Monday, April 20, 2009

தினம் ஒரு தேர்தல் -4

மணிகச்சி (பிகார்), ஏப். 18: பாபர் மசூதி இடிப்பில் அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிக்கும் பங்கு உள்ளது என்று ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் புகார் தெரிவித்தார். பிகாரில் தர்பங்கா மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தேர்தல் பிரசாரத்தில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். உத்தரப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருந்தபோது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி செய்துவந்தது. பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததே தவிர அதைக் தடுப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக மேற்கொள்ளவில்லை என்றார்.

இந்த விஷயம் தொடர்பாக யாரேனும் தொடர்ந்து பேசமுற்பட்டால் அது சம்பந்தமாக மேலும் சில தகவல்களை பேசவேண்டிவரும் என்றும் லாலு எச்சரித்தார்.

காங்கிரஸ் மறுப்பு: பாபர் மசூதி தொடர்பாக லாலு தெரிவித்த கருத்து அர்த்தமற்றது என்று மத்திய அமைச்சர் வயலார் ரவி தெரிவித்தார். லாலு இதுபோன்ற புகாரை கூறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. லாலுவுடன் காங்கிரஸýக்கு நல்லுறவு இருந்துவருகிறது. அவரது கருத்து தேவையில்லாதது என்றும் அவர் தெரிவித்தார்.

பாபர் மசூதி இடிப்பில் உள்ள அனைத்து உண்மைகளையும் லாலு பிரசாத் நாட்டு மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தள தலைவரும் பிகார் முதல்வருமான நிதீஷ் குமார் கேட்டுக்கொண்டார். மசூதி இடிக்கப்பட்ட பிறகு கதவுகளை பூட்டாமல், ராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டதற்கு யார் காரணம். அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசுதான் அனைத்து நிகழ்வுகளுக்கும் காரணம்.

பாஜக ஆதரவுடன் முதல்முறையாக முதல்வராக வந்த லாலு, அப்போது தனக்கு வசதியாக இந்த தகவல்களை மறைத்துவிட்டார். அதற்கு பிறகு காங்கிரஸ் அரசு அவரை பலமுறை காப்பாற்றி வந்தது. அதற்கான காரணம் இப்போதுதான் புரிகிறது என்றார்.

பாபர் மசூதி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மீது லாலு பிரசாத் யாதவ் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அக்கட்சி தலைவரும், மத்திய அமைச்சருமான அகமது கூறுகையில்,'லாலு பிரசாத் கூறியுள்ளது ஆச்சரியம் அளிப்பதாக உள்ளது. தேர்தல் நேரத்தில் அவர் இதுபோல் கூறியுள்ளது துரதிர்ஷ்டவசமானது. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது முதலில் வருத்தம் தெரிவித்தவர் சோனியா தான்' என்றார்.

3 comments:

குப்பன்_யாஹூ said...

வாக்களர்களாகிய நம்மை இன்னமும் அறிவு பூர்வமகா சிந்தித்து (ச்பெக்ட்ராம் ஊழல் இழப்பீடு குறித்தோ, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுத்து பற்றியோ, மின் வெட்டு குறித்தோ, பொருளாதார தேக்கம் குறித்தோ, முஸ்லிம் தீவிரவாதிகளை ஊக்குவித்தல் குறித்தோ , பீகார், கர்நாடகாவில் கவர்னர், காங்கிரம் கூட்டணி ஆட்சியை கொண்டு வந்தது குறித்தோ) வாக்களிக்க விடாமல், இன்னமும் நம்மை உணர்வு போங்க செய்து வாக்களிக்கவே பாப்பர் மசூதி, இலங்கை தமிழர் பிரச்சனைகளை அரசியல் கட்சிகள் பயன் படுத்தி வருகின்றன.

லல்லூ விற்கு வோட்டு வாங்க ரயில்வெயில் தான் செய்த சாதனைகள் மட்டுமே போதும். ஆனால் அதை சொன்னால் சோனியாவிற்கு பெயர் வந்து விடுமே என்ற நிலை. எனவே அதை சொல்லவும் முடிய வில்லை, சொல்லாமல் இருக்கவும் முடிய வில்லை.குப்பன்_யாஹூ

.

Boston Bala said...

'அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா' என்று நாலாவது சாய்ஸ் தந்திருந்தால், அதுவே பலரின் தேர்வாக இருந்திருக்கும் ;)

S. Krishnamoorthy said...

தேர்தல் சமயத்தில் குழிப்பிணத்தைத் தோண்டி எடுத்து ஒப்பாரி வைப்பதில் யாருக்கும் யாரும் சளைத்தவர் இல்லை என்பது அரசியலில் நிதர்சனமான உண்மை.
ஓநாய்-ஆடு கதை உணர்த்தும் பாடம் தெரியாதவர்கள் யார்?