Monday, February 16, 2009

9ல் என்ன ரகசியம்?

வேர் இஸ் தி பார்ட்டி-அதிமுக-2 18/2/09


தமிழகத்தில் அதிமுக முந்துகிறது ?

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் எப்படி வாக்களிக்கப்போகிறது என்பதை இந்தியா உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கிறது. ஏனெனில் தமிழகம் + புதுச்சேரியில் உள்ள 40 இடங்கள்

அடுத்து அரசு அமைக்கப் போவது யார் என்பதைத் தீர்மானிப்பதில் என்றுமே முக்கியப் பங்கு வகிக்கும்.
2004 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியதே தேசிய ஜனநாயக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர முக்கியக் காரணமாக அமைந்தது.

இந்த முறை வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பதில் திமுக அதிமுகவை விட சிறு கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை சி.என்.என் ஐபிஎன் கணிப்புக் காட்டுகிறது

திமுகவும் அதிமுகவும் சமமான நிலையில் இருக்கின்றன. 28 சதவீதம் பேர் திமுகவிற்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். அதிம்கவிற்கும் அதே அளவுப் பேர் அதாவது 28 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளார்கள். மீதமுள்ள 44 சதவீத வாக்குகள் மற்ற கட்சிகளிடையே பிரிந்து போகும் என்கிறது அந்தக் கருத்துக் கணிப்பு

விஜயகாந்தின் தேமுதிக பெரிய சக்தியாக வளர்ந்து விடவில்லை. ஆனால் ஓட்டுகள் பிரியஅவர்கள்
காரணமாக இருப்பார்கள்

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலோடு ஓப்பிடுகையில் அதிமுகவின் பலம் கூடியிருக்கிறது. அந்தக் கோணத்தில் பார்த்தால் அதிமுக, திமுகவை முந்துகிறது
.


வேர் இஸ் தி பார்ட்டி- அதிமுக-1

9ல் என்ன ரகசியம்

அதிமுக ஏற்கனவே தமிழக முழுவதும் பூத் கமிட்டிகளை அமைத்து அதன் பட்டியலை தயாரித்து வருகிறது.

40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏற்கனவே கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா பொறுப்பாளர்களை நியமித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 9 பேர் கொண்ட குழு, ஒன்றிய அளவில் 9 பேர் கொண்ட குழு, நகர குழு, சட்டமன்ற தொகுதிக்குழு என தலா 9 பேர், இது தவிர வாக்குச்சாவடிக்கு 27 பேர் கொண்ட குழு ஆகியவற்றை அமைத்து, தேர்தல் பணிகளை ஜெயலலிதா முடுக்கிவிட்டுள்ளார்.

கூட்டணி குறித்தும் அதிமுக தரப்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சு நடத்தி முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன், எந்தெந்த கட்சியுடன் கூட்டணி, அந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கீடு என்ற விவரம் உடனடியாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

1 comment:

குப்பன்.யாஹூ said...

வடிவேலு சொல்ற மாதிரி ஒபெநிங் எல்லாம் கோர்றேச்டா இருக்கு, ஆனால் அம்மா கட்சியில இந்த வேகம் தேர்தல் முடிவு வரை இருக்கனுமே.

திருமங்கலத்துக்கும் ஒபெநிங் எல்லாம் சூபெராதன் இருந்துச்சு.

இதுல அம்மா நேத்து கல்யாண வீட்ல பேசின பேச்சு செம காமெடி.(பன்னீர்செல்வம், ஜெயகுமார் வீட்டு கல்யாணம்).

அதுல சொல்லி இருக்காங்க உடனே பதவி பெறனும்னா அழகிரி, கனிமொழி யாதான் பொறக்கனுமாம. அப்போ தினகரன், திவாகரன் எல்லாம் எத்தனை வருஷம் கட்சிக்கு உழைச்சாங்க . நேராக எம் பீ பதவி பெற வில்லையா?

குப்பன்_யாஹூ