Friday, April 17, 2009

தினம் ஒரு தேர்தல் -1

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். சிலர் மேடையேறி விட்டனர். சிலரது மேடைகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன.இனி நம் வேலை வாக்களிப்பதுதான்.

இனி இந்தத் தளத்தில் தினம் ஒரு தேர்தல்

இன்றையக் கேள்வி:

அடுத்த பிரதமரைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் என ஜெயலலிதா முழங்கியிருக்கிறார். காங்க்ரசும் பாஜகவும் தாங்கள் தனித்து ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை என்பதை ஏறக்குறைய அறிவித்து விட்டார்கள்.நாடாளுமன்றத்தில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நேரங்களில் அரசின் பெரும்பானமையைத் தீர்மானிப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றியிருக்கிறது

ஆனால் தமிழ்நாட்டின் தீர்ப்பு சிதறிச் சிந்துவதாக (Fragmented) இல்லாமல் இருக்கும் போதே அத்தகைய வாய்ப்பைப் பெறுவது சாத்தியம். தமிழ்கம் அப்படிப்பட்ட தீர்ப்பை அளிக்குமா என்பதே இன்றுள்ள கேள்வி.

5 comments:

குப்பன்.யாஹூ said...

taமிழகம் எல்லாம் முடிவு செய்யும் நிலையில் இல்லை. அதிமுக கூட்டணி பாத்து தொகுதிக்கு மேல் வருவதே சந்தேகம்.

எனக்கு உள்ள ஒரே ஆறுதல் மீண்டும் வைகோ வின் குரல் மீண்டும் பாராளுமன்றத்தில் ஒலிக்கும்.

குப்பன்_யாஹூ

yrskbalu said...

this time not posible. no one can
get morethan 20 seats. then how it is possible.

this time deciding goes to lallu allience .

Venkat said...

Dear Maalan,

It is going to be fragmented in TN from what the psephologists are predicting.

If they are wrong, I think it would be advantage DMK. Because of the DMDK factor I feel that it is going to be an advantage for DMK. Whether it is good for TN or not is another matter.

Thanks

Venkataraghavan R

கோவை சிபி said...

தேர்தல் களத்தின் தற்போதைய சூழ்நிலையில் மேற்கு மாவட்டங்களில் இருந்து ஒரு ஆச்சரியமான் முடிவை தமிழகம் காண இருக்கிறது.

தமயந்தி said...

iniku jeyalalitha nellaiku vanthirunthaargal. vaagayi adimukku neriya manithargal. ovoru variyilum karunanidhin kudumba arasialai vimarsithaar. than prathamar aasasiyai ssutchamayai veli paduthinar.kuutathai vitu velaiye vanrum poothu kaikuzhanthaiyai idupil irukina padi oru pen sonnathu-50 ruva thaana. varapoo 200 ruvayum biriyanumnulaa sonnaanga