காலணிக் கலாசாரம்?
அன்று ஜார்ஜ் புஷ், அதன்பின் சிதம்பரம், அத்வானி, நவீன் ஜிண்டால், நடிகர் ஜிதேந்திரா,நேற்று பிரதமர் மன்மோகன் சிங். மேடையில் இருக்கும் பிரபலங்களை நோக்கிக் காலணிகளைக் கழற்றி வீசுவது அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
என்ன காரணம்?
ஜார்ஜ் புஷ் மீது நடந்த தாக்குதலைத் தொலைக்காட்சிகள் மீண்டும் மீண்டும் காண்பித்து இத்தகைய எதிர்ப்பு முறைக்கு புகழ் சேர்த்து (has glorified the incident) அதைப் பிரபலமாக்கிவிட்டன என்று ஒரு கருத்து நிலவுகிறது. ஜனநாயக ரீதியான எதிர்ப்பு முறைகளுக்கு அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதிப்பதில்லை. கறுப்புக் கொடி, உருவபொம்மை எரிப்பு போன்று தனி ஒருவரால் செய்யக்கூடிய கண்டனங்களை அரசுகள் அனுமதிப்பதில்லை. கொதித்துப் போயிருப்பவர்கள், சம்பந்தப்பட்டவர்களுக்கு உறைக்கிறமாதிரி வேறு எப்படித்தான் எதிர்ப்பைக் காட்டுவது? எனக் கேட்கிறவர்களும் இருக்கிறார்கள். இது விளம்பரம் தேடிக் கொள்ள ஓர் சுலபமான வழி எனச் சொல்பவர்களும் இருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இடப்புறம் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்
Download Eating the Alphabet
5 years ago
1 comment:
இந்த காலனி செய்தியை விட தமிழக முதல்வரின் திடீர் உண்ணா நோன்பு தான் இப்போதைக்கு உள்ள பரபரப்பான செய்தி ஆகிவிட்டது. இது தேர்தலுக்கான நாடகமா? என்பது பலரது கேள்வியும் கூட.
Post a Comment