Thursday, March 19, 2009

எம்.பி. பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

தமிழ்நாட்டில் பல தொகுதிகள் மறுசீரமைப்பின் காரணமாக மாற்றம் பெற்றிருக்கின்ற்ன. எந்தக் கட்சி எந்தத் தொகுதியில் போட்டியிடும் என்பது அறிவிக்கப்படவில்லை. இப்போது மத்தியில் அமைச்சர்களாக உள்ளவர்களில் சிலர் தொகுதி மாறிப் போட்டியிடக்கூடும் எனச் செய்திகள் உலவுகின்றன. டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கும், ஆ.ராசா நீலகிரித் தொகுதியிலும் மாறிப் போட்டியிடக் கூடும்; ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ரகுபதி ஆகியோர் தொகுதி மாறிப் போட்டியிடக் கூடும்; சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி, பழனிமாணிக்கம் ஆகியோர் போட்டியிட மாட்டார்கள்; மணி சங்கர் ஐயருக்கு மீண்டும் மயிலாடுதுறைத் தொகுதி கிடைக்குமா என்பது சந்தேகம் எனப் பல செய்திகள் உலவுகின்றன. இப்போது எம்.பி.களாக இருப்பவர்களில் செ.குப்புசாமி, எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், சுகவனம், ராணி ஆகியோர் மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட மாட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது இன்றையத் தேதியில் இவை எல்லாம் ஊகங்களே.

தொகுதிப் பங்கீடு முடிய, வேட்பாளர் பட்டியல வெளியிடப்பட இன்னும் சில நாட்கள் ஆகலாம். அதற்குள் ஒரு Quick Survey: (அருகில் உள்ள பெட்டிகளில் வாக்களியுங்கள்)

4 comments:

yrskbalu said...

what is the use of changes? politicians will change or love for serving our peoples?
this will increse the expenses to parties. thats all malan sir

Boston Bala said...

---தங்கள் தொகுதியின் தற்போதைய MP மீண்டும் உங்கள் தொகுதியில் போட்டியிடுவதை வரவேற்கிறீர்களா?---

ஏற்கனவே கொள்ளையடித்து, குடும்பத்தாருக்கும் வேண்டிய பதவிகளை வாங்கிக் கொடுத்தவர் வேண்டுமா?

புதிதாக பணம் செலவழித்து, சுற்றாருக்கும் கடன்பட்டோர் ஜெயிக்கணுமா?

குப்பன்.யாஹூ said...

ஒரு சில எம்பி க்கள் தொகுதி மக்களுக்கு நன்மைகள் செய்து உள்ளனர். உதாரணம்: சிப்பிபாறை ரவிச்சந்திரன், அரக்கோணம் வேலு, பணகலக்ச்மி, மதுரை மோகன்.

ஒரு சில எம்பிக்களுக்கு தொகுதியில் எத்தனை தெரு, எத்தனை பள்ளிக்கூடம் என்ற விபரம் கூட தெரியாது, உதாரணம்; இளங்கோவன், ஜெ எம் ஆருன், தயாநிதி மாறன், வேங்கடபதி.

சிலரை போட்டி இன்றி தேர்ந்து எடுக்க வேண்டும், உதாரணம்- சிப்பி பாறை ரவிச்சந்திரன், வேலு, திருநாவுக்கரசர், பீ எச் பாண்டியன், மோகன்.


குப்பன்_யாஹூ

Sri Srinivasan V said...

Yes Maalan,
It is dificult to seggregate the MPs.
There are some good fellows.
Thanks for this collection on Election news.
Regards,
Srinivasan.