இந்த முறை தேர்தலில் மக்களை ஒட்டு போட ஊக்குவிக்க, பலவித மீடியா - தொலைகாட்சி மற்றும் பிரிண்ட் - இணைய தளங்கள்  -  பலவிதங்களில் முனனந்து வருகின்றன.
பெருவாரியான சமூக மாறுதல்கள் / சிந்தனைகள் / விழிப்புணர்வுகள் இன்று மீடியா பிரசாரம் மூலம் ஓரளவு சாத்யமாகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
சமூக தொடர்பு தளங்களான ஃபேஸ் புக் போன்றவைகளில்  இந்தியாவை வழி நடத்துங்கள் ( Lead India) போன்ற விழிப்புணர்வு குழுமங்கள் பெருகி வருகின்றன. இந்தியாவில் நீங்கள் காண விழையும் மாற்றம் முதலில் உங்களிடமிருந்து ஆரம்பிக்கட்டும் என்ற சிந்தனையின் அடிப்படையில் இந்த பிரசாரங்கள் அமைந்துள்ளன.
டாடா டீயும், ஜனகிரஹா என்ற தொண்டூழிய அமைப்பும் சேர்ந்து நடத்தும் Jaagore ( தமிழ் = விழித்திருங்கள்) என்ற பிரசாரமும், இணைய தளமும் ( www.jaagore.com) இன்றைய இளைஞர்களிடையே பிரபலம். டைம்ஸ் ஆப் இந்தியாவின் "லீட் இந்தியா" பிரசாரத்தின் இணைய தளத்தில் - http://lead.timesofindia.com/Home.aspx   ஓட்டுப் போடுவதின் முக்கியத்துவத்தை விளக்கி, நம் ஜனநாயகத்தை பற்றி அடிப்படை தகவல்களையும் பட்டியலிடப்பட்டுள்ளது. நாம் பாராளுமன்றத்துக்கு அனுப்பும் எம் பிக்களின் தகுதி, அவர்களின் பொறுப்புகள், அவற்றை அவர்கள் எப்படி பயன் படுத்துகின்றனர்,  / பயன்படுத்தவில்லை - போன்ற விவரங்களும் இங்கே உள்ளது.
தேசிய அளவில் இன்று பொதுத்தேர்தல்  வாக்குப் பதிவு 50லிருந்து 60 சதவிகித வட்டத்துள் இருந்து வருகிறது. பொதுவாக மேட்டுக்குடியினரும், மத்தியதர வகுப்பினரும் ஓட்டுச்சாவடி பக்கம் போவதில்லை என்ற கருத்து நிலவும் நிலையில், மேட்டுக்குடியினரால் அதிக அளவு உபயோகிக்கப்படும் இந்த புதிய மீடியா பிரசாரத்தினால் வாக்குப்பதிவு குறைந்தது 10 சதவிகிதம் உயர்ந்தாலே அது சாதனை!
ஆங்... அப்படி எல்லாம் பெரிசா ஒண்ணும் மாறிவிடாது என்ற எதிர்மறை  சிந்தனையாளர்களுக்காக  டைம்ஸ் ஆப் இந்தியாவின் லீட் இந்தியா பிரசார வீடியோ  ஒன்று, மாதிரிக்கு  இங்கே:
http://www.youtube.com/watch?v=pFs5vWxW-vc
Download Eating the Alphabet
6 years ago
 
 
 
 Posts
Posts
 
 
 
 
 

1 comment:
with all these only DMK & Azagiri group won in Tirumangalam and DMK won in all mid polls of panchayats.
Indian voters are stupids and will vote for money. Thats the sad reality.
Post a Comment