணவ மாணவிகளுக்கும் இலவச மடி கணினி வழங்கப்படும்
இவ்வாறு தனித்தனியாக ஒவ்வொரு கட்சிகளும் அள்ளிவிடுவதை விடுத்து தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு கட்சியை ஒதுக்கி அந்த தலைவர்களை முதலமைச்சராகிவிட்டால் நல்லது.
தமிழ்நாட்டில் அணைத்து கட்சி கூட்டணி அமைத்தது தமிழ்நாட்டை பங்கு போட்டுக்கொள்ளலாம்
செலவும் மிச்சம், நேரமும் மிச்சம்