Saturday, February 28, 2009

பிரதமர் மக்களவைக்குப் போட்டியிட வேண்டுமா ?

பிரதமராக பதவியேற்பவர் தேர்தலில் போட்டியிட்டு மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது கட்டாயமாக்கப்படவேண் டும். அதற்காக அரசிலயமைப்புச் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று அண்மையில் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறியிருந்தார்.

இந்த யோசனை நடைமுறைக்கு ஏற்புடையதல்ல. திறமை மற்றும் கொள்கையின் அடிப்படையில்தான் பிரதமரை தீர்மானிக்க வேண்டும் என்று இதற்கு பதிலளித்திருக்கிறார் மக்களவை சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி.

இந்த விஷயத்தில் உங்கள் வாக்கு அத்வானிக்கா? சோம் நாத்திற்கா?

அருகில் உள்ள பெட்டியில் வாக்களியுங்கள்.

Thursday, February 26, 2009

வாயில்லாப் பூச்சி எம்.பி.க்கள்

எம்.பி.யாக தேர்ந்தெடுப்பது
  • விவாதத்தில் பங்கெடுக்கவும், 
  • கேள்வி நேரத்தில் தொகுதிக்காக கவன ஈர்ப்புக் கோரவும், 
  • கட்சியின் நிலைப்பாட்டை எடுத்துரைக்கவும்
குரல் கொடுக்க என்பதை அறியாதவர்கள் சட்டசபையை நிறைத்து இருக்கிறார்கள்.

பாராளுமன்றத்தில் பேசவே பேசாத மக்கள் பிரதிநிதிகளின் பட்டியல்:
  1. இந்தி  நடிகர் தர்மேந்திரா - பிக்கானெர்
  2. கன்னட நடிகர் அம்பரீஷ் - காங்கிரஸ்: மான்டியா
  3. Biren Singh Engti
  4. Manikrao Hodlya Gavit  
  5. மனைவியின் பாஸ்போர்ட்டில் வேறொரு பெண்ணை கனடாவுக்கு அழைத்துச் செல்ல முயன்ற பாஜக எம்.பி. பாபுபாய் கத்தாரா
  6. Baliram Kashyap - பாஜக
  7. Sohan Potai - பாஜக
  8. Somabhai Gandalal Koli Patel - பாஜக
  9. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களிக்கத் தெரிந்த சிவ சேனாவின் Prakash Paranjpe
  10. Beni Prasad Verma - சமாஜ்வாதி
  11. Saleem Iqbal Shervani - சமாஜ்வாதி
  12. Bhishma Shankar - பகுஜன் சமாஜ்
  13. Akbar Ahmad Dumpy - பகுஜன் சமாஜ்
  14. Kunwar Sarvraj Singh - ஜனதா தளம்
  15. Laxman Rao Pandurang Patil - NCP
மேலே சொன்னவர்கள் கொட்டாவி விட மட்டும் வாயைத் திறந்தார்கள். கூச்சல் போட மட்டும் டப்பிங் குரல் கொடுத்தார்கள்.

இவர்கள் வாயில்லாப் பூச்சிகள்.

ஆனால், வாக்களித்தவர்களுக்காக வாயைத் திறக்காதவர்கள் இன்னும் எக்கச்சக்கம். வக்கணையாக வாய் கிழிய விவாதங்களில் புஜபல பராக்கிரமத்தை நிலைநாட்டினாலும், சொந்தத் தொகுதிக்காக துறும்பைக் கூட கிள்ளிப் போடும் கேள்விகளை எழுப்பாதவர்களின் சாம்பிள்:
  • பாரதீய ஜனதாவின் பிரதம மந்திரி வேட்பாளர் லால் கிருஷ்ண அத்வானி
  • காங்கிரசு தலைவி சோனியா காந்தி
  • இன்னாள் ஜம்மு & காஷ்மீர் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா
இவர்களின் தொகுதியில் 'குறையொன்றுமில்லை போல!?
நாடாளுமன்றம் ஒரு நிமிடம் நடக்க எடுக்கும் செலவுத் தொகை: ரூபாய். 34,500/-

ஆங்கிலத்தில்: Just seen, never heard: 15 MPs who didn't speak

திருமாவளவன் நெத்தியடி நிபந்தனை! - ஆனந்த விகடன்

நன்றி: விகடன் - மை.பா. நாராயணன் (பெப்ரவரி 05, 2006)

‘‘வேறு எந்தத் தலைவர்களையும்விட, தலித் அரசியல் களத்திலே நிற்கிற ஒருவன் சந்திக்கிற தடைகளும் துயர்களும் மிக அதிகம். மற்றவர்களால் அடுத்த ஒரு வருடத்துக்கான செயல்திட்டத்தைக்கூட போட்டுவைத்துச் செயல்பட முடியும். என்னைப் போன்றவனுக்கு நாளை என்ன நடக்கும் என்பதே தெரியாமல்தான் ஒவ்வொரு இரவும் கடக்கிறது.

இதோ, எங்கள் அமைப்பின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் இனியன், சாதி வெறியர்களால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். எல்லோர்க்கும் இனியன்; இனமானப் போராளி; திருமணமான ஒன்பது வருடங்களுக்குப் பிறகு சமீபத்தில்தான் குழந்தை பிறந்திருக்கிறது. இனியனின் சடலத்துக்கு அருகில் அந்தப் பிஞ்சுக் குழந்தையோடு அவன் மனைவி கதறிய கதறலைக் கேட்டால் நெஞ்சு வெடித்துவிடும் போலிருக்கிறது. ஆனால், இதுவரை இனியனின் படுகொலை பற்றி தமிழ்நாட்டின் எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை. கருத்து சொல்லவில்லை. ஏனென்றால் இனியன் தலித், ஒடுக்கப்பட்டவன்! இதுதானே இன்றைக்கும் தமிழ்நாட்டின் நிதர்சன நிலை!’’

குடவாசலில் இயக்கத் தோழர் இனியன் படுகொலையைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுவிட்டுத் திரும்பிய நிலையில், நம்மிடம் வெடித்தார் தொல். திருமாவளவன்.

எட்டிவிடும் தூரத்தில் தேர்தல். அடிக்கடி மாறும் அரசியல் வானிலையில் திருமாவளவனின் நிலை என்ன? டாக்டர் ராமதாஸின் கைப் பிடித்து அறிவாலயத்துக்கு போவாரா? அல்லது அ.தி.மு.க. கூடாரத்தில் செட்டிலாவாரா? இது இப்போதைய பரபரப்புக் கேள்வி. கனல் தெறிக்கும் காட்டம், வழக்கமான சீற்றம் கலந்து நம்முடன் பேசுகிறார் திருமா!
‘‘தேர்தல் வியூகங்கள் தொடங்கி விட்டன. தமிழக அரசியல் களம் எப்படியிருக்கிறது?’’

‘‘சுருக்கமாகச் சொல்வதென்றால், தக்க வைப்பதற்கும் தகர்க்க நினைப்பதற்கும் நடுவில் நடக்கிற ஆடு புலி ஆட்டம்தான் வருகின்ற சட்டசபைத் தேர்தல். எப்பாடுபட்டாவது கூட்டணியைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் ஒரு கட்சித் தலைமை. என்ன செய்தாவது அந்தக் கூட்டணியை உடைக்க வேண்டும் என்று இன்னொரு கட்சித் தலைமை. இருவருக்கும் இடையே பெரும் பனிப்போர் நடந்து வருகிறது. இன்னும் கொஞ்ச நாளில் பனி விலகிவிடும். யாரோடு யார் போகிறார்கள், யாரிடம் யார் வருகிறார்கள் என எல்லா கணக்குகளும் தெரிந்துவிடும்.’’
"சமீபத்தில் கூடிய விடுதலைச் சிறுத்தைகளின் மையக் குழுவில் மாநிலப் பொறுப்பாளர்கள் பலரும் தி.மு.க-வையும் திராவிட இயக்கங்களையும் கடுமையாக விமர்சனம் செய்தார்களாமே?"

‘‘உண்மைதான். அது அவர்களின் அடி மனதிலிருந்த ஆதங்கம். ஏனென்றால், நாங்கள் தொடர்ந்து காயப் படுத்தப்பட்டு வரு கிறோம். எங்களுடைய உழைப்புக்கும் விசுவாசத்துக்கும் உரிய அரசியல் அங்கீகாரம் கிடைக்கவில்லை. அந்த கடந்த கால அனுபவங்கள் எல்லாம் எங்கள் மையக் குழு விவாதத்தில் விரிவாக அலசப்பட்டது. என்னவெல்லாம் பேசினார்கள் என்று சொல்கிறேன்...

'மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர், ராம்தாஸ் ஆத்வாலே, பீகாரில் ராம்விலாஸ் பாஸ்வான், உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி போன்றவர்களுக்கு அவர்களது மாநிலத்தில் உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. கூட்டணி அரசில் பங்கு பெறுகிறார்கள். ஆனால், இங்கே திராவிடக் கட்சிகளைப் பொறுத்தவரை அவர்கள் கட்சியில் இருக்கிற தாழ்த்தப் பட்ட மக்களில் ஒருவருக்கு ஆதிதிராவிடர் நலத்துறை, இன்னொருவருக்கு துணை சபாநாயகர் பதவி என்று தந்து, அதோடு மங்களம் பாடிவிடுகிறார்கள்' என்றெல்லாம் தங்களுடைய மனக் குமுறல்களை மையக் குழு கூட்டத்தில் கொட்டினர் தோழர்கள். அவர்களின் பேச்சில் இருந்த நியாயம் எனக்குப் புரிந்தது. உங்களுக்கும் புரியும். நாங்கள் காத்திருக்கிறோம்.’’
‘‘வருகிற தேர்தலில் நீங்கள் யார் பக்கம்?’’

"இந்த முறை தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக எங்களைத் தயார் படுத்தி வைத்திருக்கிறோம். எனவே, எந்த கூட்டணியில் இருந்தாலும் எங்கள் சொந்த சின்னத்திலேயே போட்டியிட வேண்டும் என்று இயக்கத் தோழர்கள் விரும்புகிறார்கள். ஆம், இந்த முறை எங்களுக்கு 'கேர் ஆஃப்' விலாசம் கூடாது! சிறுத்தைகளுக்குச் சொந்த முகவரியும் உரிய அங்கீகாரமும் தர முன்வருபவர்கள் யாரோ... அவர்களோடு இணைந்து பணியாற்றத் தயாராக இருக்கிறோம்! இதுதான் எங்கள் தேர்தல் எதிர்பார்ப்பு!’’
‘‘உங்கள் தமிழ் பாதுகாப்பு இயக்கத் தோழரான டாக்டர் ராமதாஸ், தி.மு.க. அணியில் உங்களைச் சேர்த்துவிட வேண்டும் என்பதில் அதிக அக்கறைகாட்டி வருகிறாரே..?’’

அதற்காக தமிழ்க்குடிதாங்கி அய்யாவுக்கு நன்றி. இன மொழி மீட்புக்காக ஒருமித்த உணர்வுள்ள நானும் ஐயா நெடுமாறன், மருத்துவர் தமிழ்க்குடிதாங்கி போன்றவர்களும் தமிழ் தேசிய தளத்தில் தோளோடு தோள் நிற்கிறோம். ஆனால், கட்சி அரசியல் பற்றி இதுவரை நாங்கள் பேசியது கிடையாது.

என் மீது தமிழ்க்குடிதாங்கி ஐயாவுக்கு இருக்கிற நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களை தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சி எடுத்து வருகிறார். ஆனால், இறுதி முடிவு எடுக்க வேண்டியது கலைஞர்தானே..? அவருடைய மௌனத்தின் பொருள் என்ன என்று எங்கள் இயக்கத் தோழர்களுக்குப் பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அழைத்தால் பேசத் தயாராக இருக்கிறோம். அடுத்ததை கலைஞர்தான் சொல்ல வேண்டும். நாங்கள் இதுவரை தனிப்பட்ட முறையில் கலைஞரையோ தி.மு.க-வையோ விமர்சித்தது கிடையாது.’’
‘‘விஜயகாந்த்தின் அரசியல் பிரவேசம், வட மாவட்டங்களில் உங்கள் ஓட்டு வங்கிக்கு வேட்டு வைக்கும் என ஒரு கருத்து எழுந்துள்ளதே..?’’

‘‘ஊடகங்கள் உண்டாக்கிய மாயத்தோற்றம் இது. கோடம்பாக்கத்துக் கவர்ச்சியில் கரைந்துபோகிறவர்கள் அல்ல, விடுதலைச் சிறுத்தைகளின் தம்பிமார்கள். விஜயகாந்த்துக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் இதுதான்... அரசியல் என்பது சினிமா அல்ல. வாக்குகளைக் குறிவைத்து அள்ளிவிடும் வீர வசனங்களை எல்லாம் நம்பி ஏமாந்துவிட மாட்டார்கள் மக்கள்!

பணம் கொடுத்து ஆட்களை வேனில் அழைத்து வந்து... அவர்களை நோக்கி 'லஞ்சம், ஊழலை ஒழிப்பேன்' என்று பேசுகிறார் விஜயகாந்த். எனவே, கூட்டத்தையும் தோற்றத்தையும் வைத்து எதையும் எடை போட்டுவிட முடியாது. அவர் தரும் வாக்குறுதிகள் காற்றிலே கரைந்துவிடுமா அல்லது கரை சேருமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போமே!’’
"‘திருமாவளவனின் நடை, உடை, போக்கு மாறிவிட்டது. அடிக்கடி வெளிநாடுகளுக்கு பறந்தபடி இருக்கிறார். விடுதலைப் புலிகளிடமிருந்து அவருக்கு பணம் வருகிறது’ என்றெல்லாம் விமர்சனம் வருகிறதே?"

"‘எங்கள் வளர்ச்சியில் கசப்பும் காழ்ப்பும் கொண்டவர்கள் கூறும் மலிவான குற்றச்சாட்டுக்கள் இவை. தாய் மண்ணை விட்டு பல்வேறு நாடுகளில் வாழும் புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களின் இன உணர்வுகளைக் கொச்சைப்படுத்திப் பார்ப்பவர்களை என்னவென்று சொல்வது? அவர்கள் என்ன ரிசர்வ் வங்கியா நடத்துகிறார்கள்?

ஈழ மண்ணிலிருந்து வாழ்க்கையைத் தேடி பல்வேறு நாடுகளுக்குச் சென்று வாழ்கிற ஈழத் தமிழர்கள், அங்கங்கே தமிழ் அமைப்புகளை நிறுவியிருக்கிறார்கள். அவர்கள் நடத்துகிற தமிழ் சார்ந்த நிகழ்சிகளில் கலந்துகொள்ளவே வெளிநாடுகளுக்குப் போய் வருகிறேன். அதற்கான பயணச்சீட்டுகளை மட்டுமே அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டு சென்று வருகிறேன். அப்படிப் போகும் போது சம்பந்தப்பட்ட அமைப்பாளரின் வீட்டிலேயே தங்கிக்கொள்கிறேன். பெரிய ஓட்டலில் தங்குவது, இஷ்டத்துக்குச் செலவு செய்வது எனக்குப் பழக்கம் இல்லை. என் எல்லாப் பயணங்களும் உரிமைகளையும் கொள்கைகளையும் பேசுவதற்காகத் தான்!

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கனூர் கிராமத்தில் உள்ள எங்கள் கூரை வீடு சேதமாகிப்போனது. என் தாய் - தந்தை உட்பட, வீட்டில் இருந்த அனைவரும் குளிரில் நடுங்கியபடி நாட்களை நகர்த்தினார்கள். அதை ஊர் அறியும். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக வாழ்க்கையைத் தவமாக நினைத்து வாழ்ந்து வருகிறவன் நான். எனக்கு கண்ணியம்தான் முக்கியமே தவிர, கரன்ஸி நோட்டுக்கள் அல்ல!’’

Wednesday, February 25, 2009

முன்னாள் அமைச்சர் ராஜ.கண்ணப்பன் திமுகவிலிருந்து விலகல்

முன்னாள் அதிமுக அமைச்சரும், இன்னாள் திமுக எம்.எல்.ஏவுமான ராஜ.கண்ணப்பன் திமுகவை விட்டு விலகி விட்டார்.

1991 முதல் 1996 வரையிலான ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சக்தி வாய்ந்த அமைச்சராக திகழ்ந்தவர் கண்ணப்பன். பொதுப்பணித்துறை மற்றும் மின்துறை அமைச்சராக இருந்தார் கண்ணப்ன்.

1996-ல் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அதிமுகவிலிருந்து விலகிய கண்ணப்பன் மக்கள் தமிழ் தேசம் என்ற கட்சியைத் தொடங்கினார். பின்னர் தனது பெயரையும் ராஜ. கண்ணப்பன் என மாற்றிக் கொண்டார்.

2001ம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி சேர்ந்தார். ஆனால் தேர்தலில் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை.

பின்னர் கட்சியைக் கலைத்து விட்டு திமுகவில் இணைந்தார். 2006ம் ஆண்டு இளையாங்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அமைச்சர் பெரியகருப்பனுடன் மோதல் ஏற்பட்டது என்றும், அதனால் கட்சியில் இருந்து ராஜினாமா செய்யப் போவதாகவும் முன்பு செய்தி வெளியானது.

திமுகவில் இருந்துகொண்டே தேமுதிக-வில் இணைய பல முக்கியப் புள்ளிகள் மூலம் முயற்சிக்கப்பட்டது. ஆனால் தேமுதிகவில் அவருக்கு வாய்ப்பில்லை என்று தெரிந்ததும், இறுதியான முடிவாக மறுபடியும் அதிமுகவில் இணைவதாக முடிவு செய்துள்ளார் என்று தெரிகிறது.

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் யாதவ சமுதாயத்தினர் பெருமளவில் உள்ளனர். சிவகங்கை, இளையான்குடி, திருப்பத்தூர் தொகுதிகளில் உள்ள சாதி பலத்தால் அவருக்கு எதிர்வரும் பாராளுமன்றத் தொகுதியில் சீட் கிடைக்க வாய்ப்பும் உள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் உள்ள 183 தொகுதிகளில் எங்களை சார்ந்த மக்களிடமிருந்து குறைந்தபட்சம் 40 ஆயிரம் முதல் 90 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தன. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தம்முடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறது.

கிட்டத்தட்ட 10 தென் மாவட்ட தொகுதிகளில் கண்ணப்பனுக்கு ஓரளவுக்கு செல்வாக்கு உள்ளது. இங்கு கண்ணப்பன் கை காட்டுவோருக்கே வாக்குகள் விழக் கூடிய நிலை. இந்தத் தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கக் கூடிய அளவில் யாதவர்கள் உள்ளனர்.

இந்தத் தொகுதிகளில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அதிமுக தோல்வியைத் தழுவியது. தென் மாவட்டங்கள் கடந்த தேர்தலில் அதிமுகவுக்கு கை கொடுக்கவில்லை. தூத்துக்குடி மாவட்டம் மட்டுமே அதிமுகவைக் காப்பாற்றியது.

இந்தியன் வங்கி முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் முயன்று பார்த்தும் முடியாத நிலையில் கண்ணப்பனால் யாதவ சமுதாயத்தினரை ஓரணியில் திரட்ட முடியுமா?

நன்றி: வெப்துனியா | தட்ஸ்தமிழ் | தினமணி

Anti-incumbency Factor தேய்கிறதா?

- நாராயணன்

இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் ஒரு முக்கியமான கட்டுரை EPW விலிருந்து எடுத்து போடப்பட்டிருக்கிறது. கட்டுரையின் சாராம்சம் - anti-incumbency என்று சொல்லக்கூடிய, ஆளும்கட்சியின் மீதான கசப்புணர்வு இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகளில் குறைந்திருக்கிறது. சுதந்திரத்திற்கு பின் முதன்முறையாக ஆளும்கட்சிகள் தேர்தலில் அரசினை நிர்வகிக்கும் பொறுப்பினை இழப்பது 46% வாக குறைந்திருக்கிறது. இதை வேறு வகையாகவும் பார்க்கலாம். இரண்டு மாநிலங்களை எடுத்துக் கொண்டோமானால், ஒரு மாநிலத்தில் ஆளும்கட்சியே மீண்டும் ஆட்சிக்கு வரலாம்.

கடந்த ஐந்தாண்டுகளில் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் டெல்லியில் [நவ-டிச. 2008] ஆளும்கட்சிகளுக்கே மக்கள் மீண்டும் வாக்களித்து ஆட்சியில் அமர வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்பு மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா, அஸ்ஸாம், ஒரிஸ்ஸா மற்றும் குஜராத்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சியை பிடித்திருக்கின்றனர். தென் மாநிலங்களில் இது நடக்கவில்லை.

1999-2003 காலகட்டத்தில் மொத்தம் 29 மாநிலங்களில், 10த்தில் ஆளும்கட்சியினரே மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்.இந்த விழுக்காடு 2004-2008 இல் அதிகரித்திருக்கிறது. 28 மாநிலங்களில் 13ல் மீண்டும் ஆளும்கட்சியினரே ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். இதற்கான காரணங்கள் என்ன? 2003இல் ஆரம்பித்த Boom 2008 ஜூன் வரையிலான காலம்வரைக்கும் இருந்தது.ஆக யார் ஆண்டிருந்தாலும், பல விஷயங்கள் அவர்களை மீறியே நடந்திருக்கிறது. ஆனால் வெறுமனே அது மட்டும் காரணமாகிவிட முடியாது. அரசாளும் கட்சிகளும் முனைப்போடு பல திட்டங்களை முன் வைத்து நிகழ்த்தியிருக்கிறார்கள்.

ஆனாலும் இந்த வெற்றிகளின் பின் வாக்கு போடும் பொதுஜனம் ஒரு குறியீடாக சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள். 2004-2009 வரையிலான வெற்றிகளை அலசலாம்.

மேற்கு வங்காளம்(2006), நாகாலாந்து (2008) மற்றும் சத்தீஸ்கர் (2008) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் முந்திய ஆட்சியில் எடுத்த வாக்கு சதவிகிதத்தினை விட அதிகப்படியான வாக்கு வித்தியாசத்தில் வென்றிருக்கிறார்கள். மத்தியப்பிரதேசம் (2008),குஜராத்(2007) மற்றும் ஒரிஸ்ஸா (2004) மாநிலங்களில் ஆளும்கட்சியினர் ஜெயித்தது ஒரு "qualified extension" அளவே. குறைவான மெஜாரிடியில் தான் இவ்வெற்றிகள் சாத்தியமாயிருக்கிறது. மஹாராஷ்டிரா (2004) மற்றும் டெல்லி (2008) மாநிலங்களில் ஆளும் கட்சியோ/கூட்டணியோ மிக அதிக அளவில் வாக்கு வங்கியினை தவறவிட்டாலும், ஆட்சியினை பிடித்திருக்கிறார்கள்.

நாடாளுமன்ற தேர்தலில் இது எவ்வாறாக எதிரொலிக்கும்? பதவியின் இடைக்காலத்தில் இருக்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சிநடத்தும் தமிழ்நாடு, அஸ்ஸாம், கோவா, தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதரவு கட்சிகள் ஆட்சி நடத்தும் உத்தரகாண்ட், பிஹார், குஜராத், பஞ்சாப், மற்றும் மாநில தேர்தல்களை அடுத்த ஒரு வருட காலக்கட்டத்துக்குள் எதிர்நோக்கியிருக்கும் ஆந்திரா, ஒரிஸ்ஸா, ஹரியானா, ஜார்கண்ட் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் இப்போதைக்கு தேர்தலின் வாக்கு சார்ப்பினை கணிப்பது மிக கடினம்.

Tuesday, February 24, 2009

Czarinas of India - ஜெயலலிதா, மாயாவதி, மம்தா பானர்ஜி

- நாராயணன்

ஆக நடந்து முடிந்த ஐபின் வாக்கெடுப்பில் தமிழகம் ஒரு முக்கியமான காரணியாக இருக்குமென்று சொல்லியிருக்கிறார்கள். நடுவில் ஜெயலலிதா [40 தொகுதிகள் பாண்டிச்சேரி உட்பட] காங்கிரஸினை வேறு அழைத்திருக்கிறார் கூட்டு சேர. மேற்கு வங்காளத்தில் மம்தா பானார்ஜியின் திரிணாமுல் காங்கிரஸினை காங்கிரஸ் வளைக்க பார்க்கிறது. நந்திகிராமின் பிரச்சனைகள் இருந்தாலும், கம்யுனிஸ்டுகள் இன்னமும் மேற்கு வங்காளத்தில் வலிமையோடு தான் இருக்கிறார்கள். மேற்கு வங்காளம் ஒரு முக்கியமான மாநிலம் [42 தொகுதிகள்] ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் கம்யுனிஸ்டுகள் ஆதரவு கொடுத்த காலத்தில், மேற்கு வங்காளத்தின் தொகுதிகள் முக்கிய பங்கு வகித்தது. தேர்தலுக்கு பின்னான உறவுகள்/கூட்டணிகள் பற்றி இப்போது பேச முடியாது என்றாலும், காங்கிரஸ் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க முயல்கிறது.உத்தரப்பிரதேசம் [80 தொகுதிகள்] மாயாவதியின் ஆட்சியின் கீழ் இருக்கிறது. மாயாவதி காங்கிரஸ்/பாஜகவோடு இப்போதைக்கு எவ்விதமான பேச்சுவார்த்தைகளுக்கும் தயாராக இல்லை. ஆனால், தேர்தல் முடிந்து ஒரு வேளை காங்கிரஸுக்கு தேவைப்படும் பட்சத்தில், சில உயர்பதவிகளை கேட்டு ஆதரவு கொடுக்கலாம்.

ஆனால், மூவருக்கும் உள்ள ஒற்றுமை, மூவரையும் எந்த காலத்திற்கும் நம்பமுடியாது. சோனியாவினை திட்டிய அதே ஜெயலலிதா தான் இன்றைக்கு காங்கிரஸுக்கு ரத்தின கம்பளம் போட்டு கூட்டணியில் சேர அழைக்கிறார். மம்தா பானர்ஜியும் லேசுப்பட்டவர் அல்ல. கடந்த காலங்களில் பாஜக இவரிடம் பட்டிருக்கிறது.

மாயாவதி, ஜெயலலிதா,மமதா பானர்ஜி மூவரிடத்திலும் சேர்த்து (162 தொகுதிகள்) இப்போதைக்கு இருக்கிறது. மூவருமே அவரவர் மாநிலங்களில் பெரும் செல்வாக்கும், வாக்கு வங்கியும் பெற்றவர்கள். ஒரு வேளை காங்கிரஸ் இப்போதைக்கு எவ்விதமான கூட்டணி வைக்காமல் போய் 180 தொகுதிகள் கூட்டணியோடு ஜெயித்தார்களேயானால், அதே வேளையில் இந்த மூவர் கூட்டணி 70 - 90 தொகுதிகள் ஜெயித்தார்களேயானால் இவர்கள் இல்லாமல் அரசமைக்க இயலாது. மூவருக்குமே உள்ளூர காங்கிரஸ் பிடிக்காது என்றாலும், அத்தகைய ஒரு நிலை வந்தால், தன்னிலையிலிருந்து இறங்கி வருவார்கள் என்று தெரிகிறது. ஒரு வேளை அது நடக்கும் பட்சத்தில், உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி, தமிழகத்தில் திமுக [பாமக, விடுதலை சிறுத்தைகள் நிலை இப்போதைக்கு சரியாக சொல்ல இயலாது] ஐக்கிய முற்போக்கு கூட்டணியிலிருந்து கழட்டி விடப்படுவார்கள் என்பது மட்டும் தெள்ளத் தெளிவு.

Will Women Power rock the elections, we got to wait and watch?

தேவையா இப்படி ஒரு பட்டன்?

புதுடெல்லி, பிப்.24: தேர்தலில் யாருக்குமே வாக்களிக்க விரும்பாதவர்களுக்கு என்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் தனியிடம் ஒதுக்கக் கோரி தொடர்ந்த வழக்கை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

டெல்லியை சேர்ந்த மக்கள் உரிமை சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறப்பட்டு இருந்ததாவது:

இப்போதைய வாக்களிப்பு முறையில் எந்த கட்சிக்கும் அல்லது எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் தங்களது எண்ணத்தை பதிவு செய்வதற்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் இடமில்லை. இவ்வாறு விருப்பம் இல்லாதவர்கள் வாக்குச்சாவடி அதிகாரிக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.

இப்படி முன்நிபந்தனை விதிப்பது அரசியல் சட்டம் 19 (2) விதிக்கு எதிரானது. மக்களின் கருத்து சுதந்திரத்தை பறிப்பதாக உள்ளது.
மேலும் வாக்களிக்க விருப்பம் இல்லை என்று பகிரங்கமாக தெரிவிப்பவர்கள் அரசியல் கட்சிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடுகிறது.

எனவே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் செய்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் 'மேலே உள்ள யாருக்கும் எனது வாக்கு இல்லை' என்பதற்கு அடையாளமாக தனி பட்டன் அமைக்கப்பட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

நீதிபதிகள் பி.என். அகர்வால், ஜி.எஸ். சிங்வி ஆகியோரைக் கொண்ட பெஞ்ச் இந்த மனுவை பரிசீலனை செய்தது. இது மக்களின் அடிப்படை உரிமை பற்றிய விவகாரம் என்பதால் இந்த மனுவை அதிக நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் விசாரணைக்கு அனுப்புமாறு தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனுக்கு இரு நீதிபதிகளை கொண்ட பெஞ்ச் பரிந்துரை செய்தது.


தினகரன் 24.2.09


யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லாதவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கலாம். சில நாடுகளில் வாக்களிப்பது கட்டாயமாக்கப் பட்டுள்ளது . இந்தியாவில் அப்படி இல்லை. இந்த நிலைமையில் இப்படி ஒரு தனிபட்டன் தேவையா?


அதே நேரம்

வாக்குச் சாவடிக்கு வராதவர்களின் வாக்குகளை கடைசி சில மணி நேரங்களில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாகப் பதிவு செய்து கொண்டுவிடுகின்றன என்றும் சொல்லப்படுகிறது. இது போன்ற ஒரு பட்டன் இருந்தால் வாக்க்ளிக்க விருப்பமில்லாதவர்கள் கூட் வாக்குச் சாவடிக்கு வந்து தங்கள் அதிருப்தியைப் பதிவு செய்யவும் அதன் காரண்மாக கள்ள் ஓட்டுக்கள் பதிவாவதைத் தவிர்க்கவும் முடியும் என்றும் சொல்லப்படுகிறது.

தனிபட்டன் தேவையா? உங்கள் கருத்தை அருகில் உள்ள வாக்கெடுப்புப் பெட்டியில் தெரிவியுங்கள்.

Monday, February 23, 2009

நெருக்கடியால் வந்த நெருக்கம்?

தினமணி

சென்னை, பிப். 22: மக்களவைத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இலங்கைப் பிரச்னையை மையமாக வைத்து தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும் நிலை எடுத்துள்ளன.

கண்ணப்பன் சந்திப்பு: இந்த நிலையில் சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் முதுகுத் தண்டுவட அறுவை சிகிச்சைக்குப் பிறகு ஓய்வு எடுத்து வரும் முதல்வர் கருணாநிதியை, ம.தி.மு.க. அவைத் தலைவர் கண்ணப்பன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.

விடுதலைப் புலிகள்: விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் விஷயத்தில் அதிமுகவுக்கும், அந்தக் கட்சியின் கூட்டணியில் நீடித்து வரும் மதிமுகவுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது.

எந்தக் காரணத்தைக் கொண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தை அதிமுக ஒரு போதும் ஆதரிக்காது என்று அதன் பொதுச் செயலர் ஜெயலலிதா தொடர்ந்து கூறி வருகிறார்.

கூட்டணியில் நீடிக்கும் நிர்பந்தம் காரணமாக அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவின் இந்தக் கருத்துக்கு தனது நிலைப்பாட்டை மதிமுக பொதுச் செயலர் வைகோ இதுவரை வெளிப்படுத்தவில்லை.

அதிமுக - மதிமுக இடையே நிலவும் இந்த மறைமுக அரசியல் கருத்து வேறுபாடு ஓசையின்றித் தொடர்கிறது. இது ஒருபுறம் இருக்க, தி.மு.க. கூட்டணியில் நீடிப்பது குறித்துப் பரிசீலிக்குமாறு காங்கிரஸ் கட்சிக்கு அண்மையில் பகிரங்க அழைப்பை அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா விடுத்தார்.

இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டையே அதிமுகவும் கொண்டுள்ளதாக சென்னை மயிலாப்பூரில் அண்மையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் பேசியதும் குறிப்பிடத்தக்கது.

குலாம் நபி ஆசாத்: 2001-ம் ஆண்டு பொதுத் தேர்தலை அதிமுக - காங்கிரஸ் இணைந்து சந்தித்தபோது, தமிழ்நாடு காங்கிரஸ் தேர்தல் மேலிடப் பார்வையாளராக இருந்தவர் குலாம் நபி ஆசாத். ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படும் குலாம் நபி ஆசாத், இப்போது அதே பொறுப்புக்கு மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒரு வேளை அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சேரும் நிலையில், அந்தக் கூட்டணியில் ம.தி.மு.க. நீடிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டியிருக்கும்.

அரசியல் முக்கியத்துவம்: ""கடந்த காலத்தில் வேலூர் சிறை வாயிலில் காத்திருந்து வைகோவை சென்று சந்தித்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால், பெரிய அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு மருத்துவமனையில் இருக்கும் முதல்வரைச் சந்தித்து நலம் விசாரிக்கும் சாதாரண பண்புகூட வைகோவுக்கு இல்லை'' என்று அமைச்சர் பொன்முடி குற்றஞ்சாட்டி இரண்டு தினங்களுக்கு முன்பு அறிக்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இத்தகைய அரசியல் பின்னணியில் வைகோவின் ஒப்புதலுடன், மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன் முதல்வர் கருணாநிதியை மருத்துவமனைக்குச் சென்று சந்தித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

நலம் மட்டுமே...: ""ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலும் 50 ஆண்டுகள் அவருடன் பழகியவன் என்ற முறையிலும் முதல்வரைச் சந்தித்து உடல் நலம் விசாரித்தேன். இந்தச் சந்திப்பில் அரசியல் ரீதியாக எந்தப் பேச்சும் நடைபெறவில்லை. அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முதல்வர் விளக்கினார்'' என்றார் மதிமுக அவைத் தலைவர் கண்ணப்பன்.

Sunday, February 22, 2009

அடுத்த ஆட்சியைத் தமிழ்நாடு தீர்மானிக்கும் !



CNN-IBN தொலைக்காட்சியின் கருத்துக் கணிப்பு முடிவுகள்:

  • திரிசங்குப் பாராளுமன்றம் நிச்சியம்
  • காங்கிரஸ் கூட்டணிக்கு (ஐக்கிய ஜனநாயக முன்னணி) 215லிருந்து 235க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 36 சதவீத வாக்குகள் பெறக்கூடும்

  • பா.ஜ.க கூட்டணிக்கு (தேசிய ஜனநாயக முன்னணி) 165லிருந்து 185க்குள் இடங்கள் கிடைக்கலாம் அது 29 சதவீத வாக்குகள் பெறலாம்

  • யார் ஆட்சி அமைப்பார்கள் என்பது மாநிலக் கட்சிகளின் கையில் இருக்கிறது

  • ஆட்சி அமைப்பதைத் தீர்மானிப்பதில் மூன்று முக்கிய மாநிலங்கள்- உ,பி, பீகார், தமிழ்நாடு ஆகியவற்றின் முடிவுகள் முக்கியப் பங்கு வகிக்கும்
  • இந்த மாநிலங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமிடையேயான வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் என்பதால் அவற்றைக் கருத்துக் கணிப்புகள் மூலம் கண்டறிவது சிரமம
முழு விவரங்களுக்கு: http://ibnlive.in.com/politics/

வாசகர் வாக்கெடுப்பு: மன்மோகன் முன்னிலை

இந்தப் பதிவில் சில வாக்கெடுப்புக்களை நடத்தி வருகிறோம். இங்கு வாக்களிப்பவர்களின் எண்ணிக்கை இந்திய வாக்காளர் எண்ணிக்கையில் மிகச் சிறிய துளி என்பதால் இந்தக் கணிப்புகள் எவ்வளவு தூரம் தேர்தலில் பிரதிபலிக்கும் எனத் தெரியாது. அப்படிக் கண்டு பிடிப்பதும் அவற்றின் நோக்கமல்ல.

மூட் மீட்டர்ஸ்

அவை இந்தப் பதிவிற்கு வரும் வாசகர்களின் மனநிலை ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் எப்படி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள உருவாக்கப்பட்ட Mood Meters. இந்த வாசகர்கள் சுற்றி நடக்கும் விஷயங்களைக் கவனிப்பவர்கள், அதைக் குறித்து ஒரு கருத்துக் கொண்டவர்கள், அதை வெளிப்படுத்த முனைபவர்கள் என்பதால் இந்த வாக்கெடுப்புக்களும் என்னளவில் முகியமானவையே. இந்த 'மூட் மீட்டர்'களில் கிடைத்த தகவல்களை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

அடுத்த பிரதமர் யார்?

அடுத்த பிரதமர் யார்? என்ற கேள்வி வாசகர்கள் முன் வைக்கப்பட்டது. ஒரு வார காலம் நடந்த இந்தக் கணிப்பு பிப்ரவரி 19ம் தேதி இந்திய நேரம் 12:17க்கு முடிவடைந்தது. இந்தக் கணிப்பில் 481 வாசகர்கள் வாக்களித்துள்ளார்கள்

இந்த வாக்கெடுப்பில் மன்மோகன்சிங் முதலிடத்தைப் பிடித்துள்ளார். 167 வாசகர்கள் தங்கள் ஆதரவை அவருக்குத் தெரிவித்துள்ளனர். அதாவது பதிவான வாக்குகளில் 34 சதவீதம் அவருக்கு ஆதரவாகப் பதிவாகி உள்ளது

ஆனால் போட்டியில் அத்வானி அவருக்கு மிக நெருக்கமாக வந்துவிட்டார். அவர் பெற்ற வாக்குகள் 150. அதாவது 31%

மற்ற எவரையும் வாக்காளர்கள் பொருட்படுத்தவே இல்லை. ராகுல் காந்தி, நரேந்திர மோடி இருவரும் சற்றேறக்குறைய அடுத்த நிலையில் இருக்கிறார்கள். ஒருவேளை அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ்-பாஜக அவர்களை தங்கள் பிரதமர் வேட்பாளராக முன் நிறுத்தலாம் (Next Generation Prime Minstrerial Candidates) ஆனால் அந்தச் சூழ்நிலையை இப்போது கணிக்க முடியாது. அதற்குள் கூவத்தில் நிறைய தண்ணீர் (சாக்கடை என்று வாசிக்க) ஓடியிருக்கும்.

வாக்கெடுப்பின் முடிவுகள்:

பதிவான வாக்குகள்: 481

மன்மோகன் சிங்: 167 (34%)
பிராணப் முகர்ஜி: 7 (1%)
ராகுல் காந்தி: 40 (8%)
அத்வானி 150 (31%)
நரேந்திர மோடி 34 (7%)
மாயாவதி 8 (1%)
ஜெயலலிதா 23 (4%)
இவர்களில் எவரும் இல்லை 52% (10)

வாக்குப் பதிவு முடிந்த தேதி 19/2/09 12:17

கூட்டணிகள் உறுதிப்பட்டு, பிரசாரங்கள் சூடு பிடித்த பின்னர், தேர்தல் நெருங்கும் நேரத்தில், இதே கேள்வியை மீண்டும் முன் வைத்து வாக்கெடுப்பு நடத்த எண்ணியுள்ளேன்

இதே போல வேறு சில கேள்விகளை முன் வைத்தும் வாக்கெடுப்புக்கள் நடத்தப்பட்டன.

இலங்கைப் பிரசினை தேர்தலின் போது மறக்கடிக்கப்பட்டுவிடுமா?

இலங்கைப் பிரசினை தேர்தலின் போது மறக்கடிக்கப்பட்டுவிடுமா?என்ற கேள்வி மீதான வாக்கெடுப்பு பிப்ரவரி 10ம் தேதி இந்திய நேரம் காலை 6:09க்குத் துவங்கியது பிப்ரவரி 16ம் தேதி மாலை 4:48 வரை வாக்களிக்க வாய்ப்பளிக்கப்பட்டது.

இலங்கைப் பிரசினை காங்கிரசிற்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை வாக்களித்தவர்கள் உரத்த குரலில் சொல்லியிருக்கிறார்கள்.(59%)

வாக்கெடுப்பின் முடிவுகள்:

பதிவான வாக்குகள் 176

காங்,கிற்குப் பின்னடைவை ஏற்படுத்தும்: 104 (59%)
விஜயகாந்த் வளர்ச்சியைப் பாதிக்கும்: 14 (7%)
மறக்கடிக்கப்பட்டுவிடும் 58 (32%)

கட்சிகளின் தேர்தல் நிதி வசூல்

கட்சிகளின் தேர்தல் நிதி வசூல் பற்றியும் ஒரு கேள்வி வாசகர்கள் முன் வைக்கப்பட்டது. அது குறித்த வாக்கெடுப்பின் விவரங்கள்:

பதிவானவை 79
கட்சிகளின் தேர்தல் நிதி வசூல்:

வெளிப்படையாக இருக்க வேண்டும்: 31 (39%)
தடைசெய்யப்படவேண்டும் : 29 (36%)
உச்ச வரம்பு வேண்டும் 19 (24%)
வரி விதிக்கப்பட வேண்டும் 34 (43%)

ஏன் இந்தத் தனிப்பதிவு?

இந்த வாக்கெடுப்பின் முடிவுகள்தான் Side Barல் இருக்கின்றனவே, எதற்கு தனியாக ஒரு பதிவு என நீங்கள் கேட்கலாம். இனி வரும் வாக்கெடுப்புக்களுக்கு இடமளிக்கும் வகையிலும், லேஅவுட் அடைசலாக மாறுவதைத் தவிர்க்கும் பொருட்டும் பழைய வாக்கெடுப்புக்களை அகற்றத் தீர்மானித்திருக்கிறேன். அதே நேரம் அந்தத் தகவல்கள் சேமிக்கப்பட வேண்டும் என்பதால் இந்தத் தனிப் பதிவு

இந்தத் தனிப்பதிவு வெளியான பின் இரு தினங்கள் வரை Side Barல் இந்த வாக்கெடுப்பின் விவரங்கள் தொடர்ந்து இடம் பெறும். எவரேனும் இந்தப் பதிவில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வசதியாக இந்த ஏற்பாடு. இரு தினங்களுக்குப் பின் அந்த 'மூட் மீட்டர்'கள் சைட்பாரிலிருந்து அகற்றப்படும்.

-மாலன்

Saturday, February 21, 2009

அதிமுக கூட்டணிக்கு ப.சிதம்பரம் முயற்சி

தில்லியிலிருந்து ரேணு மிட்டல்

அரசியல் என்பது சாத்தியமாவதைச் செய்யும் கலை.அரசியலில் நிரந்த பகைவர்களும் இல்லை; நிரந்தர எதிரிகளும் இல்லை. தெற்கே ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்கள் எதையாவது சுட்டிக் காட்டுகின்றன என்றால் அது அரசியல் கூட்டணிகளில் எத்தகைய பிரிவும் கூட்டும் சாத்தியங்கள்தான்-அதுவும் மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில்- என்பதைத்தான்.

ஜெயலலிதாவின் அதிமுகவோடு உறவைப் புதுப்பித்துக் கொள்ள சோனியா விரும்புகிறார் என கூறப்படுகிறது

ஜெயலலிதா காங்கிரசிற்கு பகிரங்கமாக விடுத்த அழைப்பு, ஒரு மூத்த அமைச்சர் ஒருவர் மேற்கொண்ட முயற்சிகளுக்குக் கிடைத்த பலன்தான் என்று கட்சியில் மேலிட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சோனியாவின் ஒப்புதலைப் பெற்ற பிறகே அந்த அமைச்சர் முயற்சிகளை மேற்கொண்டார் எனத் தெரிகிறது.

இரண்டு கட்சிகளுக்குமிடையே கூட்டணி என்ற யோசனையுடன் ஜெயலலிதாவை சந்திக்க நம்பிக்கைக்குரிய ஒருவரை மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அனுப்பி வைத்ததாகத் தெரிகிறது. ஜெயலலிதா அந்த யோசனையை வரவேற்றதாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து, காங்கிரசுடன் உறவு ஏற்படுத்திக் கொள்வதில் தனக்கு ஏதும் தயக்கமில்லை என பகிரங்கமாக அறிவிக்கவும் அவர் முன் வந்தார்.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திமுக கூட்டணியிலிருந்து வெளியேறி அதிமுகவுடன் புதிய கூட்டணி ஏற்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்திற்காகக் காத்துள்ளது. திமுகவுடன் கூட்டைத் தொடர்வது தற்கொலைக்குச் சமம் என்றும், குறிப்பாக கருணாநிதியின் உடல் நலம் பலவீனமடைந்து வரும் நிலையில் அவரால் தேர்தல் பிரசாரத்திற்கு வர இயலாத சூழ்நிலை இருப்பதையும் எடுத்துச் சொல்லி சிதம்பரம் சோனியாவை இந்த யோச்னைக்கு சம்மதிக்க வைத்து விட்டார் எனச் சொல்லப்படுகிறது.

ஜெயலலிதாவுடனான கூட்டணியை எதிர்த்து காங்கிரசிலிருந்து மூப்பனார் வெளியேறி, தனிக்கட்சி கண்ட போது மூப்பனாருடன் சிதம்பரமும் வெளியேறினார் என்பது குறிப்பிடத் தக்கது. இன்றூ நிலைமை மாறிவிட்டது.

குலாம் நபி ஆசாத்தை தமிழ்நாடு காங்கிரசின் விவகாரங்களைக் கவனிக்கும் பொதுச் செயலாளராக நியமித்திருப்பது அதிமுகவுடன் உறவைப் புதுப்பித்துக் கொள்ளவிரும்புவதன் இன்னொரு அடையாளமாகக் கொள்ளலாம். அதிமுகவுடன் அவருக்கு நல்ல உறவு உண்டு. நாடாளுமன்றமென்றால் மூன்றிலொரு பங்கு இடம் உங்களுக்கு, இரண்டில் மூன்று பங்கு இடம் எங்களுக்கு; அதே போல சட்டமன்றம் என்றால் மூன்றிலொரு பங்கு இடம் எங்களுக்கு இரண்டில் மூன்று பங்கு இடம் உங்களுக்கு; என்ற பார்முலாவை உருவாக்கி அதை எம்.ஜி.ஆரை ஏற்கச் செய்தவர் அவர்.

ஜெயலலிதாவின் பேச்சு பற்றி கருத்துக்கூறுமாறு கேட்டபோது " இன்று " திமுகவுடன் கூட்டணியில் இருப்பதாகக் கூறிய அவர் என்னவானலும் சரி, கூட்டணி தொடரும் என்று சொல்லவில்லை என்பதும் கவனிக்கத் தக்கது

கூட்டணி மாறுவது பற்றி காங்கிரஸ் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டிருந்த போது ஜெயலலிதா அதை வெளிப்படையாகப் போட்டு உடைத்துவிட்டார். காங்கிரஸ் கூட்டணி மாறுவதற்கான மறைமுக நிர்பந்தத்தை ஏற்படுத்துவது, ஏற்கனவே சோர்ந்து போயிருக்கும் திமுகவில் குழப்பதை ஏற்படுத்துவது என்பதோடு, காங்-அதிமுக கூட்டணி ஏற்பட்டால் திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்பதை வாக்காளர்களுக்கு உணர்த்துவது ஆகியவைதான் அவர் பகிரங்கமாகக் காங்கிரசிற்கு அழைப்பு விடக் காரணம்

அதிமுக அதிக இடங்களைப் பெற்றால், தேர்தலுக்குப் பின் ஆட்சியமைக்க அதன ஆதரவு தேவைப்பட்டால், அப்போது அதை வழிக்குக் கொண்டுவருவது கஷ்டம் என்பதால் காங்கிரஸ் அவருடன் கூட்டணி வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறது. சிதம்பரம் போன்றவர்களுக்கு சரியான கூட்டணி அமையாவிட்டால் தன் எம்.பி. சீட்டைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்ற கவலை.

கடந்த முறை தமிழ்நாட்டில் 10 இடங்களில் போட்டியிட்டு வென்றது. இந்த முறை அது 18 இடங்களைக் கேட்கிறது. அது கிடைக்குமா என்பது சந்தேகம் என்பதாலும் அது அணி மாற நினைக்கிறது.

நன்றி: ரெடீஃப்.காம்

ரெடீஃப் செய்தியைப் பார்க்க:
http://www.rediff.com/news/2009/feb/20tn-cong-wants-an-a

Friday, February 20, 2009

அஞ்சாநெஞ்சரா உங்கள் எம்.பி ?


அரசியலுக்கும் கிரிமினல்களுக்கும் உள்ள உறவு புலிகளுக்கும் சயனைட் குப்பிகளுக்கும் உள்ள உறவைப் போல. ஒருவேளை தேவைப்பட்டால் இருக்கட்டும் என்பதற்காக அரசியல் கட்சிகள் அவர்களைத் தங்களுடனேயே வைத்திருக்கின்றன.

முன்காலத்தில் அஞ்சா நெஞ்சன் என்றால் பகத் சிங். இப்போது அஞ்சாநெஞ்சன் அழகிரி. முன்பு மாவீரன் சுபாஷ் சந்திர போஸ். இன்று மாவீரர்கள் நம் வக்கீல்கள்

'யார் ஜெயிக்கிறானோ அவனை நிப்பாட்டு' என்று ஜெயிக்கிற வெறியில் அஞ்சாநெஞ்சர்களையும் மாவீரர்களையும் அரசியல் கட்சிகள் வேட்பாளராகக் களம் இறக்குகின்றன.

உங்கள் தொகுதியில் நிற்பவர் அஞ்சாநெஞ்சனா? அவரது கிரிமினல் ரெகார்ட் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவலா?

ஒரு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் போதும் தகவல் உங்கள் கைக்கு வந்து விடும்.

நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் NC <உங்கள் பின்கோடு> என்று டைப் செய்து, 567678 என்ற எண்ணுக்கு அனுப்பினால் போதும்.

அல்லது http://www.nocriminals.org/. என்ற இணையதளத்தில் போய் பெயர் தொகுதி கொடுத்தால் தகவல்களைக் காணலாம்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்படாத நிலையில் அது இப்போதுள்ள MP கள் குறித்த தகவல்களைத் தருகிறது

நான் இந்த இணையதளத்திற்குச் சென்று ஒரு Check செய்து பார்த்தேன். தமிழக எம்.பிக்களில் செகுப்புசாமி (திமுக) ஈ.வி.கே.எஸ், இளங்கோவன் (காங்) எம்.அப்பாதுரை (சிபி.ஐ)தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) எஸ்.ரகுபதி (திமுக) எல்.கணேசன் (மதிமுக) கே.வெங்கடபதி (திமுக) ஏ.கிருஷ்ணசாமி (திமுக) ஆகியோர் மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்கள் இருப்பதாக இணையதளம் தெரிவிக்கிறது.

ரகுபதி, இளங்கோவன், வெங்கடபதி ஆகியோர் துணை அமைச்சர்களாக இருக்கிறார்கள்!

மாலன்

ஜெயலலிதாவின் காங்கிரஸ் கலாட்டா

-நாராயணன்

நேற்று ஜெயலலிதா பகிரங்கமாக காங்கிரஸிற்கு அழைப்பு விடுத்துள்ளார். ”திமுக வினை யாராலும் காப்பாற்ற முடியாது, திமுகவோடு சேர்ந்து காங்கிரஸும் முழுகவேண்டியதுதான்.யார் யாரெல்லாம் அதிமுகவோடு சேர்கிறார்களோ அவர்களே ஜெயிப்பார்கள்”. இதனை காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்ப மொய்லி ஏற்கவில்லை. திமுகவோடு காங்கிரஸின் உறவு நீடிக்கும் என்று சொல்லிவிட்டார். கம்யுனிஸ்டுகளுக்கு இந்த தடாலடி பல்டி அதிர்ச்சி அளித்திருக்கிறது.

இது ஒரு வழக்கமான தேர்தல் உத்தியாக பார்க்கப்படுகிறது.ஆனால் ஜெயலலிதாவின் கணக்கு வேறு. இப்போது காங்கிரஸின் வேலை தமிழகத்தில் எளிதாகி விட்டது. வழக்கமாக கருணாநிதி காங்கிரஸுக்கு குறைவான இடங்களும், பிற கட்சிகளுக்கு ஒரிரு இடங்களும், மற்றவர்களுக்கு இதயத்தில் இடமும் கொடுப்பார். இப்போது கதையினை ஒரளவிற்கு திருப்பியாகிவிட்டது. இப்போதிருக்கும் மாநில ஆட்சியே ஒரு கூட்டணி ஆட்சி என்பதாலும், ஏற்கனவே மாநிலத்தில் பங்கு வேண்டும் என்று ஒரு சாரார் கேட்டு கொண்டிருப்பதும், கருணாநிதி சோனியாவிடம் சமாதானம் பேசி சமன் படுத்துவதுமாக ஒடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த அழைப்பு முக்கியமானதாகிறது. இந்த அழைப்பினை காங்கிரஸ் ஏற்காவிட்டாலும் கூட, தமிழக காங்கிரஸின் ஒரு பிரிவினர் ஜெயலலிதா ஆதரவாளர்கள் என்பதில் மாற்று கருத்தில்லை. மேலும், இது தொகுதி உடன்பாடு பேசும்போது காங்கிரஸின் கையினை மேலே நிற்க வைக்கும், இதன் மூலம் ஒருவிதமான கசப்புணர்வு தொண்டர்கள் மத்தியில் உருவாகலாம். தான் சேராவிட்டாலும், நம்பகத்தன்மையினை குலைக்கும்விதத்தில் இது திமுக-காங்கிரஸ் தொண்டர்களுக்கு பரப்பப்படும்.

தமிழகத்தின் 40 தொகுதிகள் காங்கிரஸுக்கு மிக முக்கியமானவை. ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு சேரும் பட்சத்தில் ஜெயலலிதா மூன்றாவது அணியினை விட்டு கழண்டுவிடுவார். அப்படி கழண்டால், தமிழகத்தில் திமுகவுக்கு கொடுத்து வரும் ஆதரவினை விலகி கொள்ள சொல்வார். ஒரு வேளை காங்கிரஸ் அதிமுகவோடு இணையும் பட்சத்தில், பாமகவும் இடம் மாறலாம். ஏற்கனவே இலங்கை தமிழர் பிரச்சனை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் பாமகவும் - திமுகவும் நேரெதிர் நிலைகளில் இருக்கின்றார்கள். சூசகமாக அறிக்கையில் காங்கிரஸிற்கும் - அதிமுகவிற்குமிருந்த கடந்த கால உறவினை முன்னிறுத்தி பேசியவர், இந்நாளைய உறவினை கொண்டு என்ன சாதிக்கமுடியும் என்பதையும் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறார். தேசிய அளவில் காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவினால் செயல்பட முடியாது என்பது ஒரளவிற்கு தெளிவாக தெரிந்துவிட்டது. ஆனால் தமிழகத்தில், இலங்கை தமிழர் பிரச்சனையில் திமுக ஆட்சியின் மீது இளைஞர்கள், பல்வேறு அமைப்புகள் கடுங்கோவத்தில் இருக்கிறார்கள். இது கண்டிப்பாக தேர்தல் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்று பரவலாக நம்பப்படுகிறது. இந்நிலையில், வந்த வரைக்கும் லாபம் என்று குளிர்காயும் நோக்கமே ஜெயலலிதாவின் அறிக்கையிலிருந்து தெரிகிறது.

Thursday, February 19, 2009

பாஜகவின் தேர்தல் முகங்கள்

- நாராயணன்

BJPs Poll calculations

நாக்பூரில் நடந்து முடிந்த பா.ஜ.கவின் 3 நாள் தேர்தலுக்கான சந்திப்பின் இறுதியில் குழப்பத்தினை தவிர பெரிதாக எதுவும் மிஞ்சவில்லை என்பது தான் உண்மை. அத்வானியினை பிரதம மந்திரி வேட்பாளாராக பறைசாற்றிக் கொண்டாலும், பெரியதாய் போட்டியிட அவர்களிடத்தில் விஷயமில்லை. அந்த விஷயத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஐந்தாண்டு கால ஆட்சி ஒரு விதிவிலக்கு. தொடர்ச்சியாக பேசி கொண்டிருந்தாலும், மக்களை முன்னிறுத்தும் ஒரு பிரச்சனையை, வாகனத்தை, வாசகத்தை இன்னமும் பாஜக கண்டறியவில்லை என்பது தான் நிதர்சனம்.

அவுட்லுக் மற்றும் இந்தியா டுடே பத்திரிக்கைகளில் வெளியான நாக்பூர் கூட்டம் சம்பந்தமான செய்திகளை படித்தால் குழப்பம்தான் மிஞ்சுகிறது. அவுட்லுக் பத்திரிக்கை பாஜக தெளிவாக இருக்கிறது என்று சொல்கிறது. இந்தியா டுடேயோ குழப்பத்தில் இருக்கிறது என்று வரையறுக்கிறது. ஒரு விஷயத்தில் பாஜக காங்கிரஸை விட பலம் வாய்ந்ததாக இருக்கிறது - அது அவர்களின் இரண்டாம் கட்ட தலைவர்கள். வாரிசு அரசியலையை வழிப்படுத்துணையாக கொண்டிருக்கும் காங்கிரஸ் தொண்டர்களை விட, இது மேல். நடந்து முடிந்த கூட்டத்தில், அவர்கள் இதுவரை கைவசம் வைத்திருக்கும் 138 தொகுதிகளை காபாற்றுவதே மிக முக்கியமான இலட்சியமாக இருக்கும் என்று நினைக்கிறார்கள்.

இதற்கு முன்னால் இருந்த மாதிரி இல்லாமல், இந்த முறை ஒவ்வொரு தலைவரிடமும் சில மாநிலங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. சாந்த குமாரும் பகத் சிங் கொஷியாரியும் ஜம்மு & காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட் மற்றும் அரியானாவினை பார்ப்பார்கள். தேசிய தேர்தல் மேலாளராக நினைத்த அருண் ஜெட்லியின் நினைப்பில் வீழ்ந்தது மண்.அவர் இப்போது உத்தரபிரதேசம்,பிஹார்,பஞ்சாப்,டெல்லி மற்றும் அரியானாவினை கவனிப்பார். முக்கியமான விஷயமென்னவெனில், மேற்சொன்ன மாநிலங்கள் அனைத்திலும் பாஜக அவ்வளவு வலுவாக இல்லை. நரேந்திர மோடி என்றால் குஜ்ராத் என்றாகிவிட்டது. அது தவிர மஹாராஷ்டிரா, கோவா, டாமன் & டையு போன்ற மாநிலங்களையும் கவனிப்பார். சுஷ்மா சுவராஜ் போபாலிருந்து போட்டியிடுவார் என்று தோன்றுகிறது. அவர் மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஜார்கண்டினை கவனிப்பார். தெற்கில் கர்நாடகா தவிர வேறெங்கும் சொல்லி கொள்ளும்படி பாஜக இல்லை, ஆகவே வெங்கயா நாயுடு தெற்கினை பார்த்துக் கொள்வார்.இது தவிர சமீபத்தில் நடைபெற்ற மாநில தேர்தல்களில் வெற்றிப் பெற்ற ராமன் சிங் (சத்தீஸ்கர்), ஷிவ்ராஜ் சிங் சவுஹான் (மத்தியபிரதேசம்) அவரவர்கள் மாநிலங்களில் முன்னிலைப்படுத்தப் படுவார்கள். காங்கிரஸை போல அல்லாமல், இரண்டாம் நிலை தலைவர்கள் பாஜகவில் முன்னிலைப்படுத்தப்படுகிறார்கள்.

அவுட்லுக்கின் கூற்றுப்படி பார்த்தால் 4 விஷயங்களில் பாஜக தெளிவாக இருக்கிறது.

  1. 70,000 மக்களிடம் பாஜக ஒரு ரகசிய சர்வே எடுத்திருக்கிறது, அதன் படி பார்த்தால் பாஜக நாடாளுமன்றத்தில் அதிக வாக்குகள் பெறும் சாத்தியங்கள் தெரிகின்றன

  2. பாஜக / தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களான - பீஹார், ஒரிஸ்ஸா, மத்தியபிரதேசம், குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் மிக குறைவான anti-incumbency அலை தெரிகிறது

  3. anti-incumbency அலை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆளும் மாநிலங்களான மஹாராஷ்டிரா, ஜார்கண்ட், அஸ்ஸாம் மற்றும் அரியானாவில் அதிகமாக இருக்கிறது.இந்த மாநிலஙகளில் பாஜக கூட்டணியினை பலப்படுத்தி, மாநில பிரச்சனைகளை முன்னிறுத்தி தன்னுடைய வாக்கு வங்கியினை பலப்படுத்த முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன

  4. மாயாவதி மற்றும் இடதுசாரிகள் ஆளும் கேரளா / மேற்கு வங்காளத்தில் பெரிய அலைகள் என்று ஒன்றுமில்லை


பார்க்க: அவுட் லுக் | இந்தியா டுடே

தேர்தல் சிதறல்கள் - பிப்.19

முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு

"முலாயம் சிங் யாதவ்வின், பிஜேபி கூட்டு" செய்தி பற்றி - ஹிந்துஸ்தான் டைம்ஸ் - 19.2.09 இதழ்.

தொகுதி பங்கீட்டு விஷயத்தில் காங்கிரசுக்கு அழுத்தம் கொடுக்க ஏற்கனவே ஷரத் பவாருடன் இணக்கமாக பேச்சு வார்த்தை நடத்திக்கொண்டு இருக்கும் எஸ் பி தலைவர் முலாயம் சிங் யாதவ்வின் அடுத்த அஸ்திரமான -"பிஜேபி" கூட்டணிக்காக அவர் சொல்லும் நிபந்தனைகள்:

"ராமர் கோவில் கட்டும் எண்ணத்தை விட வேண்டும்; ஆர்டிகிள் 370 ஐ நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை விட வேண்டும்; "முஸ்லீம் எதிர்ப்பு" நிலையை விட வேண்டும். இதெல்லாம் பிஜேபி செய்தால் அவர்களுடன் கூட்டணி வைத்துக்கொள்ள நாங்கள் தயார். வாஜ்பாயிடம், எங்களுடன் சேரும்படி ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம்; இதே அழைப்பை அத்வானிக்கோ அல்லது வேறு எந்த பிஜேபி தலைவருக்குமோ விடுக்க தயார் - அவர்கள் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால்." -

காங்கிரசுக்கு 15 தொகுதிகளுக்கு மேல் கொடுக்க எஸ்.பி'க்க்கு இஷ்டம் இல்லை. 25 தொகுதிகளுக்கு கீழே இறங்கிவர காங்கிரஸ் தயாராக இல்லை. பல மாதங்களாக தொடரும் இந்த இழுபறி தொடரும் நிலையில், எஸ் பியின் பிஜேபி தந்திரம், தற்போது உ.பியில் ஆட்சியில் இருக்கும் பிஎஸ்பி'க்கு, எஸ் பி ஐ தாக்க நல்ல அஸ்திரமாக பயன்படக்கூடும் என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையில், பிஜேபி தலைவர் ராஜ்நாத் சிங், " எஸ் பி'யுடன் கூட்டா? சான்ஸே இல்லை" என்று சொல்லிவிட்டார். " தேர்தலுக்கு முன்னும் இல்லல - பின்னும் இல்லை - இதெல்லாம் ஒரு சதி," என்று திட்டவட்டமாக சொன்னதோடல்லாமல், " பிஜேபியின் எந்த தலைவராவது முலாயமிடம் எனக்கு தெரியாமல் அப்படியெல்லாம் பேசிவிட முடியுமா என்ன?" என்று ஒரு அதிரடியும் கொடுத்துள்ளார்.

என் 2 பைசா:

காங்கிரஸ் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது!!! போகாத ஊருக்கு வழி கேட்கும் முலாயமின் பூச்சாண்டி அதற்கு தெரியாதா என்ன?!

Gross Domestic Politics

-நாராயணன்

சவுபிக் சக்ரப்ர்தியின் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்தி, காங்கிரஸின் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் கையாலாகத தனத்தினைப் பற்றி பேசுகிறது. பல்வேறு கூறுகளில் நான் சக்ரபர்தியோடு ஒத்துப் போகிறேன். முக்கியமாக, 4 ஆண்டுகள் பொருளாதார சூழல் நன்றாக இருந்த போது, போதுமான அளவிற்கான நிதியறிவோடு (fiscal prudence) இருந்திருந்தால், இப்போது இந்தளவிற்கு நிதி பற்றாக்குறை வந்திருக்காது. இதையே தான் எகனாமிக் டைமிஸின் பத்தியும் பேசியிருக்கிறது. நிதி பற்றாக்குறை தான் இன்றைக்கு உலகமெங்கும், பொருளாதார மந்தத்திற்கு எதிராக இடைக்கால ஆயுதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பது உண்மையாக இருந்தாலும், சரியான கவனிப்பு இல்லாமல் போனால், அர்ஜெண்டினிய பாதிப்பு போல நமக்கும் ஏற்படக் கூடிய சாத்தியங்கள் அதிகம்.

தேர்தல் வரும் காலம் பார்த்து போன பட்ஜெட்டில் (இடைக்கால பட்ஜெட்டில் அல்ல) அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் வேளாண்மை, அரசு அலுவலகர்கள், ராணுவம் என வாரி வழங்கினார். இரண்டு ஊக்கத்திட்டங்களுக்கு (stimulus package) பின்னும் பொருளாதாரம் காற்று வாங்குகிறது. இன்றைய எகனாமிக் டைம்ஸின் தலையங்கத்தில் இந்தியாவின் நிதி பற்றாக்குறை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பது பற்றிய ஒரு புள்ளிவிவர கணக்கு இருக்கிறது. இதையெல்லாம் கவனிக்க வேண்டிய பொறுப்பு ஆளும் மத்திய அரசினை சார்ந்தது. ஆனால், அப்போதெல்லாம் கவனிக்காமல், கடைசி சமயத்தில் உலக பொருளாதார மந்த நிலையின் மீது பழி போடுவது என்பது கையாலாகததனமேயொழிய வேறில்லை.

இத்தகைய சூழ்நிலையில், போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் காங்கிரஸ் அரசின் ’செல்ல திட்டங்களுக்கு” பெருமளவு நிதி ஒதுக்கீடும், இந்தியாவினையே பாதிக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு எவ்விதமான தீர்வும் இல்லாமல் மொன்னையாக முடிந்திருக்கிறது. இப்போது ஆரம்பித்து பொதுவாக விவாதிக்கப்பட்டு வந்திருக்கும் எல்லா கருத்துக் கணிப்புகளுமே காங்கிரஸ் அரசுக்கு சாதகமாகவே இருந்து வருகிறது. அப்படி ஒருக்கால், அது சாத்தியமாகும் பட்சத்தில், எந்த மாதிரியான அரசாங்கத்திடம் நாம் நாட்டை ஒப்படைக்க போகிறோம்?

மறுவெளியீடு செய்யப்பட்ட பதிவு

ஆந்திராவைக் கைப்பற்றப்போவது யார்?

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள கருத்துக் கணிப்பில் ஆந்திர மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியே அதிக இடங்களில் வெல்லும் என்று தெரியவந்துள்ளது.

முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிறப்பான நிர்வாகம் தங்களுக்கு திருப்தி அளிப்பதாக 73 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா பகுதியில் மட்டுமே தெலுங்கு தேசம்-தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கூட்டணி அதிக இடங்களி்ல் வெல்லும் என்றும், கடற்கரை மாவட்டங்களில் சிரஞ்சீவிக்கு பெரிய ஓட்டு வங்கி உருவாகியிருப்பதும் கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சியும் யோகேந்திர யாதவின் சிஎஸ்டிஎஸ் அமைப்பும் இணைந்து நாடு முழுவதும் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகளின் இரண்டாம் பகுதி நேற்று வெளியானது.

இதில் ஆந்திராவில் ஆளும் ராஜசேகர ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 2007ல் 64 சதவீதத்தினர் காங்கிரஸ் ஆட்சி திருப்தி அளிப்பதாக கூறியிருந்தனர். அது தற்போது 9 சதவீதம் உயர்ந்து 73 சதவீதத்துக்கு வந்துள்ளது.

அதேபோல் கருத்து கணிப்பில் பங்கேற்றவர்களில் 45 சதவீதம் பேர் காங்கிரசுக்கு ஓட்டளிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர். 30 சதவீதம் பேர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பாஜகவுக்கு 9 சதவீதம் பேர் ஓட்டுப்போட போவதாக கூறியுள்ளனர்.

கன்னி தேர்தலை எதிர்பார்த்து காத்திருக்கும் சிரஞ்சீவியின் பிரஜாராஜ்யத்துக்கு குறைந்தபட்சம் 7 சதவீத ஓட்டு கிடைக்கும் என தெரிகிறது. இதைவிட கூடுவதற்கும் வாய்ப்பு இருப்பதாக கருத்துகணிப்பு கூறுகிறது.

யாருடைய ஆட்சி சிறப்பாக இருக்கிறது என்ற கேள்விக்கு, கடந்த முறை ஆட்சி செய்த சந்திரபாபு நாயுடுவின் ஆட்சி என 29 சதவீதம் பேரும், தற்போதைய ராஜசேகர ரெட்டி நிர்வாகம் என 57 சதவீதம் பேரும் கருத்து கூறியுள்ளனர்.

வரும் நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி மற்றும் இடதுசாரிகள் கூட்டணி அமைத்துள்ளன. இந்த கூட்டணியால் தெலுங்கானா தவிர மற்ற இடங்களில் காங்கிரஸை வெல்வது கஷ்டம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் பாஜக, பிரஜாராஜ்யம் போன்ற கட்சிகள் காங்கிரஸ் எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்க வாய்ப்புள்ளதால் அது காங்கிரசுக்கு தான் அதிக லாபத்தைத் தரும் என்றும் தெரிகிறது.

அதே சமயத்தில் ஆந்திராவின் கடற்கரை மாவட்டங்களில் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச ஓட்டுக்களை சிரஞ்சீவி கைப்பற்றக்கூடும். பாஜகவுக்கு இந்த தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை கூடவிட்டாலும் கடந்த தேர்தலை விட ஓட்டுக்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.
மொத்தத்தில் தெலுங்கானாவில் தெலுங்கு தேசம் கூட்டணிக்கும், மற்ற பகுதிகளில் காங்கிரசுக்கும் அதிக வெற்றி வாய்ப்பு இருப்பதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

தட்ஸ்தமிழ்

Wednesday, February 18, 2009

"கூட்டணியா? உங்களுடனா? நோ சான்ஸ் !"

அமர்க்களம் ஆறு-உ.பி/3
19.2.2009

முலாயம் சிங் யாதவின் கூற்று விஷமத்தனமானது, வதந்தியைப் பரப்புவதே அதன் நோக்கம் என்று பாஜக தெரிவித்துள்ளது. " சமாஜ்வாதியை கூட்டணியில் சேர்த்துக் கொள்வதைப் பற்றி பரிசீலிக்க கொஞ்சம்கூட வாய்ப்பில்லை." என்று பா.ஜ.க.துணைத் தலைவர் சையத் அபாஸ் நக்வி தில்லியில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"இது போன்ற அறிக்கைகள் வாக்காளர்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டவை. சமாஜ்வாதிக் கட்சி, குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் இழந்து விட்ட தனது முக்கியத்துவத்தை திரும்பப் பெற நினைக்கிறது என்றார் அவர்

பாஜகவுடன் கூட்டணி என்ற எண்ணத்தைத் தோற்றுவித்து அதன் மூலம் காங்கிரசுடன் கூடுதலாகப் பேரம் பேசலாம் என்ற சமாஜ்வாதியின் நோக்கத்தை பாஜக முளையிலேயே கிள்ளிவிட்டது பாஜக.

முன்னர் வந்த செய்தி

தனது கட்சி பாரதிய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் இன்று (புதன்கிழமை 18/2/09) அன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சமாஜ்வாதிக் கட்சியின் நிபந்தனைகளை பா.ஜ.க ஏற்றுக் கொண்டால் மட்டுமே கூட்டணி சாத்தியமாகும் என்ற முலாயம் சிங், அந்த நிபந்தனைகள் என்ன என்று தெரிவிக்கவில்லை. பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானியையும், மூத்த தலைவர் வாஜ்பாயையும் இது குறித்துப் பேச சந்தித்ததாகத் தெரிவித்தார்.

காங்கிரசிற்கும் சமாஜ்வாதிக்க்குமிடையே தொகுதிப் பங்கீடு குறித்து அதிருப்தி நிலவும் வேளையில் முலாயம் இவ்வாறு கூறியிருப்பது கவனத்திற்குரியதாகிறது

தேர்தல் ஆணையத்தின் கருத்துக் கணிப்பு விதிமுறைகள்

நேற்று (செவ்.பிப்ரவரி 17) தேர்தல் ஆணையம் கருத்துக்கணிப்புகள் பற்றிய புது விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. இதன் படி மாநில/நாடாளுமன்ற தேர்தல் நடக்கப்போகும் தேதிகளிலிருந்து 48 மணிநேரத்திற்கு முன்னால் அனைத்துவிதமான கருத்துக் கணிப்புகளும் [பத்திரிக்கை / வானொலி / தொலைக்காட்சி] தடை செய்யப்பட்டுள்ளன.

ஒரு வேளை தேர்தல் பல கட்டங்களாக பிரித்து நடக்கும் பட்சத்தில், கடைசி கட்ட தேர்தல் நடந்து முடிக்கும் வரை வெளியிடக் கூடாது.

The guideline said: “No result of any opinion poll or exit poll conducted at any time shall be published, publicised or disseminated in any manner, whatsoever, by print, electronic or any other media, at any time during the period of 48 hours ending with the hour fixed for closing of poll in an election held in a single phase; and in a multi-phased election, and in the case of elections in different States announced simultaneously, at any time during the period starting from 48 hours before the hour fixed for closing of poll in the first phase of the election and till the poll is concluded in all the phases in all States.”

மறுவெளீயிடு செய்யப்பட்ட பதிவு.

தமிழகத்தில் அதிமுக முந்துகிற்து?






வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எப்படி வாக்களிக்கப்போகிறது என்பதை இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தமிழகம் + புதுச்சேரியில் உள்ள 40 இடங்களுக்கு அடுத்து அரசு அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் என்றுமே பெரும் பங்கு உண்டு

2004 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியதே தேசிய ஜனநாயக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் திமுக அதிமுகவை விட சிறு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை சி.என்.என் ஐபிஎன் கணிப்புக் காட்டுகிறது

திமுகவும் அதிமுகவும் சமமான நிலையில் இருக்கின்றன. 28 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதிம்கவிற்கும் அதே அளவுப் பேர் அதாவது 28 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளார்கள். மீதமுள்ள 44 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளிடையே பிரிந்து போகும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு

விஜயகாந்தின் தேமுதிக பெரிய சக்தியாக வளர்ந்து விடவில்லை. ஆனால் ஓட்டுகள் பிரியஅவர்கள் காரணமாக இருப்பார்கள்

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஓப்பிடுகையில் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிமுக, திமுகவை முந்துகிறது.
நன்றி ibnlive.in

Tuesday, February 17, 2009

வலைப்பதிவிற்கு வந்திருக்கிறார் அத்வானி

இந்தத் தேர்தல் பிரதமர் வேட்பாளர் அத்வானியை வலைப்பதிவிற்கு அழைத்து வந்திருக்கிறது. அவர் முதல் பதிவு தொழில்நுட்பம் தேர்தல் பிரசாரத்தில்
எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை சுவைபட விவரிக்கிறது.

அத்வானி சொல்வது போல் பிரசாரத்தில் உள்ளடக்கம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறதா?

உங்கள் கருத்தை பின்னூட்டத்தில் எழுதுங்கள்



தேர்தல் பணி: துண்டுப் பிரசுரத்திலிருந்து இணையம் வரை

என் வலைப்பதிற்கு வருகை தந்துள்ள நண்பர்களே, வருக. இந்த இணைய தளத்தை உருவாக்கியுள்ள என் இளம் சகாக்கள், வலைப்பதிவில்லாத ஒரு
அரசியல் இணைய துறை (portal) கையெழுத்தில்லாத (மொட்டைக்) கடிதம் போல எனச் சொல்கிறார்கள். அவர்கள் கூற்றிலுள்ள மறுக்கவியலாத நியாயத்தை
நான் உடனே ஏற்றுக் கொண்டேன்.


இணையத்தை அரசியல் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ள, குறிப்பாக தேர்தல் பிரசாரத்திற்கான ஒரு தளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற
யோசனை எனக்கு உற்சாகமளிக்கிறது.1952ல் நடைபெற்ற முதல் தேர்தலிருந்து, ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு பிரசாரகனாகவோ, வேட்பாளராகவோ பங்கேற்கும் ஒரு நல்வாய்ப்பைப் பெற்றவன் என்ற முறையில், நான், தகவல் பரிமாற்றத்திற்கான கருவிகள் எப்படி பரிணாம வளர்ச்சி கண்டு வந்திருக்கின்றன என்பதைப் பார்த்திருக்கிறேன். தகவல் பரிமாற்றத்தைப்
பொறுத்தவரை நான் தொழில்நுட்பத்தின் பக்தனுமல்ல, அதை மறுப்பவனுமல்ல (technology-agnostic). இந்த விஷயத்தில் என் தத்துவம் ரொம்ப சிம்பிள்: பயன்படுகிறதா அது வரவேற்கத்தக்கது. அறுபதாண்டுகளுக்கு மேல் நீளும் என் அரசியல் வாழ்வில், ஒவ்வொரு புதிய தகவல் தொழில்நுட்பத்தையும்-ஆதிகாலத்து கேசியோ டிஜிட்டல் டைரி முதல் ஐ-பாட், ஐ-போன் வரை- நான் உற்சாகத்துடன் அரவணைத்துக் கொண்டிருக்கிறேன்.

முதல் பொதுத் தேர்தலின் போது 25 வயது இளம் அரசியல் ஆர்வலனாக, நான் பாரதிய ஜன சங் கட்சிக்கு ராஜஸ்தானில் பிரசாரம் செய்தேன். அதற்கு முந்தைய ஆண்டுதான் டாக்டர் ஷ்யாம் பிரசாத் முகர்ஜி அந்தக் கட்சியை ஆரம்பித்திருந்தார்.

அப்போது ஒரு துண்டுப் பிரசுரம் அச்சிடுவது கூட ஓர் புதுமையாக இருந்தது. ஒரு சுவையான சம்பவம் நினைவுக்கு வருகிறது.

கோட்புட்லி என்ற இடத்தில் தேர்தல் வேலைகளைக் கவனித்துக் கொள்ளும் பொறுப்பை கட்சி என்னிடம் ஒப்படைத்திருந்தது. அந்தப் பகுதியில் இருந்த
பிரசினைகளை அறிந்து கொண்டு, எங்கள் கட்சி வேட்பாளாரைத் தேர்ந்தெடுத்தால் கட்சி அந்தப் பிரசினைகளுக்கு எப்படியெல்லாம் தீர்வு காணும்
என்பதை விளக்கி ஒரு பிரசுரம் தயார் செய்து அச்சிட்டுக் கொண்டேன். ராஜஸ்தானிலிருந்து கட்சியின் தேர்தல் அறிக்கையின் பிரதிகளையும் எடுத்துக் கொண்டேன்

வாக்குப் பதிவிற்கு ஒரு மாதத்திற்கு முன்னாதாகத் தொகுதிக்குப் போய்விட்டேன். தேர்தல் முடியும்வரை அங்கேயே தங்கவும் முடிவு செய்திருந்தேன்.

ஜெய்ப்பூரிலிருந்து நான் கொண்டுவந்திருந்த பிரசுரங்களை இறக்கிக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்று கொண்டிருந்த எங்கள்
வேட்பாளர் என்னை விநோதமாகப் பார்ப்பதைக் கவனித்தேன். அப்போது அவர் வயதில் பாதிதான் எனக்கு. ஆனால அவர் என்னை அத்வானிஜி என்று என்னை மரியாதையோடு அழைத்துச் சொன்னார்: "இவற்றையெல்லாம் நானும் என்
தொண்டர்களும் தொகுதியில் விநியோகிக்க வேண்டும் என விரும்புகிறீர்களா? ஆனால் அதற்கான தேவை என்ன இருக்கிறது. இந்த அறிக்கை, இந்த பிரசுரம் இவற்றால் எல்லாம் நம் பிரசார உத்திக்கு எந்த பிரயோசனமும் கிடையாது.

இதை விநியோகிக்க நிறைய நேரம் செலவிட வேண்டும். நீங்கள் வற்புறுத்தினால் செய்கிறோம். ஆனால் அதனால் நமக்கு விழ இருக்கும் வாக்குகளை விட ஒரு ஓட்டுக் கூட கூடுதலாகக் கிடைக்காது" என்றார்.

"ஒரு விஷயம் சொல்லட்டுமா அத்வானிஜி" என்று கேட்டுவிட்டு அவர் தொடர்ந்தார். இந்தத் தேர்தலில் என்னை யாரும் தோற்கடிக்க முடியாது. இது குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் தொகுதி. இங்கு
போட்டியிடும் வேட்பாளர்களில் நான் ஒருவன் மட்டும்தான் குஜ்ஜர் இனத்தைச் சேர்ந்தவன்." அவர் அடுத்துச் சொன்ன வாக்கியம் இந்தியாவில் தேர்தல்களின் யதார்த்தம் குறித்து என் கண்களைத் திறந்தது. முதலில், வாக்குச் சாவடிக்குப் போகும் எந்தவொரு குஜ்ஜரும் எனக்குத்தான் வாக்களிக்கப் போகிறான். ஏனெனில் நான் ஒரு குஜ்ஜர். இரண்டாவதாக குஜ்ஜர் அல்லாதவர்களில்
பெரும்பான்மையானவர்களும் எனக்குத்தான் வாக்களிப்பார்கள். ஏனெனில் அநேகமாக நான்தான் ஜெயிப்பேன் என அவர்களுக்குத் தெரியும். அவர்கள் தோற்கப் போகிற வேட்பாளருக்கு வாக்களித்து தங்கள் ஓட்டை வீணடிக்க விரும்ப மாட்டார்கள்" என்றார்.

பல ஆண்டுகளாக, அநேகமாக 1980 இறுதிவரை, நாளிதழ்கள், பத்திரிகைகள், அகில இந்திய வானொலி, இவைதான் அரசியல் செய்திகளைப் பகிர்ந்து கொள்ள இருந்த சாதனங்கள். அரசிற்கு சொந்தமானவை அல்ல என்பதால், அச்சு
ஊடகங்கள், சுதந்திரமானவையாகவும், காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் செய்திகளையும் கருத்துக்களையும் வெளியிடுபவையாகவும் இருந்தன. ஆனால் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த வானொலியை காங்கிரஸ் கட்சி கூச்சநாச்சமில்லாமல் தனது பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தி வந்தது.எனக்கு
நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஆந்திர பிரதேசத்தில் 1982ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது வானொலி என்.டி.ராமராவின் பெயரைச் சொல்லவே இல்லை. ஆனால் அவர் அந்தத் தேர்தலில் அபார வெற்றி பெற்றார். அவரைப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்ள கவர்னர் அழைத்த போதுதான்
மக்கள் முதன்முதலாக வானொலியில் என்.டி.ராமராவ் பெயரைக் கேட்டார்கள்.

இந்திராகாந்தியின் எமெர்ஜென்சிக்காலக் கொடுங்கோல் ஆட்சி வீழ்ந்த பிறகு ஏற்பட்ட ஜனதாக் கட்சி ஆட்சியில் நான் செய்தி ஒலிப்பரப்புத் துறை அமைச்சராக இருந்த போது அரசு ஊடகங்கள் ஆளும் கட்சிக்கு ஆதரவாகச் செயல்படும் மனோபாவத்தையும், அமைப்பையும் மாற்றும் பெரும் பொறுப்பை நான் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இந்தியத் தேர்தல் வரலாற்றிலேயே முதன் முறையாக சட்ட மன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் போது எதிர்க்கட்சிகளுக்கும் தங்கள் கருத்தை மக்கள் முன் வைக்க வானொலியில்நேரம் ஒதுக்குவது என நான் எடுத்த முடிவு பெரிதும் வரவேற்கப்பட்டது. எனக்குப்
பெருமிதம் ஏற்படுத்திய முடிவு அது.


இணையத்திற்குப் பல சிறப்புகள் உண்டு.அவற்றில் முக்கியமானது அது அரசுக்கோ, அல்லது எந்தவொரு தனியார் ஊடகக் குழுமத்திற்கோ சொந்தமானதல்ல என்பதாகத்தானிருக்க முடியும்.அது எல்லோருக்கும் பொதுவானது. அந்தவகையில், இதுவரை மனிதகுலம் கண்டுபிடித்த தகவல் பரிமாற்ற சாதனங்களிலேயே இதுதான் ஜனநாயகமானது என்ற பெருமைக்குரியது. அரசியில் செய்திகளைத் தணிக்கை செய்வது என்பது சாத்தியமற்றது மட்டுமல்ல, நினைத்துப் பார்க்கவும் முடியாதது (கம்யூனிஸ்ட் நாடுகள், சர்வாதிகார அரசுகள் நீங்கலாக)

1952ல் துவங்கிய இந்தியத் தேர்தல்கள் வெகுவாக மாறிவிட்டன.இந்திய
வாக்காளர்கள், ஒட்டு மொத்தமாகவும் சரி, தனியாகவும் சரி, முதிர்ச்சி அடைந்து விட்டார்கள். ஓட்டுக்கு உள்ள சக்தி பற்றி ஜனநாயக ரீதியில் ஏற்பட்டிருக்கும் பிரஞ்கையும், விழிப்புணர்வும் அளவிடமுடியாத வண்ணம் வளர்ந்திருக்கின்றன.
எந்த ஒரு அரசியல்கட்சியும், எந்த ஒரு வேட்பாளரும் அவரைக் கிள்ளுக்கீரையாக நினைத்துவிட முடியாது. ஆட்சியில் இருக்கும் ஒரு அரசை வாக்காளர்கள் அதன் செயல் திறனைக் கொண்டு அளவிடுகிறார்கள். ஆட்சியைப் பிடிக்க எண்ணுபவர்களை அவர்களது சொல்வது தங்கள் எதிர்பார்ப்புகளோடு பொருந்திப் போகிறதா என எடை போடுகிறார்கள்.

சுருக்கமாகச் சொன்னால், கோட்புட்லியில் எங்கள் வேட்பாளர், அச்சிட்ட பிரசுரம் எல்லாம் தேவையில்லை என்று சொன்ன அந்த நாட்களை விட, இன்று, தேர்தல் பிரசார வெளியீடுகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது முக்கியத்துவம்
பெற்றிருக்கிறது

கையால் ஈய எழுத்துக்களை அடுக்கிச் சிறிய அச்சகங்களில் (இவை இன்று அநேகமாக மறைந்து விட்டன) அச்சிடும் துண்டுப் பிரசுரங்களிலிருந்து என் சொந்தத் தளத்தில் வலைப்பதிவு எழுதுவதுவரை நானும் தேர்தல் பிரசாரத்திற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் வெகு தூரம் வந்து விட்டேன்.

என் முதல் வலைப்பதிவைப் படிக்க உங்கள் பொன்னான நேரத்தைச் செலவிட்டதற்கு நன்றி. விரைவிலேயே இன்னொரு பதிவோடு வருவேன்.
அதுவரை நல்வாழ்த்துகள்.


அத்வானியின் வலைப்பதிவுகளைப் படிக்க:

http://blog.lkadvani.in/

பைரோன் சிங் ஷிகாவத் - பிரதமர் வேட்பாளருக்கான போட்டி(?!!)

அத்வானி தான் பா.ஜ.கவின் பிரதம மந்திரி வேட்பாளர் என்று அறிவித்து, கூகிள் ஆட்வேர்ஸில் வேறு விளம்பரன் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், என்.டி.ஏ காலத்து துணை ஜனாதிபதி பைரோன் சிங் ஷிகாவத், முஷ்டியினை மடித்து கொண்டு களத்தில் இறங்கியிருக்கிறார்.

ராஜ்நாத் சிங் மற்றும் இன்ன பிற தேர்தலையே சந்திக்காத நபர்கள் எல்லாம் கட்சியில் முன்னிலைப்டுத்த படுவதும், அத்வானி/வாஜ்பாயினை விட சீனியரான தன்னை யாரும் கண்டுகொள்ளாததும் இந்த முறைப்புக்கு காரணமாக இருக்கிறது.

ஏற்கனவே பெரியதாக சொல்லிக் கொள்ள எதுவுமில்லாத பட்சத்தில் [ஸ்திரத்தன்மை, நாட்டின் பாதுகாப்பு] இப்போது பைரோன் சிங் ஷிகாவத் பேசி கொண்டிருக்கும், மாற்று பிரதம மந்திரி பேச்சு இன்னமும் பா.ஜ.க தொண்டர்களை பிளவுப் படுத்தும். ஆர்.எஸ்.எஸ்ஸின் பிண்ணணியில் தான் இது நடக்கிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிந்தாலும், பழமைவாத பாஜக தொண்டர்களுக்கும், விசுவாசிகளுக்கும் இது அல்வா சாப்பிடுவது போன்ற தருணம்.

என்னத்தான், ராமர் கோயில் கட்டுவோம் என்று சவடால் விட்டாலும், அது கட்ட முடியாது என்பது பாஜக ஆட்சியில் இருக்கும்போதே தெளிவாக ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு தெரிந்துவிட்டது. இப்போது மீண்டும் அந்த சவடாலை ஆரம்பிக்கும்போது அதை நம்ப அவர்கள் தயாராக இல்லை.

பாஜகவின் உள்கட்சி பூசல் பூதாகாரமாய் வெடித்தால், பெற போகும் கொஞ்ச நஞ்ச தொகுதிகளிலும் பாஜக பெரும் எதிர்ப்பையும் தோல்வியையும் சந்திக்குமென்று தோன்றுகிறது.

கேள்வி: நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஒருவர் பிரதமராக முடியுமா?

பார்க்க: ஹிந்துஸ்தான் டைம்ஸில் பங்கஜ் வோராவின் பத்தி.

இந்த பதிவு மறுவெளியீடு செய்யப்பட்டது.

சோனியா கோபம்; விரைந்தார் ராமதாஸ்

சென்னை, பிப். 16: இலங்கைப் பிரச்னை தொடர்பாக, பாமக மீது காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி கோபத்தில் உள்ளார். இது குறித்து தங்கள் கட்சியின் நிலைப்பாட்டை விளக்க, தில்லி விரைந்துள்ளார் பாமக நிறுவனர் ராமதாஸ்.

முன்னதாக, தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனம், சென்னையில் ராமதாஸை திங்கள்கிழமை காலை சந்தித்தார்.

இதைத் தொடர்ந்து, தில்லி பயணத்தை திங்கள்கிழமை பிற்பகல் மேற்கொண்டார் ராமதாஸ்.

இலங்கைத் தமிழர் பிரச்னையில் தமிழக அரசியல் கட்சிகள் இரு அணிகளாகப் பிரிந்து குரல் கொடுத்து வருகின்றன.

அதில், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளுடன் மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் உள்ள பாமகவும் இணைந்து இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை உருவாக்கின.

முழு அடைப்பு, மனித சங்கிலி என பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை மேற்கொண்டு வருகிறது இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம்.

அதேசமயம், திமுக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இலங்கைத் தமிழர் நலஉரிமைப் பேரவையை உருவாக்கியுள்ளன.

பாமகவுக்கு விடப்பட்ட வேண்டுகோள்...

இந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் காங்கிரஸ் கட்சியின் நிலையை விளக்கி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், ""இலங்கைப் பிரச்னையில் திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளும், இந்திய அரசுக்கு ஆதரவாக உள்ளன. ஆனால், ராமதாஸ், திருமாவளவன் போன்றோர் வேறுபட்டு நிற்கின்றனர். இது ஏன் என்பதை விளக்க வேண்டும்'' என்று கூறியிருந்தார். சிதம்பரத்தின் பேச்சு, பாமகவுக்கு விடப்பட்ட வேண்டுகோளாகவே கருத வேண்டியிருக்கிறது.

சுதர்சனத்தின் தில்லி பயணம்... மக்களவைத் தேர்தல் குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் சார்பிலும், கூட்டணி அடிப்படையிலும் முடிவெடுக்க தமிழக சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.சுதர்சனத்தை கடந்த வாரம் தில்லிக்கு அழைத்தது கட்சி மேலிடம்.

மக்களவைக் கூட்டத் தொடருக்காக தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் தங்கபாலுவும் தில்லியில் இருக்கிறார்.

சுதர்சனம் மற்றும் தங்கபாலு ஆகியோர் தமிழகத்தின் அரசியல் நிலவரம், மத்தியில் கூட்டணியில் உள்ள தமிழகக் கட்சிகளின் செயல்பாடு ஆகியவற்றை கட்சி மேலிடத்துக்கு தெளிவாக எடுத்துக் கூறினர்.

ராமதாஸýடன் சந்திப்பு:

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பாமக நிறுவனர் ராமதாûஸ சென்னையில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார் சுதர்சனம்.

""மத்தியில் தங்கள் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறீர்களா? இல்லையா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்'' என்று சுதர்சனம் அப்போது கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதைத் தொடர்ந்தே, ராமதாஸ் அவசர அவசரமாக தில்லி சென்றுள்ளதாகத் தெரிகிறது.

தினமணி 17.2.2008

இது தொடர்பாக தில்லியில் இந்து நாளிதழ் நிருபர் பாலாஜிக்கு மருத்துவர் ராமதாஸ் அளித்த பேட்டி:
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திமுக -அதிமுக இரண்டையும் தங்கள் கட்சி சமதூரத்தில் வைத்திருப்பதாகத் தெரிவித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் தேசிய இயக்கம் மற்றும் ஒத்த சிந்தனை கொண்ட கட்சிகளுடன் தாங்கள் இணைந்திருப்பது இலங்கை ராணுவத்தின் மூலம் தொடர்ந்து துன்பத்திற்குள்ளாகி இருக்கும் தமிழர்களுக்காகப் போராடவே என அவர் தெளிவு படுத்தினார்.

மத்தியில் உள்ள ஐக்கிய முற்போக்கு அணி அரசிற்குத் தங்கள் கட்சியின் ஆதரவு தொடரும்.

The Hindu 17.2.2009

இந்தப் பின்னணியில் என் கேள்விகள்:

1.'ஆறரைக் கோடித் தமிழ் மக்களின் உணர்வுகளை மத்திய அரசு அவமதித்துவிட்டது' 'மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்துவிட்டது' எனப் பேசி வந்திருக்கும் மருத்துவர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி, காங்கிரசுடன் கூட்டணி அமைத்து வரும் தேர்தலில் மீண்டும் காங்கிரஸ் அரசையே தேர்ந்தெடுக்குமாறு மக்களைக் கோருமா?

2.அல்லது தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் கூட்டங்களில் பங்கேற்று வரும் பா.ஜ.கவுடன் அணி சேருமா?

3.அல்லது தனி ஒரு அணியாக இலங்கை பிரசினையை முன்னிறுத்திக் களமிறங்குமா?

பா.ம.க. என்ன செய்யும்? என்ன செய்ய வேண்டும்? வாசகர்களே உங்கள் கருத்தென்ன?

மாலன்

மீண்டும் ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சியா?

சி.என்.என் -ஐபிஎன் தொலைக்காட்சி 28 மாநிலங்களில் 1280 இடங்களில் 20, 000
வாக்காளர்களிடம், வளர்ச்சியடைந்துவரும் சமூகங்களுக்கான ஆய்வு மையம் என்ற அமைப்பினருடன் இணைந்து வரவிருக்கும் தேர்தலை முன்னிட்டு சில கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டுள்ளனர். அந்த முடிவுகளில் சில:

தேர்தலின் போது கருத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய பிரசினை:

பொருளாதாரம்தான் என்போர் : 32%
பயங்கரவாதம் & தேசப்பாதுகாப்பு: 21%
அதிகரித்து வரும் வேலையின்மை: 18%
இடஒதுக்கீடு : 5%
இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வாக்களிப்பவர்கள்: 2%
இந்துத்வா பிரசினை முக்கியம் என நினைப்பவர்கள்: 1%

ஐக்கிய முற்போக்கு அணி ஆட்சி

திருப்தி அளிக்கிறது : 66%
அதிருப்தி தருகிறது : 21%

ஐக்கிய முற்போக்கு அணிக்கு மீண்டும் வாய்ப்பு
அளிப்போம் என்போர்:48%
அளிக்க மாட்டோம் என்போர்: 30%

நகர்ப்புற பட்டதாரி இளைஞர்களில் 32 சதவீதம் பேரும், கிராமப்புற இளைஞர்களில் 25 சதவீதம் பேரும் வேலையில்லா திண்டாட்டத்தைத்தான் மிக
முக்கியமான பிரசினையாகக் கருதுகின்றனர்.

இந்தக் கணிப்பின் மாநில வாரியான முடிவுகளை பிப்ரவரி 16லிருந்து 21 வரை
இரவு 10 மணிக்கு CNN-IBN தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது.

மேலும் விவரங்களுக்கு:
http://ibnlive.in.com/

"காங்கிரஸ் பிச்சை கேட்காது"

தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஷரத் பவார் பிரதமர் பதவிக்குப் போட்டியிட்டால் அதை சமாஜ்வாதி கட்சி எதிர்க்காது எனத் தெரிவித்துள்ளது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.

"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன." என்றார் சிங்.

ஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.2.2009

Monday, February 16, 2009

வேர் இஸ் தி பார்ட்டி

தமிழகக் கட்சிகளின் போக்குகளை உற்றுக் கவனிக்க விரும்புவர்கள் வசதிக்காக செய்திகள் கட்சி வாரியாகத் தொகுக்கப்படும். அவை தேதி வாரியாக ஒரே பதிவில் அடுக்கப்படும் (அண்மைச் செய்தி மேலே)

ஒரே சொடுக்கில் கட்சிகளின் போக்கை நீங்கள் அறிந்து கொள்ளலாம்

அமர்க்களம் ஆறு

அமர்க்களம் என்ற சொல், போர்க்களம், கூச்சல் நிறைந்த குழப்பம் என இரு பொருள் கொண்டது.

அடுத்த ஆட்சியைத் தீர்மானிக்கக் கூடிய வலு ஆறு மாநிலங்களின் கையில் உள்ளது. தேர்தல் குறித்த அந்த மாநிலச் செய்திகள், மாநிலம் வாரியாக இங்கே தொகுக்கப்படுகின்றன. அவை ஒரே பதிவில் தேதி வாரியாக அடுக்கப்படும். (அண்மைத் தேதி மேலே)

தேர்தலுக்கு முன் ஊகங்கள் செய்து கொள்ள விரும்புவர்கள், தேர்தலின் போக்கை கவனிக்க விரும்புவர்கள் ஒரு சொடக்கில் ஒரு மாநிலத்தின் நிலையை அறிந்து கொள்ளலாம். வசதிக்காக இது.

சுருக்கமாகச் சொன்னால் இது (6) States Watch

9ல் என்ன ரகசியம்?

வேர் இஸ் தி பார்ட்டி-அதிமுக-2 18/2/09


தமிழகத்தில் அதிமுக முந்துகிறது ?

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எப்படி வாக்களிக்கப்போகிறது என்பதை இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தமிழகம் + புதுச்சேரியில் உள்ள 40 இடங்கள்

அடுத்து அரசு அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் என்றுமே முக்கியப் பங்கு வகிக்கும்.
2004 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியதே தேசிய ஜனநாயக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் திமுக அதிமுகவை விட சிறு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை சி.என்.என் ஐபிஎன் கணிப்புக் காட்டுகிறது

திமுகவும் அதிமுகவும் சமமான நிலையில் இருக்கின்றன. 28 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதிம்கவிற்கும் அதே அளவுப் பேர் அதாவது 28 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளார்கள். மீதமுள்ள 44 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளிடையே பிரிந்து போகும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு

விஜயகாந்தின் தேமுதிக பெரிய சக்தியாக வளர்ந்து விடவில்லை. ஆனால் ஓட்டுகள் பிரியஅவர்கள்
காரணமாக இருப்பார்கள்

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஓப்பிடுகையில் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிமுக, திமுகவை முந்துகிறது
.


வேர் இஸ் தி பார்ட்டி- அதிமுக-1

9ல் என்ன ரகசியம்

அதிமுக ஏற்கனவே தமிழக முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்து அதன் பட்டியலை தயாரித்து வருகிறது.

40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 9 பேர் கொண்ட குழு, ஒன்றிய அளவில் 9 பேர் கொண்ட குழு, நகர குழு, சட்டமன்ற தொகுதிக்குழு என தலா 9 பேர், இது தவிர வாக்குச்சாவடிக்கு 27 பேர் கொண்ட குழு ஆகியவற்றை அமைத்து, தேர்தல் பணிகளை ஜெயலலிதா முடுக்கிவிட்டுள்ளார்.

கூட்டணி குறித்தும் அதிமுக தரப்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், எந்தெந்த கட்சியுடன் கூட்டணி, அந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்ற விவரம் உடனடியாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மு.க.படுத்தாலும் திமுக சுறு சுறு

சென்னை, பிப். 15: நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில், ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இருகட்சிகளிலும் கிளை அளவில் தொண்டர்கள் முடுக்கிவிடப்பட்டு, பணிகள் துவங்கப்பட்டுள்ளன.
.
தற்போதைய நாடாளுமன்றம் மே மாதத்துடன் முடிவடைகிறது. இந்நிலையில் நாடாளுமன்றத்துக்கு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. தேசிய அளவில் தேர்தலுக்கு முக்கிய கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி ஆகியவை ஆயத்தமாக உள்ளன. கூட்டணி பேச்சு வார்த்தை, வேட்பாளர் தேர்வு என அக்கட்சிகள் மும்முரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

மாநிலத்தின் ஆளும்கட்சியான திமுக தேர்தல் பணிகளை முடுக்கிவிட பல்வேறு நிலையில் கூட்டங்களை நடத்தி வருகிறது.
தென்மண்டல அமைப்பு செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட மு.க. அழகிரி, தென் மாவட்டங்களின் செயலாளர்களை அழைத்து கூட்டம் நடத்தி, அந்த மாவட்டங்களில் தேர்தல் பணிகளை முடுக்கிவிட பணித்துள்ளார்.

கிளைக்கழகம் வரையிலும் தொண்டர்களை உற்சாகப்படுத்தி, தேர்தல் பணிகளுக்கு அவர்களை தயார்படுத்த மாவட்ட செயலாளர்களை அவர் கேட்டு கொண்டுள்ளார். இந்தநிலையில் திமுகவின் தேர்தல் பணி செயலாளர்கள் கூட்டம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் பொருளாளர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.

முதன்மைச் செயலாளர் ஆற்காடு வீராசாமி, துணைப் பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு ஆலோசனைகளை கூறினார்கள். சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக வியூகங்களை அமைப்பது பற்றி விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த கூட்டத்தில் தேர்தல் பணி செயலாளர்கள் கம்பம் செல்வேந்திரன், எஸ்.ரகுபதி, சேடப்பட்டி முத்தையா, செ. அரங்கநாயகம், முபாரக் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து திமுக மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தை கட்சியின் பொதுச்செயலாளர் க. அன்பழகன் நாளை கூட்டியுள்ளார். கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நாளை மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாவட்ட செயலாளர்கள், தேர்தல்பணிக்குழு செயலாளர்கள் ஆகியோர் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலை மேற்கொள்ள வேண்டிய அணுகுமுறை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாளை மறுநாள் சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதை அடுத்து அன்று மாலை திமுக எம்எல்ஏக்கள் கூட்டமும் சென்னையில் நடைபெறுகிறது.

மாலைச்சுடர் பிப் 15

சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு

"காங்கிரஸ் பிச்சை கேட்காது"
அம்ர்க்களம் ஆறு-2/உ.பி
(17.2.2009)
குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக் விஜய் சிங் பதிலளித்துள்ளார்.'மரியாதையுடன் கூடிய கூட்டணி'யையே தங்கள் கட்சி சமாஜ்வாதி கட்சியிடம் தங்கள் கட்சி எதிர்பார்ப்பதாகவும், காங்கிரஸ் அவர்களிடம் பிச்சை எடுக்காது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

"சமரசம் செய்து கொள்வது சாத்தியம்.ஆனால் அவர்களிடம் பிச்சை கேட்க மாட்டோம்" என லக்னோ வந்திருந்த சிங் தெரிவித்தார்.

"பாஜக, பகுஜன் சமாஜ் போலல்லாமல் சமாஜ்வாதி ஒரு மதச்சார்பற்ற கட்சி என்பதால் அதனுடன் கூட்டணி வைத்துக் கொள்ள முடிவு செய்தோம். என்றாலும் சில தொகுதிகள் காரணமாக பேச்சு வார்த்தை தடைப்பட்டுள்ளது. இந்தத் தொகுதிகளில் போட்டியிட இரு கட்சிகளிலுமே வலுவான வேட்பாளர்கள் இருக்கிறார்கள். கடந்த தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் மட்டுமே தொகுதிகளைப் பங்கிட்டுக் கொள்வது என்பது இயலாது. ஏனெனில் சில தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டுள்ளன. நிலைமைகள் மாறியுள்ளன." என்றார் சிங்.

ஏற்கனவே கடந்த தேர்தலில் தாங்கள் வெற்றி பெற்ற தொகுதிகளையும், இரண்டாவதாக வந்த தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என சமாஜ்வாதி கட்சி கேட்கிறது. அவற்றோடு கடந்த முறை சமாஜ்வாதி கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றூ இப்போது காங்கிரசிற்குச் சென்றுவிட்ட ராஜ்பாப்பர், பெனி பிரசாத் வர்மா போன்றோரது தொகுதிகளையும் தங்களுக்கே ஒதுக்க வேண்டும் எனவும் அது கோருகிறது.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 17.2.2009

அமர்க்களம் ஆறு-1/உ.பி


தேசியவாத காங்கிரஸ் தலைவர்
சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி ஆதரவு


புதுடெல்லி, பிப்.16-

மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு சமாஜ்வாடி கட்சி வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பிரதமராக சமாஜ்வாடி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

இது குறித்து சமாஜ்வாடி பொதுச் செயலாளர் அமர்சிங் கூறுகையில், "தற்போது, மன்மோகன் சிங்கை பிரதமராக ஏற்றுக் கொண்டு இருக்கிறோம். ஒருவேளை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் அல்லது எங்கள் கட்சியின் தலைவர் முலாயம் சிங் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு ஏற்பட்டால் இரு கட்சிகளுமே ஒன்றுக்கொன்று எதிர்ப்பு தெரிவிக்காது'' என்றார்.

இதற்கிடையே தேசியவாத காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் திரிபாதி, `சமாஜ்வாடி மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையிலான உறவை மராட்டிய மாநிலத்தை தாண்டி வலுப்படுத்துவதற்காக சரத் பவாரும் அமர்சிங்கும் நடத்திய பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருக்கிறது' என்று தெரிவித்தார்.
தினத் தந்தி பிப்-16
முன் வந்த செய்தி கீழே: (பிப்14)

அமர்சிங் அதிருப்தி

Saturday, 14 February, 2009 12:28 PM
.
புதுடெல்லி, பிப்.14: கல்யாண்சிங் உடனான கூட்டணிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில் இந்த விவகாரத்தை சில காங்கிரஸ் தலைவர்கள் ஊதிப் பெரிதாக்கி வருவதாக சமாஜ்வாதி கட்சியின் பொதுச்செயலாளர் அமர்சிங் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ளவும் தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதை அவர் தெளிவுபடுத்தி யுள்ளார்.
.
சி.என்.என். ஐ.பி.என். தொலைக் காட்சியின் "டெவில்ஸ் அட்வகேட்' என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் பேட்டியளித்தார். அப்போது அவர், பிஜேபியிலிருந்து விலகியுள்ள உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்குடன் பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணி வைத்திருப்பதை சில காங்கிரஸ் தலைவர்கள் வேண்டு மென்றே ஊதிப்பெரிதாக்குவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

""பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு அப்போது மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசும், மாநிலத்தில் இருந்த கல்யாண் சிங் தலைமை யிலான அரசும்தான் காரணம். அப்படிப்பட்ட காங்கிரசுடன் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள தயாராக இருக்கும்போது, தற்போது பிஜேபியை எதிர்க்கும் கொள்கை களைக் கொண்ட கல்யாண்சிங்குடன் ஏன் கூட்டணி வைத்துக்கொள்ளக் கூடாது'' என்று அமர்சிங் கேள்வி எழுப்பியுள்ளார். அதே சமயம் காங்கிரசுடனான கூட்டணியை முறித்துக்கொள்ள தங்கள் கட்சி தயாராக இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தி இருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்குடன் நல்லுறவு நீடிப்பதாக அவர் தெரிவித்தார். காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக்கொண்டால் சமாஜ்வாதி கட்சிக்கு அரசியலில் பெரும் இழப்பு ஏற்படும் என்பதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணியை முறித்துக்கொள்ள விரும்ப வில்லையா? என்ற கேள்விக்கு பதிலளித்த அமர்சிங் அதனை மறுத்தார்.
உத்தரப்பிரதேசத்தில் தொகுதி பங்கீடு செய்து கொள்வது குறித்த பேச்சுவார்த்தை மற்றும் கட்சித் தலைவர் முலாயம் சிங்குக்கு எதிரான சிபிஐ வழக்கு ஆகியவை காரண மாகவே காங்கிரசுடன் சமாஜ்வாதி கட்சிக்கு கசப்புணர்வு ஏற்பட்டி ருப்பதாக கூறப்படுவதையும் அமர்சிங் நிராகரித்தார்.
-மாலைச்சுடர்- பிப் 14

Saturday, February 14, 2009

அலசல்: மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள்?

- நாராயணன்

தேர்தல் சுவாரசியங்கள் களை கட்டத் தொடங்கிவிட்டன. கற்பனையில் கூட சாத்தியமில்லாத விஷயங்களையெல்லாம் பேச ஆளாளுக்கு ஒரு திசையில் லவுட்ஸ்பீக்கர்கள் போடத் தொடங்கிவிட்டார்கள். ஆனால் மக்கள் எப்படி தேர்தலை பார்க்கிறார்கள் என்பது பற்றிய அடிப்படையான ஒரு செய்தியினை மொத்தமாக மறந்துவிட்டார்கள்.

கடந்த 6 மாதங்களில் மாநிலங்களில் நடந்த தேர்தல்களையும், அதன் உட்பொருளையும் பார்த்தால் ஒரளவிற்கு இதன் pattern விளங்கும். ராஜஸ்தான்,டெல்லி,மத்திய பிரதேஷ்,மிசோரம்,சத்திஸ்கர், ஜம்மு & காஷ்மீர் என 6 இடங்களில் சமீபத்தில் தேர்தல் நடந்தது. இதில் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் மிசோரமில் காங்கிரஸ் வென்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஜம்மு & காஷ்மீரில் ஜே.என்.சியின் உமர் அப்துல்லா தலைமையில் ஆட்சி பொறுப்பினை ஒப்படைத்திருக்கிறது. மீதமிருக்கும் மத்திய பிரதேஷ், சத்தீஸ்கரில் பா.ஜ.க ஆட்சி அமைத்திருக்கிறது. எல்லா மாநிலங்களிலும் பெருவாரியான மக்கள் இந்த முறை வாக்களித்திருக்கிறார்கள். சராசரியாக 60% மேலான வாக்குப்பதிவு நடந்திருக்கிறது.

டெல்லியில் ஷீலா தீக்‌ஷித் தலைமையில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைத்திருக்கிறது. ராஜஸ்தானில் பா.ஜ.க தோற்று காங்கிரஸும், மத்திய பிரதேஷில் காங்கிரஸ் தோற்று பா.ஜ.கவும் ஆட்சி அமைத்திருக்கின்றன. இதில் முக்கியமாக பார்க்க வேண்டியது வளர்ச்சித் திட்டங்கள், ஆட்சியில் இருக்கும்/அமையப் போக்கும் கட்சியின் தொலை நோக்கு பார்வை, சராசரி குடிமகனுக்கான வசதிகள். அதை செவ்வனே செய்து கொண்டிருக்கும் டெல்லியில், மீண்டும் அதே கட்சி ஆட்சி அமைய மக்கள் வழிவகுத்திருக்கிறார்கள். அப்படி வளர்ச்சி போதுமான அளவில் இல்லாத மாநிலங்களில், மக்கள் மாற்று கட்சியினை முன்னிறுத்தியிருக்கிறார்கள். தேசிய கட்சியாக தன்னை முன்னிறுத்த மாயாவதி செய்த விஷயங்களை ஒட்டுமொத்தமாக ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

26/11 பின்னான இந்தியாவில், சாதாரண குடிமக்கள் நாட்டின் பாதுகாப்பினையும், ஸ்திரத்தன்மையையும் முக்கியமாக பார்க்கிறார்கள். கிட்டத்திட்ட 3 மாதங்கள் ஆக கூடிய நிலையில், இன்னமும் காங்கிரஸ் அரசு சரியான முடிவு சொல்லாத நிலையில், முக்கியமாக மஹாராஷ்டிரா உள்ளிட்ட மேற்கு இந்தியாவில், காங்கிரஸின் மீதான எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. வடக்கு / மேற்கில் 26/11 ஒரு பிரச்சனையென்றால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக/காங்கிரஸ் மீது ஈழத்தமிழர்கள் மீதான பிரச்சனையில், தமிழக இளைஞர்கள் கடுங்கொந்தளிப்பில் இருக்கிறார்கள். ஆந்திராவில் ஆளும் காங்கிரஸ் அரசின் மீதான பிரச்சனைகள், தெலுங்கானா, சிரஞ்சீவியின் ப்ரஜா ராஜ்யம் என நீளும் பிரச்சனைகளும், கர்நாடகாவில் பா.ஜ.க அரசு பதவியேற்ற பிறகு நடத்தப்பட்டுள்ள இனம்/கலாச்சாரம் சார்ந்த அடக்குமுறைகளும், கேரளாவில் கம்யுனிஸ்டுகளிடையே நடந்து கொண்டிருக்கும் உள்குத்துக்களுமாக பார்த்தால், இரு தேசிய கட்சிகளுக்கும் தெற்கில் மிகப்பெரிய பின்னடைவு காத்துக் கொண்டிருக்கிறது. 26/11 பிரச்சனையில், பா.ஜ.க தன்னை ஒரு வலுவான அரசாக முன்னிறுத்துகிறது. அணுகுண்டு சோதனை செய்ததும் பா.ஜ.க தான் என்பதும், தீவிரவாதத்தினை ஒடுக்க கடுமையான சட்டங்களை முன்னிறுத்த வேண்டும் என்பதையும் தொடர்ச்சியாக பா.ஜ.க செய்து கொண்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ.கவின் இந்துத்துவா முகம் தென் மாநிலங்களில் பெரிய speed breaker.

இது தவிர, இன்றைக்கு உலகம் இருக்கக்கூடிய சூழலில் மக்கள் ஒரு சிக்கலான கூட்டணி அரசுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்பது என் தனிப்பட்ட எண்ணம். ஒரு வலுவான, இந்தியாவினை முன்னெடுத்து செல்லக்கூடிய ஒரு கட்சியினை தான் மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்கு இந்தியாவினை எதிர்நோக்கியிருக்கும் பிரச்சனைகள் என்பது பற்றிய பிரச்சனைகள் கீழே. இதை முன்னோடியாய் வைத்தும், மாநிலங்களில் இருக்கும் பெரும் பிரச்சனைகளையொட்டியே வாக்களிப்பு இருக்கும்.

  • பொருளாதார தேக்கம் / வேலை வாய்ப்பு

  • தீவிரவாத அச்சுறுத்தல்

  • பணப்புழக்கம்

  • மாநிலங்களில் ரீதியில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்தல்

  • உணவுப் பொருட்கள் விலையுயர்வு/வீழ்ச்சி

  • விவசாயிகளின் பிரச்சனைகள்


இது தவிர தமிழகத்தில் ஈழப்பிரச்சனையும், ஆந்திராவில் தெலுங்கானாவும், மேற்கு வங்கத்தில் தொழில் வளம் சார்ந்த பிரச்சனைகளுமாக மாநிலரீதியிலான பிரச்சனைகளுக்கு மக்கள் கண்டிப்பாக முதலிடம் கொடுப்பார்கள். கூட்டணி அரசு எப்படி செயல்படும் என்பது கடந்த 20 ஆண்டுகளில் மக்கள் தெளிவாக உணர்ந்துள்ளார்கள். தமிழகத்தின் தொழில் வளமும், ஆந்திராவின் பணப்புழக்கமும், பீஹாரின் போக்குவரத்து முன்னேற்றமும், மஹாராஷ்டிராவின் வர்த்தகமும் எந்தளவிற்கு ஆளும் கூட்டணியில் இருந்த்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்.

ஆகவே இந்தமுறை இந்த ரீதியிலான அணுகுமுறையோடு தான் மக்கள் தேர்தலை சந்திப்பார்கள் என்று தோன்றுகிறது.

மறுபதிப்பு பதிவு

Friday, February 13, 2009

இது எப்படி இருக்கு?: "பாஜக-காங். சேர்ந்து அரசமைக்க வேண்டும் ! "

வரவிருக்கும் தேர்தலுக்குப் பின் பாரதிய ஜனதா கட்சியும் அதன் பிரதான எதிரியான காங்கிரசும் இணைந்து அரசமைக்க வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளர் கே.என்.கோவிந்தாசார்யா. அகமதாபாத்தில் பிப்ரவரி 11ம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசும் போது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்

தேர்தலுக்குப் பின் உறுதியற்ற அரசியல் சூழ்நிலை நிலவும், அந்தப் பிரசினையை மூன்றாம் அணி மேலும் சிக்கலாக்கும். இவைதான் மிகவும் கவலைக்குரியவை என அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

"கடந்த முறை காங்கிரஸ் பாஜக இரண்டும் சேர்ந்து நாடாளுமன்றத்தில் 282 இடங்களைப் பெற்றன.இந்தமுறை அவை 252 இடங்களைப் பெறலாம்" என்கிறார் இந்த முன்னாள் பாஜக பிரமுகர்.முக்கியப் பிரசினைகளை முன்னிறுத்தப்படாமல் இந்தத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. அதனால் உள்ளூர் அல்லது மாநில அளவிலான பிரசினைகளே வாக்களிப்பில் ஆதிக்கம் செலுத்தும்

"பாஜக என்பதை ஒரு 'காவி காங்கிரஸ்' ஆகத்தான் பார்க்கிறேன். வரும் நாட்களில் அதிகமான ஊழலும். உறுதியற்ற தனமையும் கொண்ட அரசுகள் அதிகம் உருவாகும் எனவும் எதிர்பார்க்கிறேன்.எனவே காங்கிரசும் பாஜகவும் சேர்ந்து ஆட்சியமைக்குமானால் அது நாட்டிற்கு நல்லது" என்றார் கோவிந்தாச்சார்யா.

"தற்கால அரசியல் மாற்றத்தைச் சந்திக்கும் ஒரு பருவத்தில் இருக்கிறது. நம் முன் உள்ள மாதிரிகளில் ஏற்பட்டுள்ள மாற்ற்றங்களை அடுத்துப் பல மாறுதல்களை எதிர்ப்பார்க்கலாம். 100 ஆண்டுகால அரசியல் சிந்தனைகள் விலகி வழி விடும். வளர்ச்சி, முன்னேற்றம், இதுதான் முக்கியமான பிரசினையாகக் கருதப்படும்". என்றார் அவர்.

அத்வானி, நரேந்திர மோடி இருவரில் யார் சிறந்த பிரதமராக இருக்கக் கூடியவர் என்ற கேள்விக்கு 'அத்வானி தயக்கம் நிறைந்த ஒரு போராளி ' எனப் பதிலளித்த கோவிந்தாச்சார்யா, அத்வானிக்கு வயதாவதால் அவர் அமைதியாக ஓய்வு பெற விரும்புகிறார் ஆனால் அவர் பாஜகவை வழிநடத்துமாறு கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார் என்றார். அத்வானி இப்போது 'ஒரு ஸ்கூட்டர் ஸ்டெப்னி ' போல உணர்கிறார். அதனால்தான் ஸ்கூட்டர் ஓடாமல் நின்றுவிட்டது என்றார்

நன்றி: இந்தோ ஆசியன் நியூஸ் சர்வீஸ் (Indo-Asian News Service)

Thursday, February 12, 2009

அடுத்த பிரதமர் யார்?


நீரஜா செளத்ரி
மக்களவைக்குத் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தால் யார் பிரதமர் என்பதை கட்சித் தலைவர் சோனியா காந்தி குறிப்பாக உணர்த்தியுள்ளார். காங்கிரஸ் ஆதரவு ஏடான "சந்தே'ஷில் தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை மன்மோகன் சிங் சிறப்பாக வழிநடத்திச் செல்வதாகக் கூறி பாராட்டுத் தெரிவித்துள்ளார்

இந்த ஆண்டு (2009) சுதந்திர தினத்தன்று மன்மோகன் சிங் தேசியக் கொடியை ஏற்றி வைப்பாரா என்று சோனியாவிடம் கேட்டதற்கு, ஏன் ஏற்றக்கூடாது? என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டார்

பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சோனியாவுடன் உறவுமுறை சுமுகமாக இருக்கிறதுநேரு-காந்தி குடும்பத்தினரை அனுசரித்துச் செயல்படுகிறார். இதய அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பிறகும் அவரது உடல் நிலை சீராக இருக்கிறது. தன்னால் எந்தப் பிரச்னையும் வராது என்ற எண்ணத்தை அவர் சோனியாவிடம் ஏற்படுத்தியுள்ளார்

எனவே, அவர் பிரதமருக்கான பந்தயத்தில் முதலில் நிற்கிறார். கட்சியினரும் அவரை ஏற்றுக்கொள்ளக்கூடும். இதன் மூலம் முதல் தடையை அவர் தாண்டிவிட்டார். ஆனால், தேர்தலில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியமைப்பதற்குத் தேவையான 272 இடங்களைப் பிடிப்பதற்கு அவரால் முடியுமா என்ற கேள்வி எழுகிறது இதை எப்படி அவர் சமாளிக்கப் போகிறார்?

வரும் பொதுத் தேர்தலில் எந்த அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தேர்தலில் அதிக இடங்களை வென்ற தனிப் பெருங்கட்சியாக காங்கிரஸ் இருந்தால், ஆட் சியமைப்பதற்கு இடதுசாரிக் கட்சிகளின் உதவியை காங்கிரஸ் நாடலாம். காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளுக்கு 2004-ம் ஆண்டு தேர்தலில் கிடைத்த வெற்றி தொடருமா என்பது சந்தேகமே

பிரதமர் மன்மோகன் சிங், "பைபாஸ்' அறுவைச் சிகிச்சை செய்து கொண்டவுடன் அவர் பூரண உடல்நலம் பெற வாழ்த்தி முதல் பூச்செண்டு கொடுத்தது மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர் பிரகாஷ் காரத்

பிரணாப் முகர்ஜி மேற்கு வங்க மாநில பிரதேச காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு அவரை மார்க்சிஸ்ட் கட்சியினர் சுற்றிச்சுற்றி வருகின்றனர். மன்மோகன் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தபோது இடதுசாரிக் கட்சியினருக்கும் காங்கிரஸக்கும் கருத்து வேறுபாடு இருந்தது. ஆனால், மக்களவைத் தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கட்சியுடன் இடதுசாரிக் கட்சிகள் மீண்டும் நெருக்கம் ஏற்படுத்திக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது

மத்தியில் மீண்டும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி மலரும் வாய்ப்பு ஏற்பட்டு, அதை இடதுசாரிகள் ஆதரிக்க முன்வந்தாலும் ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது. அதாவது, யாரை பிரதமராகத் தேர்ந்தெடுப்பது என்பது குறித்து தங்களிடம் ஆலோசனை கலக்க வேண்டும் என்று இடதுசாரிகள் நிபந்தனை விதிக்கக் கூடும்

2004-ம் ஆண்டு தேர்தலின்போது நாடாளுமன்றக் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதை காங்கிரஸ் கட்சியின் முடிவுக்கே விட்டு விட்டு ஒதுங்கிக்கொண்டனர் இடதுசாரிகள். ஆனால், இந்த முறை அப்படிச் சொல்ல முடியாது. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தை வலியுறுத்தும்போது
பிரதமர் யார் என்பதையும் வலியுறுத்தக்கூடும்

எனினும், மன்மோகன் மீண்டும் பிரதமராவதை இடதுசாரிகள் விரும்பாவிட்டால் அல்லது காங்கிரஸ் குறிப்பிடும் சிலரின் பெயரை அவர்கள் ஏற்காவிட்டால் என்ன செய்வது? அதற்காகத்தான் ஒருவரை சந்தடியில்லாமல் தயார்படுத்தி வருகிறது காங்கிரஸ் தலைமை. அவர்தான் சுஷில் குமார் ஷிண்டே. அசாதாரண சூழ்நிலையில் மற்ற காங்கிரஸ் தலைவர்களைவிட சுஷில் குமார் ஷிண்டே பெயரை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது

பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்குக்கு அடுத்தபடியாக களத்தில் நிற்பவர் பிரணாப் முகர்ஜிதான். அவரை இடதுசாரிகளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள இதர கட்சியின் தலைவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடும்.
பிரதமர் இல்லாத சமயங்களில் அவர் பிரதமரின் பொறுப்புகளை திறம்பட வகித்து வந்துள்ளார்

பல்வேறு அமைச்சரவைக் கூட்டங்களுக்கு அவர் தலைமை வகித்துள்ளார். அரசுக்கும் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டபோதெல்லாம், தனது திறமையான பேச்சால் நிலைமையைச் சமாளித்துள்ளார்

மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது புலனாய்வு அமைப்புகள் சரிவரச் செயல்படத் தவறிவிட்டதாக பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்தனஇதனால், ஆளுங்கட்சிக்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், வெளியுறவுத் துறை அமைச்சரான பிரணாப் முகர்ஜி, இந்தத் தாக்குதலில் பாகிஸ்தானுக்குத் தொடர்பு இருப்பதாக அழுத்தம் திருத்தமாகக் கூறி நிலைமையைச் சமாளித்தார்

இதைத் தொடர்ந்து நடைபெற்ற 6 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கி ரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சியைப் பிடிக்க உதவியது. அண்மையில் பிரதமர் மன்மோகன் சிங் பைபாஸ் அறுவைச் சிகிச்சை செய்து கொண்டபோது கூட, நிர்வாகத்தை கவனித்துக் கொள்ளுமாறு அவரை சோனியா கேட்டுக் கொண்டார்

பிரணாப் சிறந்த ராஜதந்திரி, கட்சியையும் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் திறன்பெற்றவர் என்பதெல்லாம் உண்மைதான். ஆனால், அவரை நம்புவதற்கு காங்கிரஸ் மேலிடமோ, சோனியா காந்தியோ தயாராக இல்லை
மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை இடதுசாரிகள் பிரதமராக ஏற்கமாட்டார்கள். சிவராஜ் பாட்டீல், சோனியா காந்திக்கு மிக நெருக்கமாக இருந்தவர் என்றாலும் உள்துறை அமைச்சர் பதவியிலிருந்தபோது அவர் சரிவர செயல்படவில்லை என்ற குற்றச் சாட்டிலிருந்து இன்னும் அவர் மீளவில்லை

மேலும் பிரதமர் பதவிக்கு போட்டியிட அவர் திட்டமிடுவதாகத் தெரியவில்லை.பாதுகாப்புத் துறை அமைச்சரான ஏ.கே.அந்தோனி, நல்லவர் மட்டுமல்ல; சோனியாவுக்கு வேண்டிய நபர்தான். ஆனால், எதிலும் எச்ச ரிக்கையுடன் செயல்படும் சோனியா காந்தி, "ஒரு கிறிஸ்துவரை பிரதமராக்க முயல்கிறார்' என்ற குற்றச்சாட்டு எழுவதை விரும்பமாட்டார்.

இது ஒருபுறம் இருந்தாலும், மத்திய மின் துறை அமைச்சராக உள்ள சுஷில் குமார் ஷிண்டேவுக்கு சில சிறப்பு அம்சங்கள் உள்ளன. முதலில் அவர் நேரு குடும்பத்துக்கு நெருக்கமானவர். சோனியாவுக்கு நம்பிக்கையானவர். இவையெல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஒரு தலித்

2007-ம் ஆண்டு குடியரசுத் தலைவர் பதவிக்கு யாரை முன்னிறுத்துவது என்ற பேச்சு எழுந்தபோது ஷிண்டேயின் பெயர் அடிபட்டது. ஆனால், அப்போது மாயாவதி மற்றொரு தலித் அதிகாரப் பதவிக்கு வருவதை விரும்பவில்லை. இதனால், அந்த முயற்சி கைவிடப்பட்டது. சுஷில் குமார் ஷிண்டேயை பிரதமராக்க விரும்பினால் பல்வேறு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடும்

சென்ற ஆண்டு, அடுத்த பிரதமர் தலித்தாக இருக்க வேண்டும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் எழுந்தபோது, மாயாவதியின் பெயரை இடதுசாரிகள் ஆதரித்தனர். வரும் தேர்தலில் மாயாவதி பிரதமர் ஆக முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், தலித் வகுப்பைச் சேர்ந்த ஷிண்டேயை காங்கிரஸ் பிரதமராக்க முயன்றால் அதை இடதுசாரிகள் ஏற்கக்கூடும்

ராம்விலாஸ் பாஸ்வானின் பரம எதிரியான லாலு பிரசாத் யாதவ், ஷிண்டே பிரதமராவதை ஆதரிக்கக் கூடும். 1970-களில் சுஷில் குமார் ஷிண்டேயை முதன் முதலாக அரசியலுக்கு அறிமுகப்படுத்தியவர் சரத் பவார்தான் (அப்போது ஷிண்டே காவல் உதவி ஆய்வா ளராகப் பணியாற்றிவந்தார்)

ராகுல் காந்திக்கு பிரதமர் பதவி மீது ஆசையில்லை, மன்மோகன்தான் அடுத்த பிரதமர் என்று கட்சித் தலைவர் சோனியா காந்தி கூறி வந்தாலும் ராகுல் பிரதமராக வாய்ப்பு இல்லை என்று கூறிவிட முடியாது

தேர்தலில் காங்கிரஸ் கட்சி 180 இடங்க ளுக்கு மேல் வெற்றிபெற்று, கட்சிக்குள் நிர்பந்தம் ஏற்பட்டால் ராகுல் பிரதமராகக் கூடும்தற்போதைய அரசியல் சூழ்நிலையில் எப்படியும் 150-லிருந்து 155 இடங்களில் வென்று
விடலாம் என்று காங்கிரஸ் கணக்குப் போடுகிறது

பிரதமர் பதவிப் போட்டியாளராக சரத் பவார் பெயரும் அடிபடுகிறது. அவரைப் பிர தமராக்க வேண்டும் என்று தேசியவாத காங் கிரஸ் கட்சியினர் கூறிவருகின்றனர். சரத் பவார், சோனியா காந்தியின் நம்பிக்கைக்குரியவர் அல்ல

மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் தவிர்த்த பிராந்தியக் கட்சிகள் அதிக இடங் களை வென்றாலோ அல்லது தேசிய வாத காங்கிரஸ் கட்சி 25 இடங்களைப் பிடித்தாலோ, சுயேச்சை எம்.பி.க்கள் சரத் பவாரை ஆதரிக்க முன்வந்தாலோ அவர் பிரதமராவதை காங்கிரஸ் ஆதரிக்கக் கூடும்

இதேபோல மாயாவதி, ஜெயலலிதா, முலாயம்சிங் ஆகியோரும் தேர்தல் வெற்றியைப் பொருத்து பிரதமர் ஆக முயற்சிக்கக் கூடும்

தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொருத்தவரை, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிதான் பிரதமர் வேட்பாளர். இதில் எந்த மாற்றமும் இல்லை. தேர்தலில் அதிக இடங்களில் வென்ற தனிப் பெருங் கட்சியாக பாஜக இருந்தால் கூட்டணிக் கட்சிகளும் கணிசமான இடங்களைப் பெற்றால் அத்வானி பிரதமராவதில் எந்தப் பிரச்னையும் இருக்காது. இப்போது இடதுசாரி பக்கம் உள்ள ஜெயலலிதா, மம்தா பானர்ஜி, சந்திர பாபு நாயுடு, ஏன் மாயாவதிகூட அணி மாறி அவரை ஆதரிக்கக் கூடும்

இறுதியாகச் சொல்ல வேண்டுமானால், தேர்தலில் கூட்டணிக் கட்சிகள் வெற்றியைப் பொருத்துதான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும். தேர்தலுக்குப் பின் அரசியல் கட்சிகள் அணிமாறும் வாய்ப்பு உள்ளதால், யார் எத்தனை இடங்களில் ஜெயிக்கிறார்கள் என்பதை வைத்துத்தான் பிரதமர் யார் என்பது முடிவு செய்யப்படும்!

நன்றி: தினமணி (12.2.2009)

Wednesday, February 11, 2009

இத்தாலியும் இந்தியாவும் - ஒற்றுமைகள்

பாஸ்டன் பாலா

இத்தாலியின் சோனியா இந்தியாவின் காங்கிரஸ் தலைவி என்பதைத் தாண்டி
  • ஒரு முக்கிய தலைவர் இருந்தாலும், பல கட்சி அரசியல்
  • ஆளுங்கட்சி கூட்டணியில் எப்போதும் இடம்பிடிக்கும் அரசியல்வாதிகள்; கம்யூனிஸ்ட்
  • நிலையற்ற நடுவண் அரசு; எப்போது கவிழும், எப்பொழுது நம்பிக்கை வாக்கெடுப்பு வெற்றி பெறும் என்று தெரியாது
  • அவசர நிலை (எமர்ஜென்சி) போல் தன்னிச்சையாக அரியாசனம் அமர்வது
  • முக்கிய தலைவர்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவது; நீண்ட கால மாஃபியா தொடர்பு
  • பல்கிப் பெருகி எங்கும் வியாபித்த ஊழல் + லஞ்சம்; குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் பாதகமில்லாத பொதுசேவை வாழ்க்கை
  • எல்லா அணியினரையும் திருப்தி செய்ய பல் அடுக்கு அமைச்சரவை
  • அரசின் கைப்பாவையாக செயல்படும் ஊடகம்
என்று நிறைய சொல்லலாம்.

இடாலி குறித்து நன்கறிந்த நண்பர் அனுப்பிய மடலில் இருந்து:

இத்தலி ஒரு அவியல்.

அதுவும் இந்தியா மாதிரி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஆனால் முன்பே பண்பாட்டால் பலவிதமாக இணைந்திருந்த ஒரு நாடு. அது சாம்ராஜ்யத்தின் தலைமையாகவும், காலனி போலவும் இருந்த ஒரு அமைப்பு. பின்பு உலக யுத்தங்களிலும், ஃப்ரெஞ்சு எதிர் இதர யூரோப்பியப் போர்களிலும் இடையில் சிக்கித் திண்டாடிய ஒரு நாடு.

இன்னும் பல வகை மொழிகள் புழங்குவதால் மொழி இணைப்பு முற்றிலும் ஏற்படாத ஒரு நாடு. ஹிந்தி இந்தியாவில் பரவலாகப் புழங்கு மொழியாக இருந்தாலும் பல மாநிலங்களில் அது ஏற்கப்படாது இருக்கும் நிலை உள்ளது போன்ற ஒரு சிக்கல் இத்தாலிய மொழிக்கு இல்லை என்றாலும், போட்டி மொழிகள் நிறையவே உள்ளன. ஜெர்மன், ஃப்ரெஞ்ச், ஸ்லொவீன், போன்ற இதர யூரோப்பிய மொழிகளோடு பல குறுமொழிகள் அல்லது பிராந்திய / மாநில மொழிகளும் உள்ளன.

உதாரணமாக சிஸிலிய மொழி, ஆர்பொரீஷே, மேலும் லொம்பார்ட் ஆகிய சிறுபான்மையினரின் மொழிகளும் உள்ளன. இன்னும் கிட்டே நெருங்கிப் போகப் போக இத்தலிக்குள் எத்தனை ஒருங்கிணையாத சிறுபான்மையினர் உள்ளனர் என்பது தெரிய வரும்.

இத்தோடு அங்கு ஜனன-மரணக் கணக்கை தொகுத்தால் நிகரம் இழப்புதான். அதாவது ஜனத்தொகை வருடாவருடம் குறைகிறது. இதைப் புலம்பெயர்ந்தோர் அல்லது குடிபெயர்ந்து வருவார் மூலம் இத்தலி ஈடுகட்டுகிறது என்றாலும் வருபவர் அனேகமாக அரபியர் அல்லது ஆப்பிரிக்கராகத்தான் இருக்கிறார்கள். ஓரளவு அல்பேனியர் வந்து கொண்டிருந்தனர்,

இப்போது அவர்களுக்கு முன்னாள் யூகோஸ்லாவியாவின் சிதிலங்களான கோசவோ, மாசிடோனியா ஆகிய பகுதிகளிலும், ஓரளவு ரஷ்யாவின் எல்லை மாநிலங்களிலும் இடம் கிடைக்கிறது அதனால் அவ்வளவு இத்தலிக்குக் குடி வருவதில்லை.

உள்வருபவர்கள் இத்தலியின் பெருநகரங்களுக்கே போய்ச் சேருகிறார், எனவே இன்னும் கிராமப்புறங்களில் ஜனத்தொகை குறைந்து கொண்டே போகிறது. இத்தலியின் பொருளாதாரத்தில் ஏதோ 2% போலத்தான் விவசாயத்தை நம்பி இருக்கிறது. சிஐஏ தகவல் பக்கத்தில் காண்பதை வைத்துப் பார்த்தால் விவசாயம் எத்தனை சிறியது பாருங்கள். சர்வீஸஸ் என்று குறிப்பது சுமார் 71 சதவீதம் என்று சொல்கிறது இது.

நம்பவே முடியவில்லை.

யாருக்கு சேவை செய்கிறார்கள் முக்கால் பாக மக்கள்? எதைக் கொடுத்து எதை வாங்கி?

யூரோப்பில் இருந்து இறக்குமதி செய்து இங்கிருந்து எதையெல்லாமோ ஏற்றுமதி செய்து பிழைக்கிறார்கள் போல் இருக்கிறது. உல்லாசப் பயணிகள் கணிசமான பகுதி பொருளாதாரத்தைப் பாதிக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

உதவி / ஆதாரம்:

1. BBC NEWS | Europe | Country profiles | Country profile: Italy

2. CIA - The World Factbook -- Italy

3. Italy - Wikipedia, the free encyclopedia

இந்தியத் தேர்தல் வரப்போகும் இந்த சமயத்தில், 2008ன் இந்த மேற்கோள் இந்தியாவுக்கும் பொருந்துகிறது:
"There is an alarming distance separating the Italian political world and the economic reality in the rest of the country."