Showing posts with label திறவூற்று மென்பொருட்கள். Show all posts
Showing posts with label திறவூற்று மென்பொருட்கள். Show all posts

Saturday, March 14, 2009

எங்கள் ஓட்டு Open Sourceக்கே!

தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து அரசு அலுவலகங்களிலும் திறவூற்றில் (open source) அமைந்த மென்பொருட்களைப் பயன்படுத்தப்போவதாக பாஜக இன்று வெளியிட்ட தனது தகவல் தொழில்நுட்ப தொலைநோக்குப் பார்வை (IT Vision Document) ஆவணத்தில் தெரிவித்துள்ளது.

கடந்தமுறை தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அன்றைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிரமோத் மகாஜன், எல்லாவிதங்களிலும் மைக்ரோசாஃப்ட் மென்பொருட்களை ஆதரித்ததோடு மட்டுமல்லால், லினக்ஸ் ஆதரவாளர்களைக் கடிந்து கொள்ளவும் செய்தார். இன்று பாஜக அதற்கு நேர் எதிரான நிலையை அறிவித்திருக்கிறது.

இன்று கட்சியின் கணினி சம்பந்தப்பட்ட அலுவல்களில் திறவூற்று மென் பொருட்களையே பாஜக பயன்படுத்தி வருகிறது. மேலை நாடுகள் சில சில்ல்றைத் தொழில்நுட்பங்களை உருவாக்கி அதற்கு ராயல்டி என்ற பெயரில் நம்மிடம் கொள்ளைப் பணம் கறக்கும் முறைக்கு முற்றுப் புள்ளி வைக்கப்போவதாகவும் டிஜிட்டல் இறையாண்மையைக் கொண்டுவரப் போவதாகவும் அறிவித்திருக்கிறது பாஜக.

அட பரவாயில்லையே, நம் அரசியல் கட்சிகள் இதைப் பற்றியெல்லாம் கூட யோசிக்கிறார்களா?